678 ஒளி ஆவர்த்தனம்
678 ஒளி ஆவர்த்தனம் மின்னோட்டத்தை அளக்கவேண்டும். மின்னோட்டங் களின் விகிதமே ஒளிவிளக்கங்களின் விகிதமாகும். இவ்வகையான ஒளி அளவிகளைக் கொண்டு ஒளியூட்டங்களை ஒப்பிடலாம். லம்மர்-ஃப்ரோடன் ஒளிஅளவிகளைக் கொண்டு விளக்குகளின் பயனுறு திறனை அளவிடலாம். லம்மர்-ஃப்ரோடன், புன்சன் ஒளி அளவிகளைக் கொண்டு ஆடிகளின் எதிரொளிப் புத்திறன்களை (reflecting powers of mirrors) அள விடலாம். மேலும் ஒளிஅளவி மூலம் ஒளிகடத்து எண்களையும் (transmission co-efficient) கணக்கிட லாம். ஒளி ஆவர்த்தனம் க.பொன்னம்பலம் தாவரங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அள விற்குத் தழை வளர்ச்சி (vegetative growth) அடைந்த பின்னர் இனப்பெருக்க வளர்ச்சி (reproductive growth) என்னும் இன்றியமையாத வளர்நிலையை அடை கின்றன. இவ்வளர்நிலைமாற்றச் செயலியல் நீண்ட காலமாகப் புலனாகாமல் இருந்தது. தாவரப் படி மலர்ச்சியின் உயர்நிலையில் இருப்பவையாகக் கருதப் படும் பூக்கும் தாவரங்களின் (angiosperms) இனப் பெருக்க உறுப்புகள் மலர்களேயாகும். பொதுவாகத் தாவரங்களில் பூத்தல் என்னும் நிகழ்ச்சி அவற்றின் மரபியலின் வழியேவரினும், ஒளிக்காலம் (photo- period), வெப்பநிலை ஆகிய இரு புறக்காரணிகளும் (external factors) இதில் பெரும்பங்கேற்கின்றன. தாவரச் செயலியலில் ஒளி ஆவர்த்தனம் அல்லது ஒளிக்காலத்துவம் (photoperiodism) என்னும் பகுதி, தாவரங்களில் பூத்தல் தூண்டப்படுவதில் ஒளிக்காலத் தின் பங்கு பற்றி விளக்குகிறது. கின் கால மாறுபாடுகளால் ஒரு நாளின் பகற்பொழு தின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் தாவரங்களில் பூத்தலைக் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்து றன என்னும் உண்மையை முதன் முதலில் 1920 இல் கார்னர், ஆல்லர்ட் என்னும் அமெரிக்க அறி வியல் வல்லுநர்கள் விளக்கினர். இவர்கள் புகையிலை. சோயாமொச்சை ஆகிய தாவர ஆய்வுகளின் மூலம் ஒரு நாளின் பகல், இரவுப்பொழுதின் அளவு பெரும் பான்மையான தாவரங்களில் பூத்தலைத் தூண்டுவதில் மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக விளங்குவதை அறிந்தனர். இவ்வகையன ஒளிக்கால உணர்வு, ஒளி ஆவர்த்தனம் அல்லது ஒளிக்காலத்துவம் எனப் படுகிறது. ஒளிக்காலத்துவத்தால் தாவர வகைப்பாடு. பூத்தல் தூண்டப்படுவதற்கு ஒருதாவரம் எவ்வளவு நேரம் பகற்பொழுதுக்கும் எவ்வளவு நேரம் இராப் பொழு துக்கும் இலக்காசு வேண்டும் என்பதை ஒளிக்காலம் என்றும், பொழுது வேறுபாடுகளுக்குத் தக்க தாவரங் களின் உணர்வை ஒளிக்காலத்துவம் என்றும் குறிப் பிடுவர். பூக்கும் தாவரங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாறுநிலை பகல் அளவு (critical day length) உண்டு. இதன் அடிப்படையில்தான் குறும்பகல் தாவரங்கள், நெடும்பகல் தாவரங்கள் என்று பிரிக் கின்றனர். மாறுநிலைப் பகல் அளவை அறுதியிட, நூறு ஆய்வுச் செடிகளை எடுத்து கொண்டு எவ்வளவு நேரத்தில் 50 செடிகள் மலருகின்றனவோ அதை அச் செடியின் மாறுநிலைப் பகல் அளவு எனலாம். ஓர் இனத் தாவரத்தின் குறிப்பிட்ட பகல் அளவு 10மணி என்றும் இரவு அளவு 14 மணி என்றும் கொள்ளலாம். அதாவது ஒளி 10 மணி நேரமும் எஞ்சியதற்கு இருளும் அச்செடிக்குத் தரப்படும். இச்சூழ்நிலையில் 50 செடிகளே மலரும். 8மணி பகல் ஒளியும் 16 மணி இருளும் கொடுக்கும்போது அனைத்துச் செடி களும் பூத்துவிட்டால் இதைக் குறும்பகல் இனம் என்பர். ஒளிக்கால உணர்வைப் பொறுத்துத் தாவரங் களை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கலாம். குறும்பகல் தாவரங்கள் (நெடுமிரவுத் தாவரங்கள்). இவை பூப்பதற்கு நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் குறைவான பகற்பொழுது ஏறத்தாழ 12 மணிக்குக் குறைவாகத் தேைைவயாகும். எ.கா. புகையிலை, நெல்,பருத்தி, டாலியா. . நெடும்பகல் தாவரங்கள் (குறுகிய இரவுத் தாவரங் கள்). நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் மிகுதியாக (ஏறத்தாழ 12 மணிப் பகற்பொழுது) இருந்தாலே இவை பூக்கும். எ.கா. பார்லி, முள்ளங்கி, பட்டாணி, மக்காச்சோளம். 100 பூக்கும் செடிகளின் எண்ணிக்கை 75 25 -- to to பகல் 8 10 1 2 இரவு 16 14 12 நேரம் 14 16 10 8