பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 ஒளி உணர்பொருள்‌

682 ஒளி உணர்பொருள் பெயர். இந்த அதிர்வெண்ணுக்கு மேல் உள்ள அதிர் வெண்கள் படும்போது கூடுதலான ஆற்றல் எலெக்ட் ரானின் இயக்க ஆற்றலாகச் செயல்படுகிறது. hw = hv + }mv* = படுகதிரின் அதிர்வெண்; v, = வரை எல்லை அதிர்வெண்; m = எலெக்ட்ரானின் நிறை; v = எலெக்ட்ரானின் திசைவேகம் ; h = பிளாங்க் மாறிலி. இத் தத்துவத்தின் மூலம் மின்னாற்றல் பெறப் பயன் படும் கருவிகள் ஒளி மின்கலங்கள் எனப்படும். இந்த ஒளி மின்கலத்தின் உதவியாலேயே படக் காட்சியைக் (cinema) காணமுடிகிறது. ஒளி மின் கலங்களில் எலெக்ட்ரான் உறிஞ்சும் ஒளி மின்கலம் (photo con- ductive cell) எலெக்ட்ரான் உமிழும் ஒளி மின்கலம் என இரு வகை உண்டு. டிரான்சிஸ்டர். தற்போது டிரான்சிஸ்டர்கள் பல வகையிலும் பயன்படுகின்றன. சூரிய மின்கலங்கள் அனைத்தும் டிரான்சிஸ்டர்களைக் கொண்டே யங்குகின்றன. படிகங் ஜெர்மேனியம், சிலிகான் ஆகிய இரு படி கங் களும் மின்னோட்டத்தை ஒரு பக்கமாகச்செலுத்தும். எதிர்ப்பக்கம் செலுத்தினால் மின்னோட்டத்தைத் தடை செய்யும். இப்படிகங்கள் ஒரு திசையில் தடை யில்லாமலும் மறு திசையில் தடைப்படுத்தியும் மின் னோட்டத்தைச் செலுத்துவதால் இவற்றிற்கு டிரான்சிஸ்டர் (மாறுவழித்தடைப்படிகம்) எனப் பெயர் வந்தது. தன்னிச்சையாக இப்பயனைக் கொடுத்தால் அதற்குத் தன்னியல்புப் படிகம் (intrinsic crystal) என்று பெயர். இதன் பயனைப் பெருக்கப் பெருக்க அணுக்கூட்டுச் (doping) செய்ய லாம். ஜெர்மேனியம், சிலிகான் இரண்டுமே நான்கிணைதிறன் (tetravalent) கொண்டவை. இவ் வணுக்களில் உள்ள இந்த எலெக்ட்ரான்கள் சக பிணைப்புக் கொண்டுள்ளதால் மின்னோட்டத்தைக் கடத்தத் தனி எலெக்ட்ரானோ, வேறு நேர்மின் வாய்த் துகளோ இல்லை. இந்த ஜெர்மேனிய அணுக் களுடன் ஐந்திணைதிறன், கொண்ட தனிமங்களான பாஸ்ஃபரஸ், ஆர்செனிக் ஆன்ட்டிமனி, போன்ற தனிமங்களின் சில அணுக்களைச் சேர்த்தால் ஓர் எலெக்ட்ரான் மிகுதியாகஇருக்கும். இது மின்ளோட் டத்தைச் செலுத்தும். இவ்விதம் எலெக்ட்ரான் களைத் தரும் படிகத்திற்கு (donor type crystal) N படிகம்என்று பெயர். பாஸ்பரசுக்குப் பதிலாக மூவிணைதிறன்கொண்ட தனிமங்களான போரான். இண்டியம். கேவியம் போன்ற தனிமங்களின் சில அணுக்களை ஜெர்மேனிய அணுக்களுடன் சேர்த்தால் (10* ஜெர்மேனிய அணு விற்கு ஒரு போரான்-அணு வீதம் சேர்க்க வேண்டும். அதில் ஒரு நேர்மின் துகள் மின்னூட்டம் உள்ள இடம் (positive hole) ஏற்படும். இம்மாதிரி உள்ள டங்கள் எலெக்ட்ரானை ஏற்பதால் (acceptor crystal) இப்படிகங்களுக்கு p படிகங்கள் என்று பெயர். Ge Ge Ge. Ge Ge Ge Gc Ge 1 N Ge Ge Ge Ge B-போரான் N வகை படிகம் P வகைப் படிகம் படிக மின்கலம். இவ்வகை PN இணைப்புப் படி கத்தில் ஒளி ஆற்றல் படும்போது எலெக்ட்ரான்கள் நகர வேண்டிய ஆற்றலைப் பெற்று மின்னோட்டத் தைச் செலுத்துகின்றன. இம் மின்னோட்டத்தைக்