பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 ஒலியியல்‌ உரு

652 ஒலியியல் உரு காற்றுத் தாரை (air jet) வெளிப்படும்போது (மிதிவண்டியின் சக்கரக் காற்றைத் திறந்து விடும் உண்டாகும் சீறொலி (hiss) குறிப்பிலா இரைச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அதிர்வெண் அலகான ஒரு ஹெர்ட்ஸ் அகலமுள்ள அதிர்வெண் பட்டையில் (frequency band) வெளியிடப்பட்ட செறிவில் இத்தகைய இரைச்சலின் அளவு வழக்க மாகக் குறிப்பிடப்படுகிறது. அதிர்வெண் சார்ந்த ஒரே சீரான பகிர்வு கொண்ட செறிவைக் குறிப்பிலா இரைச்சல் பெற்றால். அது ஒரு ஹெர்ட்ஸுக்கும் மிகுந்த அகலமுள்ள திர்வெண்பட்டையில் உள்ள செறிவாகக் கொள்ளப்படுகிறது. பெரும் பாலான அதிர்வெண் நெடுக்கம், 63 ஹெர்ட்ஸ் மைய அதிர்வெண் கொண்ட கீழ்ப்பட்டை பெற்ற எட்டு எண்ம அதிர்வெண்பட்டைகளால் (octave frequency) ஆகியிருக்கலாம். அனைத்து அதிர்வெண் பட்டைகளிலும் உள்ள தனித்தனிச் செறிவு களின் கூட்டுத்தொகையே ஒரு குறிப்பிலா இரைச் சலின் மொத்தச் செறிவாகும். ஒலியியல் இரைச்சல் இயற்பியல் வழியாகக் குறிப்பிடப்படுவதைவிட உரப்புப் போன்ற மனத் தால் நேரடியாக உணரப்படுகிற அளவாக மாற்றப் பட்டுக் கையாளப்படுவது பயனுள்ளதாகும். எனவே உரப்பை எந்த அலகால் அளவிடலாமோ அதே அலகால் இதையும் அளவிடலாம். 1000 ஹெர்ட்ஸ் அதிர்வெண்கொண்ட செந்தர மூலம் (standard source) ஒன்றை ஒலிக்கச் செய்து, அதன் உரப்பு அளவிடவேண்டிய இரைச்சலின் உரப்புக்குச் சம மாகும் வரை ஓர் ஒத்திசைவியால் (resonator) சரிப் படுத்தலாம். இதிலிருந்து, செந்தர மூலத்தின் செறிவு மட்டம் (intensity level) வாயிலாக இரைச்சலின் மட்டங்களை உரப்பைப் பெறலாம். இரைச்சல் அளவிட ஃபோன் (phon) என்னும் அலகு பயன்படு கிறது. ஏதேனும் ஓர் இடத்தில் உள்ள எஞ்சிய இரைச் சலே சூழ் இரைச்சல் எனப்படும். இது அனைத்து இரைச்சல்களின் கூட்டுத் தொகையாகும். ஓர் அலு வலகத்தில் இருக்கும் சூழ் இரைச்சல், காற்றோட்டம் உண்டாக்கும் கருவிகள், தொலை தூர உரையாடல் கள், அலுவலகப் பொறிகள் போன்றவற்றின் விளை வாகும். குறிப்பிட்ட நெடுக்கத்தில் இருக்கும் ஒவ் வொர் அதிர்வெண்ணிலும் அமையும் ஒரு ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட பட்டையில் ஒரே செறிவு வாய்ந்த குறிப்பிலா இரைச்சலே வெண்மை இரைச்சல் எனப் படும். பெரும்பாலான குறிப்பிலா ஒலியியல் இரைச்சல் கள், அதிர்வெண் சார்ந்த, நிலையான சீரில்லாப் பகிர்வு கொண்ட செறிவைப் பெற முற்படுகின்றன. . வழக்கமாக