ஒளி உயிரியல் விளைவு 685
பட்டவுடன் இறந்து போனதை 1900 இல் கண்டறிந் தார். இதை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் பல வேதிப் பொருள்கள் ஆராயப்பட்டு அவற்றை மருத்துவம், தொழில், வேளாண்மை, வீடு இவற்றில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவ்வேதிப் பொருள்கள் மனித உடலினுள் புகுந்து ஒளி உணர் வால் ஊக்குவிக்கப்பட்டு, திசுக்களுக்கு ஊறு விளைவிக்கும். 320 க்கு மிகையாக உள்ள ஒளி பொதுவாக அலைவரின சைகளே ஒளி உணர்வு - தூண்டும் அலைக ளாகும். புரோட்டீன்கள், நியுக்ளிக் அமிலங்கள் ஆகியவை குறு அலை வரிசைகளை ஈர்க்கும். ஒளி உணர்-ஊக்கிப் பொருள்களை உயிரியலார் சாயங்கள் என்பர். ஆனால் இவற்றை வண்ணம் ஏற்றும் சாயங்களாகக் கருதக் கூடாது. இம் மூலக்கூறுகள் ஒளி-ஈர்ப்பின் காரணமாக நீழ் வாழ்வாற்றல் செறிவு கொண்ட மூன்றாம் நிலையை (triplet) அடைகின்றன. என்று இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு உயிரியலில் பல ஆய்வுகள் நடந்துள்ளன. பல விலங்கின வைரஸ் கள் இவ்வேதிப் பொருள்கள் மூலம் செயலற்ற நிலைக்குக்கொண்டு செல்லப்படுகின்றன கண்டறிந்துள்ளனர். முயலின் தோலில் வாக்சீனியா (vaccinia) வைரஸ் மூலம் தோன்றிய கொப்புளத்தின் மீது, மெத்திலீன் நீலம் என்னும் சாயத்தைத் தேய்த்து ஒளியூட்டினால் அக்கொப்புளம் வடிந்து விடுகின்றது. அதாவது மெத்திலீன் நீலம் வைரஸைச் செயலற்ற தாக்கி விடுகிறது. பல செல் விலங்கினங்களிலும் இவ்வித மாற்றத்தைக் காணலாம். ட்யூபிஃபெக்ஸ் என்பது ஒரு நீர்ப் புழுவாகும். இது ஆக்சிஜன் மற்றும் ளியைத் தவிர்க்கக் கூடியது. இப்புழுவை மிகு வெளிச்சமான, ஆக்சிஜனனோடு கூடிய சூழ் நிலையில் வைத்தால் உடனே அது இறந்துவிடும். ஒளி உயிரியல் விளைவு தி. ஸ்ரீகணேசன் உயிரிகளுக்குத் தேவையான ஆற்றல் சூரிய கதிரியக் கத்திலிருந்து கிடைக் டைக்கிறது. பசுமையான தாவரங்க ளின் உணவு தயாரிப்பில் சூரிய ஒளியே அடிப்படை யாகவுள்ளது. இதற்கு ஒளிச்சேர்க்கை (photosyn thesis) என்று பெயர். கண்ணுக்குப் புலனாகும் வானவில்லின் ஏழு நிற ஒளிக்கற்றையைத் தவிரப் பலவகை ஆற்றல் மிக்க கதிர்கள், வெப்ப அலைகள். பொறிகள். மின்காந்த அலைகள் ஆகியனவும் சூரிய னிடமிருந்து வெளிப்படுகின்றன. மின்காந்த நிற மாலையின் மையப் பகுதிக்கு அருகே உள்ள மூன்று பகுதிகளான-புற ஊதாப்பகுதி கண்ணுக்குப் புலனா கும் நிறமாலை ஒளிப்பகுதி அகச்சிவப்புப்பகுதி ஆகிய வற்றில் உயிரியல் வல்லுநர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒளி உயிரியல் விளைவு 685 இம்மூன்று பகுதிகளுள் அலை நீளம் மிகுந்த அகச்சிவப்புப் பகுதி மனிதன் கண்ணுக்குப் புல னாகாது. இதுவே புவியின் வளி மண்டலத்தை வெப்ப மாக்கப் பயன்படுகிறது. கண்ணுக்குப் புலனாகும் ஒளி 390-700 மில்லி மைக்ரான் (நானா மைக்ரான்) நீளமுடையது. இதுவே நிறமாலையில் காணப்படும். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களுக்குக் காரணமாகும். ஒளி, உணவுச்சேர்க்கைக்கும் தாவர, விலங்கு பரவுகை நிலை கொள்ளுதல் (orientation), அவற்றின் நிகழ் ஒழுகுதல் (rhythmic behaviour), விலங்குகளின் உயிர் ஒளி (bloluminescerce) அவற்றின் காலமுறை நிகழ் வுகள் ஆகிய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக உள்ளது. விலங்குகளின் வலசை (migration), அவற் றின் ஒளி சார் காலமுறை நிகழ்வுத்தன்மை (phto- periodism) ஆகியவற்றிக்கும் ஒளி உணர்வு இன்றி யமையாததாகும். இதனால் விலங்குகளின் ஒளி உணர் புலனுறுப்பிகள், குறிப்பாகக் கண்கள் போன் றவை, எளிய சிறிய தனிக் கண்களாகவோ (ocelli), கூட்டுக் கண்களாகவோ (compound eyes) உருப் பெற்றுச் செயல்படுகின்றன. தாவரங்களில் ஒளி விளைவுகள். ஒளி ஆற்றல் பல்வேறு தாவரங்களின் வாழ்க்கை நிலைகளை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கிறது. இதனால் அவற்றின் கட்டமைப்பு உருவம், செயல் பாடுகள், வளர்ச்சி. இனப்பெருக்கம், பரவுகை போன்றவை வேறுபடுகின்றன. சூழழியல் வல்லுநர்கள் தாவரங்களை நிழல் விரும்பும் தாவரங்கள் (ஒளி விரும்பாதவை) அல்லது குறை ஒளி விரும்பும் தாவ ரங்கள் எனவும், மிகு ஒளி விரும்பும் தாவரங்கள் எனவும் இருவகையாகப் பிரித்துள்ளனர். பச்சைய (chlorophyll) ஆக்கம், அமைப்பு, நிலை, எண்ணிக்கை அல்லது அளவு ஆகியன தாவரங்கள் பெறும் ஒளியின் அளவுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இப்பசுமைத் தாவரங்கள், பச்சையத்தினால் ஒளிச்சேர்க்கையின் மூலம் சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி ஊட்டப் பொருள்களில் (சர்க்கரைப் பொருள்கள்) சேமித்துவைத்து விலங்குகளுக்கு உணவாக அளிக் கின்றன. இவ்வாறு தாவரங்கள் ஆற்றல் மாற்றம் செய்வதால் சூழியல் அமைப்புகளில் முதல்நிலை ஆக்கிகளாக (primary producers) விளங்குகின்றன. இவ்வேதி ஆற்றல் ஊட்டப் பொருள்களின் மூலக் கூறுகளின் வேதிப் பிணைப்புகளில் சேமிக்கப்பட்டு அனைத்து உயிரிகளுக்கும் பயன்படுகின்றன இடையறாது கிடைக்கும் ஒளியைவிட இடையறு ஒளியில் (intermittent light) ஒளிச்சேர்க்கை பெரு மளவில் நடைபெறுகிறது. அளவுக்கு மேலான ஒளி யால் பச்சையத்திலும் பிற நொதிகளிலும் ஆக்சிஜ னேற்றம் நிகழ்கிறது. அதனால் ஒளிச்சேர்க்கை யால் கிடைக்கும் ஊட்டச்சத்தின் அளவு குறை கிறது. ஆனால் அக்காலங்களில் ஆந்த்தோசயனின் .