பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி உணர்பொருள்‌ 681

நூலோதி Kaplan. Irving : Nuclear Physics, Massa- chuiseffi : Addision-wesley, 1969; Srivastava B N., Basic Nuclear Physics, Pragati Prakashan, Meerut ; Dyal. P and J.P. Hummel, Excitation Function for the Vsi (y, ), Se4' Reaction phy Rev. 115, 1264 (1959); E.D. Courant, Direct Photo disintegration processes in Nuclei, Phy. Rev. 82, 703 (1951). ஒளி உணர்பொருள் ஒளி அலைகள் சீசியம், ருபீடியம் போன்ற உலோகங் கள் மீது விழும்போது அந்த உலோகங்கள் எலெக்ட் ரான்களை உமிழ்கின்றன. அலை வடிவில் செல்லும் ஒளிக் கதிர்கள் பொருள்களிலுள்ள எலெக்ட்ரான் களை வெளியேற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றுள்ளன என்பது இதனால் தெளிவாகிறது. எலெக்ட்ரான் களின் ஓட்டமே மின்னோட்டமாகும். இவ்வாறு ஒளி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றலாம். இதற்கு ஒளி உணர் பொருள்களே (light sen- sitive materials) முக்கிய காரணமாகும். படக்காட்சி. தொலைக் காட்சி, ஒளிமின்கலம், சூரிய மின்கலம், வேவுமணி முதலிய கருவிகள் இதன் பயனாகவே ஏற்பட்டன. பிளாங்க் என்பவர் அதிர்வெண் உயர உயர ஆற்றல் உயர்வதை E=hv என்னும் சமன் பாட்டால் விளக்கினார்.E=ஆற்றல் : h = பிளாங்க் மாறிலி = அதிர்வெண். ஒளி உணர்பொருள் 681 ஒரு வெற்றிடக் குழாயில் இரு உலோக மின்முனை களைப் பயன்படுத்தி அதன் வழி மின்னோட்டத்தைச் செலுத்தினால் வெற்றிடக் குழாய் வழியாக மின் னோட்டம் பாயாது. A என்ற எதிர் மின்வாய்க் தகட்டில் சீசியம் அல்லது சீசியம் ஆக்சைடு பூச்சு கொடுத்து அதன் மீது ஒளிக் கதிர்படுமாறு செய்தால் ஒளிக் கதிர் பட்டவுடன் எலெக்ட்ரான்கள் வெளி வரும். இந்த எலெக்ட்ரான்களை நேர்மின்வாய்த் தகடு இழுக்க மின்சுற்றில் மின்னோட்டம் பாயும். படுகதிரின் அதிர்வெண்ணைக் குறைத்துக் காண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட அதிர் வெண்ணுக்குக் குறைந்த அதிர்வெண் கொண்ட கதிர் களால் இந்த எலெக்ட்ரான்களை உலோகத்திலிருந்து வெளிக் கொண்டுவர முடியாது. இந்த அதிர் வெண்ணுக்கு வரை எல்லை அதிர்வெண் (threshold frequency) என்று பெயர். இதை , எனக் குறிப்பர். ஆற்றல் E = hv. ஆகும். பிளாங்க் இக்கருத்தைக் கொண்டு ஒளி, ஆற்றல் பெற்ற ஃபோட்டான்களாகச் செல்கின்றது, என்னும் குவாண்ட்டம் கொள்கையைக் கூறினார். ஒரு குவாண்ட்டம் ஆற்றல் E = hv ஆகும். வரை எல்லை அதிர்வெண் V. தெரிந்ததிலிருந்து அந்த ஆற்றல் எதற்குப் பயன்படுகின்றது என ஆராய்ந்தபோது அந்த ஆற்றல் (hyo) அந்த உலோகத்தின் மேல்மட்ட எலெக்ட்ரான்களை வெளித் தள்ளப் பயன்படுகிறது எனக் கண்டார். உலோகத் திலுள்ள எலெக்ட்ரான் வெளித்தள்ளத் தேவையான ஆற்றலுக்கு வேலைச் சார்பு (work function) என்று TWIT 01 hv. ஒளிக்கதிர் B + மின்கலம் /- அலைவு காண் மானி A = சீசியம் பூசப்பட்ட உலோகத்தகடு எதிர்மின்வாய் B = தாமிரத்தகடு நேர்மின்வாய் உட்புறம் சீசியம் ஆக்ஸைடு தடவப்பட்ட வெற்றிடக் குழாய் ஒளி மின்கலம் + ஒளி மின்தடை மின்னாற்றல்