பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 ஒலிவாங்கி

662 ஒலிவாங்கி இயக்க வகை ஒலிவாங்கிகள். இவை அசைக் கடத்தி ஒலி வாங்கிகள் எனும் வகையில் அடங்கும். நிலையான காந்தப்புலத்தில் கடத்தி அசை வதால் ஒரு மின் சுற்றில் மின்னழுத்தம் தோன்று கிறது. ஒலி அலைகள் தாக்கும் அசை இழையுடன் இணைக்கப்பட்ட அசைச் சுருள் (moving coil) காந்தப்புலத்தில் ஒலி அலைகளுக்கேற்ப அசைவதால் சுருளில் மின்னோட்டம் தூண்டப்படுகிறது. இவ்வகை 1877 இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் 1831- இல் வெண்டி. துராஸ் என்போரால் இறுதியாக வடிவமைக்கப்பட்டது. குறைந்த மின் மறுப்புத் தன்மையால் இயக்க வகை ஒலிவாங்கிகள், ஒலிப் பதிவு, ஒலிபரப்பு, பொது அறிவிப்பு ஆகிய கடின மான பயன்களுக்கு மிகுதியும் பயன்படுகிறது. காந்த ஒலிவாங்கிகள். காந்த ஒலிவாங்கிகள் (மாறு எதிர்ப்பு) தம் இயக்கத்திற்கு ஒரு காந்தவியல் சுற்றின் எதிர்ப்பில் ஏற்படும் மாறுதல்களைச் சார்ந் துள்ளன. 1876 இல் உருவாக்கப்பட்ட பெல்லின் முதல் செலுத்தியில், ஓர் அசைவிழையால் இயக்கப் படும் மின் சுழலி உள்ளது. அது மின்காந்தப்புலத்தில் நகர்வதால் காந்தச் சுற்றின் எதிர்ப்புப் பண்பை மாற்றுகிறது. சுருளில் மின் அழுத்தத்தைத் தூண்டு கிறது. ஆகவே காந்த ஒலி வாங்கி ஒலி வாங்கியின் முதல் வகையாகும். முந்தைய காந்த ஒலி வாங்கிகள் தரத்திலும் உறுதியிலும் கார்பன், இயக்க, மின் தேக்கி நாடா வகையிலும் தாழ்ந்த வகையாக இருந்தமையால் பரவலாகப் பயன்படவில்லை. படைகளுக்கும், காது கேள் கருவிகளுக்கும், கடினத்தன்மை, குறைந்த உயர்ந்த உணர்திறன் தேவைப்படுவதால் மாற்றியமைக்கப்பட்ட காந்த வகை ஒலிவாங்கிகள் எடை தற்போது பயன்படுகின்றன. நாடா ஒலிவாங்கி (ribbon microphone). இதுவும் ஒருவகை அசை கடத்தி ஒலிவாங்கியே ஆகும். பொதுவாக நிலை காந்தங்களுக்கிடையே உள்ள காந்தப் புலத்தில் தொங்கவிடப்பட்ட உலோக நாடா ஒலியலைகளால் அசைக்கப்படுவதால் செயல்படுகிறது. நாடாவின் ஒரு புறம் மட்டும் ஒலியலைகளால் மோதப்படலாம். அப்போது அழுத்த வகையாகச் செயல்படும் பலதிசைப் பதிலளிப்புகளைத் தரும். இரு புறங்களும் ஒலியலைகளால் மோதப்பட்டு வேக ஒலிவாங்கியாகவும் இது செயல்படலாம். இது முன்னும் பின்னும் பெறும் ஒலிகளுக்குப் பெரும அளவான பதிலளிப்பின் மூலம் இரு திசைப் பண் பைப் பெறுகிறது. இவ்வகை 1923 இல் ஸ்காட்டி கொலாக்கால் என்போரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் புதிய