பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ 45

வேகமுடைய எலெக்ட்ரான்களைத் தோற்றுவிப் பதைப் போல் இக்கதிர்களும் உண்டாக்கலாம். மேற்கூறிய பண்புகள் மூலம் எக்ஸ் கதிர்கள் பல வகையிலும் சாதாரண ஒளியை ஒத்திருப்பதை அறியலாம். அதாவது ஒளியின் அலை நீளத்தைக் கீற்றணி (grating) கொண்டு அளவிடுவதைப் போல எக்ஸ் கதிர்களின் அலைநீளத்தையும் கணக்கிடலாம் எனக் கருதுவது இயல்பு. ஒளியியல் கீற்றணி எக்ஸ் கதிர்களை ஆய்வதற்குப் போதுமானதன்று. மேலும் குறுகிய இடைவெளியுடன் கூடிய கீற்றணி தேவை. இதைச் செயற்கையில் உண்டாக்க இயலாது. லாவேயின் புள்ளிக்கோலம். லாவே என்பார் எக்ஸ் கதிர்க் கற்றை ஒன்றை சிங் சல்ஃபைடு படிகம் ஒன்றின் மீது விழச் செய்து படிகத்தின் மறு பக்கத் தில் ஒளிப்படத்தகடு ஒன்றை வைத்துப் படம் எடுத் தார். அப்படம் அழகிய சமச்சீரமைவு கொண்ட புள்ளிக் கோலமாகக் காணப்பட்டது. அது லாவேயின் புள்ளிக் கோலம் எனப்படும். லாவேயின் படத்தைப் பார்த்த பிராக் என்பார் படிகங்களைப் பயன்படுத்தி எக்ஸ் கதிர்களின் அலை நீளத்தைக் கணக்கிடலாம் என முடிவு செய்து படிகக் கீற்றணி நிறமாலை அளவி ஒன்றை அமைத்தார். எக்ஸ் கதிர் 45 எண்ணினார். இந்த வேண்டும் எனப் பிராக் எண்ணம் முற்றிலும் சரியே என்பதை அவருடைய ஆய்வு முடிவுகள் காட்டின. 2d படத்திலுள்ள கரும்புள்ளிகள் இணை தளங்களில் அமைந்துள்ள படிக அணுக்களைக் குறிக்கின்றன. முதல் தளத்தில் அமைந்த A என்ற அணுவில் 1 என்ற சாய்கோணத்தில் படும் ஓர் எக்ஸ் கதிர் எதிரொளிக் கப்படுகிறது. அதற்கு இணையான மற்றொரு கதிர் இரண்டாம் தளத்தில் அமைந்த B என்ற அணுவால் எதிரொளிக்கப்படுகிறது. இவ்விரு கதிர்களுக்கும் இடையே காணும் பாதைவேறுபாடு CB + BD = Sin & ஆகும். இங்கு d என்பது படிகத் தளங்களுக்கு இடையே உள்ள தொலைவாகும். குறுக்கீட்டு விதி களின்படி இப்பாதை வேறுபாடு அலை நீளத்தின் முழு எண் மடங்குகளாக இருப்பின் ஆக்கக் குறுக்கீடு நிகழும். எனவே, 2d Sin j i ) ஆகும். இது பிராக் சமன்பாடு எனப்படும். இங்கு n என்பது 1, 2, 3 என்ற முழு எண்களைக் குறிக்கும். ... NON B L Sz IC QE படம் 5 படிகத்தின் அணுக்கள் பல இணை தளங்களில் அமைந்துள்ளன. இத்தளங்களில் எதிரொளிக்கப்படும் எக்ஸ் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்கக் குறுக்கீடு செய்யும்போது லாவே லாவே புள்ளிகள் தோன்றியிருக்க படம் 6. பிராக் நிறமாலைமானி அலைநீளம் காணல். காரீயப் பிளவுகள் S, மற் றும் S, வழியாகச் செலுத்தப்பட்ட எக்ஸ் கதிர்கள் மெல்லிய கற்றையாக வெளிவந்து படிகமேடையில் வைக்கப்பட்டுள்ள C என்ற படிகத்தின் மீது படுகின் றன. படிகத்தின் முகம் அணுக்கள் செறிந்த பிளவுறு தளத்திற்கு இணையாக வெட்டப்பட்டிருக்கும், படிக மேடையின் சுழற்சியை அளப்பதற்குத் தேவையான