660 ஒலிவாங்கி
660 ஒலிவாங்கி காலத்தில் அல்லது மிகுந்த உயரத்தில் பறக்கும்போது மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அந்நிலையில் நிலத்திற்கு வருவதற்குள் அவ்வொலியின் குறைந்துவிடும். ஒலிவாங்கி வன்மை கொ.சு. மகாதேவன் இது ஒலி ஆற்றலை ஒத்த அலைப்பண்புகள் கொண்ட மின் ஆற்றலாக மாற்றப் பயன்படும் கருவியாகும். அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லால் 1876இல், அமைக்கப்பட்ட மின்காந்தத் தொலைபேசிச் செலுத்தி இத்தகைய கருவியாகும். மெல்லிய ஓசை களை மிகைப்படுத்தும் உணர்வால் இக்கருவி நுட்ப ஒலி வாங்கி (mic:ophone)எனும் பெயரைப் பெற்றது. தொலைபேசிச் செலுத்திகளில் பல வகை ஒலி வாங்கிகள் பயன்பட்டபோதும், ஒலிவாங்கி எனும் சொல் அதற்கல்லாத பயனீடுகளிலேயே வழங்கப் பட்டு வருகிறது. நீருக்கடியில் வெளிப்படும் ஒலியை வாங்கும் ஒலிவாங்கி, நீரடி ஒலிவாங்கி (hydrophone) எனப்படுகிறது. தொலைபேசிகளைத் தவிர காதுகேள் கருவி. ஒலிப்பதிவுக்கருவி ஆகியவற்றில் ஒலிவாங்கி மிகுதி யாகப் பயன்படுகிறது. ஒலிவாங்கிகளில் படிகவகையே மிகுதியும் பயனாகிறது. காந்தம் முதலிய கருவிகளும் நடைமுறையில் உள்ளன. ஒலிவாங்கிகள் பொது அறிவிப்பு, வகுப்பறை, அரங்கு ஆகியவற்றில் பரவ லாகப் பயன்பட்டு வருகின்றன. இதற்குப் படிக, இயக்க வகைகள் பயன்படுகின்றன. ஒலிவாங்கிகள் செய்திப் போக்குவரத்துக்கும். வானொலி அல்லது கம்பித் தொடர்பு வாயிலாகத் தரமான பதிலளிப் பிற்கும் பயன்படுகின்றன. அவற்றின் முக்கிய பங்கீடு பொது வானொலி, தொலைக்காட்சி, ஒலிப்பதிவு ஒலி அளவைகளில் அமையும். அத்தகைய நோக்கங் களுக்கான ஒலிவாங்கிகளின் தெரிவு, பயனீட்டின் தன்மையைப் பொறுத்து அமையும். நிறைவுபடுத்த வேண்டிய தேவைகள் பின்வருமாறு. 25-15,000 சுற்றுகள் அல்லது அதற்கு மேலும் உள்ள அலை எண்களில் கடினமற்ற ஒருமித்த பதி லளிப்பு, மாறுபட்ட உள்ளளிப்பு அழுத்தங்களில் நேரடி விகிதமுள்ள பதிலளிப்பு, உயர்ந்த அல்லது ஓரளவு உயர்ந்த உணர்திறன் உட்புற ஒலியிலிருந்து விடுதலை, மிகு அளவு வெப்பநிலை எல்லையில் கடுமையாகக் கையாளப்படினும் பண்புகள் உறுதி யாக இருத்தல், நோக்கத்திற்கு ஏற்ற திசைவழிப் பண்புகள், ஒலிப்புலம் செலுத்தலுக்குத் தீமை விளைவிக்காத சிறிய பரிமாணம் ஆகியனவாகும். வகைப்படுத்தல். ஆற்றல் மாற்றிகள் எனப்படும் கருவிகளின் ஒருவகையில் ஒலிவாங்கிகள் அடங்கு கின்றன. ஒன்று அல்லது மேற்பட்ட செலுத்தும் தொகுதி ஊடகங்கள் அலைகளால் இயக்கி வைக்கப் படுகின்றன. ஒலிவாங்கி ஓர் ஒலி -மின்னியல் ஆற்றல் மாற்றியாகும். ஒலிவாங்கிகள் பலமுறைகளில் வகைப் படுத்தப்படுகின்றன. அது தானே செயல்படுகிறதா அல்லது செயல்பாட்டை அனுமதிப்பதோடு அமைந்து விடுகிறதா என்பதை ஒட்டி வகைப்படுத்துவது ஒருமுறையாகும். ஒரு மின்கலத்தைப் பயன்படுத்து வதன் மூலம் அது ஒலியை மின்வழி மாற்றும்போது மிகையாகத் தருகிறதா அல்லது மிகைப்பின்றி மாற் றம் நிகழ்கிறதா என்பதை ஒட்டி அவ்வகைப்பாடு அமையும். தொலைபேசித் தொகுதிகளுக்காக உருவாக்கப் பட்ட மிகைப்படுத்தும் அல்லது செயல்படும் ஒலி வாங்கிகள் வேறு நோக்கங்களுக்கும் பயன்படு கின்றன. பொதுவாக உணர்திறன், பல்வேறு பேச்சு அலைவெண்களிலும் ஒரே மாதிரியான செயலளிப்பு ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். உள்பெறு ஆற்றலுக்கும், வெளியளிப்பு ஆற்றலுக்கும் இடையே உள்ள மிகைப்பு இரண்டாயிரம் மடங்காக இருக் கலாம். மிகைக்கும் அல்லது மிகைக்கா ஒலிவாங்கி களில் உயர்தரம் தேவைப்படும். ஒலிப்பதிவுத் தொகுதி கள், ஒலிபரப்புத் தொகுதிகள், அளவீடு ஆகிய பயனீடுகளுக்காவும் இவை உருவாக்கப்படும். மின்சுற்றுகளில் இத்தகைய ஒலிவாங்கி ஒன்று அல்லது பல மிகைப்புக் கட்டங்களுடன் பயன்படு கிறது. ஒலிவாங்கிக்குள்ளே நிகழும் காற்றின் ஒலி அழுத்த மாறுதல்களை, ஒத்த மின் அலைகளாக மாற்றுவது ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளாக நடைபெறும். முதலாவதாக ஒலி அலைகள் ஒரு பரப்பின் மேல் மோதுகின்றன. அது ஓர் அசையும் இழை ஆகும். அடுத்து அந்த இழை நகர்ந்து ஒரு மின்சுற்றின் குறிப்பிட்ட பண்பை மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக ஓர் இழை நகர்வதால் ஒரு கரித் தொடுவானின் தடை, மின் தேக்கியில் மாற்றம் அல்லது காந்தப்புலத்தில் ஒரு கடத்தியின் நகர்வு ஆகியவற்றில் ஒன்றில் நடைபெறும் . அந்த நகர்வுகள் இழை மின்னியல் வெளி அளிப்பில் மாறு தலை ஏற்படுத்துகின்றன. ஆகவே ஒலி அதிர்வு கள் முதலில் எந்திரவியல் அசைவுகளாக மாற்றப் படுகின் றன. அவை பின்னர் மின் அலைகளாக மாற் றப்படுகின்றன. ஆகவே ஓர் ஒலிவாங்கியின் இயக் கத்தைப் படிக்கும்போது அசை இழையின் எந்திர ளியல் அசைவு, இவ்வசைவு தேவையான மின்னலை களை உற்பத்தி செய்யும் முறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். இச்செயல் முறையில் எப்பகுதியையும் வைத்து ஒலி வாங்கியை படுத்தலாம். வகைப்