பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலியியல்‌ மின்‌ விளைவு 657

மின் ஒலி ஆற்றல் மாற்றிகள். மின்னாற்றலைப் பயன்படுத்தும் ஒலித் தோற்றுவாயைத் திரும்பப் பெற முடியாதது. திரும்பப் பெறக் கூடியது இருவகைப்படுத்தலாம். முதல்வகைத் தோற்று வாயில் ஒலிக் கதிர்வீச்சிற்கு, அழுத்தத்திற்கு உட் படுத்தப்பட்ட ஒரு பாய் பொருளிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. அதை மாற்றவும், கட்டுப்படுத்தவும் மின்னாற்றல் பயன்படுகிறது. சான்றாக மாறுகாந்தப் புலம் ஒரு தண்டு அல்லது ஓர் இடைத்திரையில் அதிர்வுகளை ஏற்படுத்தும். அவ்வதிர்வுகள் ஒரு குறுகிய துளையின் ஊடே செல்லும் அழுத் தப்பட்ட காற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத் தும். அத்தகைய கருவி செயல்திறன் மிகுந்த ஒலி அலைகளை ஏற்படுத்தும். இரண்டாம் யில் மின்னாற்றல் எந்திர ஆற்றலாக நேரடியாக வெளிப்படு மாற்றப்பட்டுப் பின் ஒலி ஆற்றலாக கிறது. இத்தகைய தோற்றுவாயைப் பின்னோக்கி யாகவும் பயன்படுத்தலாம். அதாவது ஒலி ஆற்றலைக் கொண்டு மின்னாற்றலைப் பெறலாம்.எனவே, அக்கருவிகளை ஒலி ஏற்பிகளாகப் பயன்படுத்தலாம். வகை மின் ஒலி ஆற்றல் மாற்றியின் பண்புகள் வெளியீட்டுத்திறன். வெளியீட்டு அளவிற்கும் எண்ணிக்கை உள்ளீட்டு அளவிற்கும் உள்ள தகவு. மிகுந்து இருக்கவேண்டும். திசைச் சார்புக் காரணி. இது, திசையை ஒட்டிக் கதிர்வீச்சின் செறிவு மாறுவதைக் குறிப்பது. எல்லாத் திசைகளிலும் இக்காரணி ஒரே மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். வெளியீட்டுக்கதிர்வீச்சு நேர் பண்பு. இது. உள்ளீட்டு மின்புலத்திற்கோ உள்ளீட்டு மின்னழுத் நேர்விகிதத்திலிருப்பது. தத்திற்கோ இல்லையெனில் வெளியீட்டுக் சிதறலிருக்கும். அவ்வாறு கதிர்வீச்சில் ஒலிவாங்கி. இக்கருவி ஒலி அதிர்வுகளை அதற் கேற்பக் கேள் அதிர்வு மின் அலைகளாக மாற்று வதற்குப் பயன்படுகிறது. பின்னர் இம்மின் அலைகள் பண்பு மாறாமல் மிகைப்படுத்தப்பட்டுப் பயன்படுத் தொலைபேசி, தப்படும். இத்தகைய ஒலிவாங்கி வானொலி, ஒளியியல் மூலம் நாடாப்பதிவு செய்தல் போன்றவற்றில் பயன்படுகிறது. ஒலிவாங்கிகளை அழுத்த ஒலிவாங்கி அழுத்தச் சரிவு ஒலிவாங்கி என பிரிக்கலாம். முதற் பிரிவில் இருவகையாகப் கார்பன் ஒலிவாங்கி, வெப்பக் கம்பி ஒலிவாங்கி, மின்தேக்கி ஒலிவாங்கி, அசையும் சுருள் மின்னியக்க ஒலிவாங்கி, படிக ஒலிவாங்கி ஆகியவை அடங்கும். இரண்டாம் வகையில் நாடா ஒலிவாங்கி உள்ளது. ஓர் உயர்ந்த ஒலிவாங்கி உணர்வு நுட்பமிகுதி, கேள் அதிர்வு எல்லை முழுதும் சீரான ஏற்புத்திறன், தன் இரைச்சல் இல்லாமை ஆகிய பண்புகளைப் பெற்று இருக்கும். ஒலியியல் மின் விளைவு 657 கார்பன் ஒலிவாங்கி. இரு மெல்லிய பளபளப்பான ணையான