பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை (தாவரம்‌) 665

உண்டாக்குகின்றன. இதனால் சீரம் நோய் (serum sickness), சிறுநீரகக் குளோமருலஸ் அழற்சி முதலான நோய்கள் ஏற்படுகின்றன. தாமத வகை ஒவ்வாமை. இதில் செலுத்தப்படும் எதிர்ப்பொருள் ஊக்கி நிணநீர்ச் செல்களைத் தூண்டி லிம்ஃபோகைன்களை (lymphokines) உற்பத்தி செய் கிறது. இவை திசுக்களில் வேண்டாத பல்வேறு மாறு தல்களை உண்டாக்குகின்றன. இவ்வகை வினை களால் பாக்ட்டீரியா மற்றும் காளான் எதிர்ப்பு மருந்துகள் பகுதி உணர்வு இழப்பு மருந்துகள், எதிர் ஹிஸ்டமின்கள் ஆகியவை தடவும் மருந்தாகப் பயன் படும்போது தொடுநிலைத்தோல் அழற்சி (contact dermatitis) ஏற்படுகிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகூட ஒவ்வாமை, அஞ்சத்தக்க விளைவுகளை உண்டாக்கும். சில சம யங்களில் மருந்தின் மருந்தியல் பண்புகளுக்குத் தொடர்பில்லாத விளைவுகளையும் உண்டாக்கும். ஒரு சிலருக்கு மருந்து செலுத்துவதை நிறுத்திய வுடன் ஒவ்வாமை விளைவுகளும் மறைந்து விடலாம். ஒரு மருந்துக்கு ஒருவர் ஒவ்வாமையுடையவராக இருந்தால், அம்மருந்து வகையைச் சார்ந்த பிற மருந்துகளுக்கும் ஒவ்வாமையுடையவராக இருப்பார். பெனிசிலின் போன்ற சில மருந்துகளால் ஒவ்வாமை பரவலாக ஏற்படுவதன் காரணம் இதுவரை சரிவர விளங்கவில்லை. தோல்படை போன்ற ஒவ்வாமை நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளால் ஒவ்வாமை ஏற்பட மிகுதியும் வாய்ப்புண்டு. ஒவ்வாமை (தாவரம்) டி.எம். பரமேஸ்வரன் தாவரங்களில் சூல்களும் மகரந்தத்தூள்களும் நன்கு இயங்கும் நிலையில் இருந்தாலும் சில நேரங்களில் விதை தோன்றாமல் போய் விடுவதுண்டு. இதற்கு ஒவ்வாமை (incompatibility) என்று பெயர். இதே போன்று இரு வெவ்வேறு தாவரங்களை ஓட்ட வைக்கும்போது (grafting) அவற்றின் மரபியல் பண்பு கள் வேறுபடுவதால் ஒன்றையொன்று விலக்கி விடும். பூஞ்சைகளில் கலவி இனப் பெருக்கத்தின்போது ஒரே இனமாக இருந்தும் அவை விலக்கப்படுவது ஒவ் வாமையே ஆகும். பயிர்களில் அயல் மகரந்தச்சேர்க்கையை முனைப் பாக்கச் சில நேரங்களில் மகரந்தத்தூள்கள் முன்ன தாகவே முதிர்கின்றன. சில சமயம் சூல் முன் முதிர்ச்சியடைவதும், ஆண் பூ, பெண் பூ ஆகியவை ஒரே தாவரத்தில் காணப்படுவதும், ஒரில்ல (monoe- cious) ஆண் பூ. பெண் பூ இரண்டும் வெவ்வேறு . ஒவ்வாமை (தாவரம்) 665 தாவரத்தில் காணப்படுவதும், ஈரில்ல (dioecious) அமைப்பு காணப்படுவதும் ஒவ்வாமையின் குறிப்பிடத் தக்க காரணங்களாகும். ஈரில்ல அமைப்புக்காணப்படும் பூக்கும் தாவரங் களான கஞ்சாச் செடி, பப்பாளி, பனை முதலியவற் றில் ஒவ்வாமை மிகுதியாகக் காணப்படும். வான மதிப்பீட்டின் மூலம் 20 குடும்பங்களில் உள்ள 300 சிற்றினங்களிடையே ஒவ்வாமையிருப்பதைக் கண்டுள்ளனர். செயலாற்றுவதற்காக இனப் பெருக்கத்திற்கு உண்டாக்கப்படும் ஆண், பெண் முட்டைகளால் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்போது விதை உற் பத்தி செய்ய முடியாமற்போகும் நிலையும் ஒவ்வாமை எனப்படும் மலர்களின் உருவமைப்பில், வேறுபாடு உள்ள சிற்றினங்களிலும் (heteromorphic species) ஒற்றுமை உள்ள சிற்றினங்களிலும் (homomorphic spec.es) ஒவ்வாமை காணப்படும். ம பிரிமுலா (primula) என்ற தாவரத்தில் குட்டை யான சூல் தண்டு நீண்ட மகரந்தக் கேசரங்கள் அல்லது நீண்ட சூல்தண்டு குட்டையான மகரந்தக் கேசரங்கள் காணப்படும். ஆகவே இயற்கையாக இரண்டும் ஒன்றுசேர முடியா; இதைச் செயற்கை முறையில் சேர்த்தாலும் பண்பக மாறுபட்டால் கரு வுறுதல் நடைபெறாது. லைத்ரம் (lythyrum) என் னும் பயிரின் சூல்தண்டில் நீண்டவை, நடுத்தர மானவை, குட்டையானவை என்னும் மாறுபாடுகள் உள்ளன. இவ்வாறே மகரந்தக்கேசரங்களும் மூன்று வகை நீளங்களில் சூல்தண்டின் நீளத்தைப் பொறுத் துக் காணப்படும். இவற்றில் ஏதாவது ஒரு பயிர், ஒரு நீண்ட சூல்தண்டும் இருவேறுபட்ட மகரந்தக் கேசரங்களும் கொண்டிருக்கும். இரண்டும் ஒரே உயரத்திலிருந்தால்தான் மகரந்தச்சேர்க்கை நடை பெறும் சில சமயம் உருவமைப்பில் ஒற்றுமை இருப் பினும் எதிர்ப்பண்புகளின் விளைவுகளால் ஒவ்வாமை தோன்றக்கூடும். பிராசிக்கா ஒலிரேசி (Brassca Oleraceac), ராபனஸ் சேட்டைவஸ் (Raphanus sativus), கால மாஸ் (Cosmos) முதலிய பயிர்களில் சூல்முடியின் மேற் புறத்தில் மகரந்தத்தூள் கட்டுப்படுத்தப்படுவதால் ஒவ்வாமை தோன்றி முளைக்காமல் போகலாம். புரூனஸ் (Prums), பைரஸ் (Pyrus), டிரை ஃபோலியம் (Trifolium). லைக்கோபெர்சிகான் (Lycopersicun). சோலானம் (Solanum), நிக்கோட்டி யானா (Nicotiana) முதலிய பயிர்களில் மகரந்தக் குழாயின் பண்பைப் பொறுத்து ஒவ்வாமை ஏற்படும். அதனால், இனச்செல்கள் சார்ந்த (gametophytic ) ஒவ்வாமை நிலையையுடைய பயிர்வகைகள், இரு விதமாகச் செயலாற்றும் மகரந்தத்தூள்களை உண்டாக்கும், பண்பகங்கள் வேறுபட்டால் மகரந்த