பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 ஒளி உணர்வுத்‌ திறன்‌

684 ஒளி உணர்வுத் திறன் மின் ஒளி உணர்வுத் திறன் மின்புல ஒளிர்தல்.(electroluminescence) புலத்தாலோ அல்லது மின்னோட்டத்தாலோ ஒளி யலைகளை உண்டாக்கினால் அது மின்புல ஒளிர்தல் ஆகும். கேலிய ஆர்செனைடு டிரான்சிஸ்டரைக் கொண்டு அகச்சிவப்புக் சதிர்களை உண்டாக்க முடி யும். இது மின்புல ஒளிர்தல் ஆகும். GaAs அகச்சிவப்பு ஒளிமூலம் GaAs டையோடு டையோடு h v ஒளி கண்டு பிடிப்பான் வெளிவரும் சைகை php டிரையோடு அகச்சிவப்பு ஒளிமூலம் வெளிக்கதிர் நின்றொளிர்தல் எக்ஸ் கதிர், ஒளிக்கதிர் முதலியன, சில பொருள்கள் மீது பட்டுக் கண்ணுக்குத் தெரியும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தைக் கொடுக்கும். அந்த வண்ணம் (ஒளியலை) அந்தந்த உலோகத்திற்கு படும்போது மட்டும் உரியதாகும். மட்டும் ஒளியைக் கொடுத்தால் அதை உடனொளிர் தல் ( flourescence) என்றும், வெளிக் கதிர்பட்டு நின்ற பிறகும் ஒளிர்தலைக் கொடுத்துக் கொண்டே யிருந்தால் அதை நின்றொளிர்தல் (phoshporescence) என்றும் கூறலாம். ரேடியம் போன்ற பொருள்கள் நின்றொளிர்தலைக் கொடுப்பது கருதத்தக்கது. பயன்கள். ஒளி உணர் பொருள்களின் உதவியால் ஒளிப்படக் காட்சி, தொலைக்காட்சி, வேவுமணி (Burglaus Alarm) முதலியவற்றை நுகர முடிகிறது. மருத்துவத்துறையில் எக்ஸ் கதிர் கொண்டு எலும்பு முறிவு முதலியவற்றைப் படம்பிடித்துக் காட்டவும், நோய்களை நீக்கவும் இப்பொருள்கள் பயன்படு கின்றன. இரும்புத் தூண்கள் போன்றவற்றை வார்ப்பிடும்போது அவற்றில் விரிசல்க்ள் முதலியன உள்ளனவா எனப் பார்க்க எக்ஸ் கதிர்களை அவற்றின் மீது செலுத்தி ஒளிர்தல் திரையில் பட மிட்டுப்பார்த்து அறியலாம். வே. கிருஷ்ணமூர்த்தி உயிரினங்களில் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான செயல்களில் ஒளி வேதியியல் செயல் களும் ஒன்றாகும். இச்செயல்களைத் தாவரங்களில் இயற்கையாகக் காணப்படும் நிறமிகளே ஊக்குவிக் கின்றன. சான்றாகப் பச்சையம் கரோட்டீன் ஒளிச் சேர்க்கையிலும் ஒளி இயக்கங்களிலும் பங்கு பெறுவ தைக் குறிப்பிடலாம். கரோட்டீன்கள்-புரோட்டீன் கூட்டு நிறமிகள் பார்வையிலும் ஒளி இயக்கங்களிலும், ஒளி இடப்பெயர்ச்சி (phototaxis) மற்றும் ஃபைட்டோ குரோம் தாவரங்களின் ஒளி அமைப்புத் தோற்று வாயைக் (photomorphogenesis ) கட்டுப்படுத்து கின்றன. இவை சாதாரண ஒளி உயிரியல் செயல்கள் ஆகும். மேலும் செயலில்லாத (non physiologica') ஒளிச்செயல்கள் உயிரின மண்டலங்களைத் தாக்கக் கூடும். பெரும்பாலான செல்கள் கட்புலன் ஒளியால் (visible light) தாக்கமுறுவதில்லை இதற்குக் காரணம் இச்செல்களிலுள்ள மூலக்கூறுகள் கட்புலன் அலை வரிசைசளை ஈர்க்காமையே ஆகும் ஒளி ஒரு சில தாழ்நிலைத் தாவரங்கள் மட்டுமே ஒளி உணர்வுதிறனைக் காட்டக் (photo sensitivity) கூடியவை. சிவப்புக் கண்புள்ளி (stigma) கசை இழை களால் நீந்திச் செல்லும் ஒரு செல் பாசிகளில் காணப் படுகின்றது. இவை இவற்றின் ஒளி உணர்திறனால் இயங்குகின்றன என்று கருதப்படுகிறது. இச்சிவப்புப் புள்ளிகள் வட்டவடிவமாகவோ, நீண்ட கோடாக வோ, புள்ளி போன்றோ காணப்படுகின்றன. பல் வற்றுள் பச்சையம் அல்லது பிற நிறமிகளின் கீழே அமைந்துள்ளன. யூக்ளினா என்னும் ஒரு செல் உயிரியில் இது நிறமிகளின் வெளிப்புறமாகக் கசை இழை கீழே இணைப்புக்குக் காணப்படுகிறது. அவற்றில் ஒளி உணர்வு நிறமியாகக் கரோடீனாய்டு என்னும் வகை, பொதுவாகக் காணப்படுகிறது. லூடின், கிரிப்டோசாந்தின். பி. கரோடீன் என்பவையும் இவ்வகை நிறமிகளேயாகும். யூக்ளினா வில் ஆய்டாசாத்தின் என்னும் ஆரஞ்சு-சிவப்பு வண்ண நிறமிகள் கொழுப்புகளில் கரைந்து சிறு சொட்டு களாகக் காணப்படுகின்றன. கிளாமிடோமோனஸ் என்னும் உயிரிகளில் இப்புள்ளிகள் இரண்டு அல்லது மூன்று வரிசையாகக் காணப்படுகின்றன. இவற்றின் செயல்முறை இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அண்மைக்கால ஆய்வு மூலம் ஒளி உணர்வு ஊக்கி கள் (photosensitizers) முன்னிலையில் உயிரினங்கள் செல்கள், உயிர்வேதியல் கூறுகள் பார்வை ஒளியை உறிஞ்சி, பழுதடைவதாகக் கண்டறிந்துள்ளனர். இவ்வாரய்ச்சியைத் தொடங்கியவர் ஆஸ்கார் ராப் ஆவார். இவர் அக்ரடைன் என்னும் வேதிப் பொருளால் உணர் ஊக்கிவிக்கப்பட்ட பரமேசியம் என்னும் உயிரினம், கட்புலன் ஒளி என்பார்