வடிவில் ஆல்சான் என்பவரால் இறுதி யாக்கப்பட்டது. அழுத்த, வேக வகைகள் ஒருங் கிணைக்கப்பட்ட ஒரு திசைப் பண்புகளை அளிக்கக் கூடும். இவை ஒலி அளவைக்கும் ஒலிபரப்பிற்கும் மிகுதியாகப் பயன்படுகின்றன. களைக் ஒரு திசை, பல திசை ஒலிவாங்கிகள். தேவை யில்லாத ஒலி அல்லது அறை ஒலியின் விளைவு குறைக்கவும் ஒலிவாங்கியில் பேச்சாளரின் ஒலிப் பின்னூட்டு விளைவைக் குறைக்கவும் ஒலி வாங்கியின் ஒரு திசைப் பண்பு ஏற்புடையதாகும். இரு திசை, ஒரு திசைப் பகுதிகளைச் சேர்ப்பதாலும் இத்தன்மையை அடைய முடியும். முந்தைய அணுகு முறை பொதுவாகச் சேர்க்கைகள், ஒரு நாடாவின் வேகப் பகுதியை அந்த நாடாவின் அழுத்தப் பகுதி யுடனோ, இயக்க அழுத்தப்பகுதியுடனோ இணைப்ப தாகும். அதிகமாக இரு பதிலளிப்பு முறைகளும் ஓர் இதய வடிவுப் பண்பை அளிக்குமாறு சேர்க்கப்படு கின்றன. சேர்க்கை ஒலி வாங்கி வீன்பெர்ஜர், ஓல்சான் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. நாடா இயக்கச் சேர்க்கை, இரு பகுதியின் பண்புகளுக்கும் ஏற்புடைய தனிப்பட்ட சமன்பாடு முறைகளைக் கையாண்டு மார்ஷல், ஹாரி என்போரால் உரு வாக்கப்பட்டது. 1935 இல் வான் பிரான்முல், லெபர், ஒரு பல் சிறு துறைக்கூட்டினுள் எதிர்த்திசைகளில் வைக்கப் பட்ட இரு ஞெகிழி இழைகளைப் பயன்படுத்தி மின் வாங்கியை தேக்கி ஒலி உருவாக்கினர். அதைத் தக்க மின் இணைப்பின் மூலம் பல திசை அல்லது ஒரு திசைக்கருவியாகச் செயல்படுத்தலாம். உரு வாக்கப்பட்ட உயர்ந்த தரம் வாய்ந்த ஒலி வாங்கி களில் சில இவ்வகைக் கட்டமைப்பைக் கொண்டவை. தக்க வடிவமைப்புச் சேர்க்கைகளால் தேவையான பதிலளிப்பும் பண்புகளும் பெறலாம். ஒவி வாங்கி மிகைப்பிகள். புதிய வகைகளின் துணையால் எந்தத் துறைக்கும் முழுமையாக ஏற்ற விரைவு எண் மற்றும் வீச்சுப் பண்புகள் கொண்ட மிகைப்பிகளை ஒலி வாங்கிகளுடன் பயன்படுத்தும் வகையில் கட்டமைக்க முடியும். அலை வீச்சுத் திரிபைக் குறைக்க எதிர்க்குறி பின்னூட்டம், அலை எண் திரிபைக் குறைக்க தடை மின்தேக்கி, இடை நிலை இணைப்பியும் பயன்படுகின்றன. முற்கால ஒலி வாங்கி மிகைப்பிகள் மின்னணுக்குழல் வகை யைச் சேர்ந்தவை. தற்போது குறை மறுப்பு நுண் வெளியளிப்பிற்கு ஏற்றவாறு அமைய குறைந்த மின்ஆற்றல் துய்ப்பும், சிறிய உருவமும் கொண்ட திரிதடயங்கள் (transistors) பெரும் பாலும் பயன்படுகின்றன. ணவை செயலாற்றல் ஆய்வு. ஒர் ஒலி வாங்கியின் செய லாற்றல், ஆய்வுகள் மூலமோ ஒலி அளவீடுகள் மூலமோ அறுதியிடப்படும். உண்மையான பயனீட்டு