வேலை, தூக்கம், பொழுதுபோக்கு ஆகியவற்றை இரைச்சல் தாக்குகிறது. சில சமயங் களில் அலுப்பு, மனச்சோர்வு, எரிச்சல், தலைவலி போன்றவற்றையும் உண்டாக்கக்கூடும். நிலையில்லா அல்லது நிலையான செவிட்டுத்தன்மை போன்ற கேடுறும் விளைவுகளைச்செறிவு மிகுந்த இரைச்சல் உண்டாக்கலாம். தொழிலாளிகளின் வே லை செய்யும் திறனை இரைச்சல் பெரிதும் குறைக்கிறது. இரைச் சல் மலிந்த சுற்றுப்புறச் சூழலில் வாழ்வோர் சிறு தவறுகள் புரிய நேரிடும். சிறுவர்கள் குழந்தைகளின் வளர்ச்சியைக்கூட இது தாக்கக்கூடும். சராசரி வளிமண்டல அழுத்தத்தைச் சார்ந்து, காற்றழுத்தத்தில் உண்டாகும் மாறுபாடுகளின் காரணமாகவே காற்றுச் சுமந்த இரைச்சல் தோன்று, கிறது. மீட்சியுறு பொருள்களில் உண்டாகும் அதிர்வு களின் காரணமாகக் கட்டிட அமைப்புச் சுமந்த இரைச்சல் உண்டாகிறது. எந்திரங்களால் ஏற்படும் இரைச்சலைத் தவிர்க்க இயலாதபோது ஒலி உட்கவர் பொருள்களால் செய்யப்பட்ட திரைகளை அவற்றின் அருகே தொங்கவிட்டு இரைச்சலைக் குறைக்கலாம். தட்டச்சுப் பொறிகளை ஏற்ற ஒலி உறிஞ்சும் அட்டை கள் மேல் வைத்து தேவையற்ற இரைச்சலைத் தவிர்க் கலாம். காலடி ஓசைகளைத் தேங்காய் நார் போன்ற பொருள்களால் ஆன விரிப்புகளைத் தரையில் அமைத் துக் குறைக்கலாம். வாயில்களும் சன்னல் கதவுகளும் காற்றினால் அசைவதால் ஏற்படும் இரைச்சலை, ரப்பர் அட்டை வைத்தோ காற்றடைத்த குழாய்க் கருவிகளைப் பொருத்தியோ தவிர்க்கலாம். மரத்தூள், அட்டைப்பலகை அல்லது தக்கைப் பொருள் போன்றவற்றால் நுண்துளைகள் அமைந்த குறைவான மீட்சிமாறிலி மதிப்புக் கொண்ட பொருள் கள் பொருத்தப்பட்ட சுவர்களைக் கொண்டு வானொலிப் பரப்பு அரங்குகள் ஒலிபுகா வண்ணம் காக்கப்படுகின்றன. சுவர், தரை, தூலம் போன்ற கட்டடத்தின் அமைப்பிலிருந்து வரக்கூடிய இரைச்சலைத்தான் கட்டட அமைப்புச் சுமந்த இரைச்சல் என்பர். எந்திரங் களை நேரடியாகத் தரையில் அல்லது கட்டடத்தின் மற்ற அமைப்புகளில் பதிக்காமல், ஒலி உட்கவர் பொருள்களின் மேல் வைத்து இயக்கினால் இவ் வகையான இரைச்சல் குறைந்துவிடக் கூடும். யலாதபோது அறைகளின் வெளிப்புறச் சுவர்களை மிகு பருமனாகக் கட்டிவிட்டால் போதிய காப்புக் கிட்டும். இல்லையேல் சுவரை வெவ்வேறு வகையான பொருள்களால் அடுக்குகளாக அமைத்துக் கட்டலாம். காற்று அல்லது வைக்கோல் திணிக்கப்பட்ட இடை வெளிகொண்ட இரட்டைச் செங்கல் சுவரால் பயனுள்ள காப்பைப் பெறலாம். ஒலியியல் உரு த.பஞ்சாட்சரம் ஒரு நீண்ட எதிரொலிக்கும் தளத்தின் முன் ஒரு புள்ளி ஒலி மூலம் வைக்கப்பட்டால். தளத்தின்