கார்பன் தகடுகளுக்கிடையே கார்பன் துகள்கள் அழுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு தகடு ஓர் இடைத்திரையின் மையத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. மேலும் தகடுகளின் முனைகள் ஒரு மின்கலம், மின்மாற்றி கொண்ட ஒரு தொடர் மின் சுற்றில் உள்ளன. ஒலி அதிர்வுகளால் ஏற்படும் காற்று அழுத்த மாற்றங்கள் இடைத்திரையை அசையச் செய்கின்றன. இதனால் கார்பன் துகள் களின் நெருக்கம் ஒலிக்கேற்ப மாறுபட்டு அது மின் சுற்றிற்கு வழங்கும் மின்தடையிலும் மாற்றம் ஏற் படுகிறது. எனவே, மின்சுற்றில் செல்லும் மின் னோட்டம் ஒலிக்கு ஏற்ப மாறுபாடு அடைகிறது. இந்த ஒலிவாங்கியின் அதிர்வு எண்ணிற்கேற்ப ஏற்புத்தன்மை, மின்கலத்தின் மின்னழுத்தம் இடைத் திரையின் பரப்பு இவற்றிற்கு நேர்விகிதத்திலும் இடைத்திரையின் விரைப்பு மின்சுற்றின் மின்தடை இவற்றிற்கு எதிர் விகிதத்திலும் உள்ளது. ஆனால் மின்கலத்தின் மின்னழுத்தம் ஓரளவிற்குமேல் மிகுந் தால் தன்னிரைச்சலும் மிகும். உணர்வு நுட்பத்தை உயர்த்தக் கார்பன் துகள் அமைப்பை இடைத் திரையின் இரு புறமும் இருக்கச் ஆனால் தன்னிரைச்சல் மிகுதியாகும். செய்யலாம். மின்தேக்கி ஒலிவாங்கி. ஓர் இணைத்தட்டு மின் தேக்கியின் மின்தேக்கு திறன் தட்டுகளுக்கு இடையே யுள்ள தொலைவு மாற்றத்தால் வேறுபடுகிறது. இந்த அடிப்படையில் அமைவது மின் தேக்கி ஒலி வாங்கியாகும். மின்தேக்கியின் ஒரு தட்டு ஓர் இடைத் திரையுடன் ணைக்கப்பட்டுள்ளது. தட்டுகளுக் கிடையேயுள்ள இடைவெளி இயல்பாக மிகக் குறை வாக இருக்கும். ஒலி அலையால் இடைத்திரை அதிர்வடையும்போது மின்தேக்கியின் காற்று இடை வெளி மாறுபட்டு மின்தேக்கு திறன் மாறுபடுகிறது. எனவே, மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ள மின் சுற்றில் மின்னோட்டம் ஒலிக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதைப் பண்பு மாறாமல் மிகைப்படுத்திப் பயன் படுத்தலாம். இந்த ஒலிவாங்கி 10,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் வரை சீராக இயங்குகிறது. தன் னிரைச்சல் மிகக் குறைவு; திசையை ஒட்டிய ஏற்புப் பண்பு மிகுதி; இவ்வமைப்பில் மிக உயர்ந்த உள் மின்தடை உள்ளது. அசையும் சுருள் மின்னியக்க ஒலிவாங்கி, மின் னோட்டம் தாங்கிய கம்பிச்சுருள் காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது ஒரு விசைக்கு உள்ளாகிறது. மாறாக, காந்தப் புலத்தில் மின்கடத்தும் கம்பிச்சுருள் ஒன்று அசையும்போது மூடிய சுற்றில் மின்னோட்டம் ஏற்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே வ்வகை ஒலிவாங்கியாகும். ஓர் அட்டைக் குழாயில் சுற்றப்பட்ட கம்பிக்சுருள் ஓர் இடைத்திரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும்