686 ஒளி உயிரியல் விளைவு
686 ஒளி உயிரியல் விளைவு என்னும் நிறமிகள் உண்டாகின்றன. ஒளிமிகுதியால் தாவரங்களில் ஆக்சின் எனப்படும் வளர்ச்சி ஹார் மோனின் அளவு குறைகிறது. அதனால் தாவரங் களின் வளர்ச்சி வீதமும் மாறுபடும். போதுமான ஒளி இல்லாத டங்கள் அல்லது இருளில் உள்ள தாவரங் கள் வளர்ச்சி ஹார்மோனைப் பெருமளவில் சுரக்கின் றன. அதனால்தான் அவை வெளுப்பான நீண்ட வளைவற்ற தண்டுகள் பெற்றுக் குறைவான இலை சில காணப்படுகின்றன. களுடன் கூட்டு வேதிப் பொருள்கள் ஒளியினால் பாதிப்படைவதால் தாவரங் களின் சில திசுக்களும், சில உறுப்புகளும் மாறுபாடு களுக்கு உள்ளாகின்றன. ஒளி மிகுவதால் இலையின் அமைப்பு, குறிப்பாக அவற்றின் கடினத்தன்மை மிகுதியாகிறது. மேலும் ஒளியின் அளவிற்கும், பூக்கள், பழங்கள், விதைகள் ஆகியவற்றின் ஆக்கத்திற்கு மிடையே நெருங்கிய தொடர்புள்ளது. எடுத்துக் காட்டாக, குறைந்த விரவிய ஒளி (diffused light) பெறும் தாவரங்களில் தண்டுப்பகுதி நன்கு வளர்ச்சி அடைகிறது. மேகங்கள் நிறைந்த கார்காலம்-காரட், உருளை, பீட்ரூட், டர்னிப் போன்றவற்றின் வளர்ச் சிக்கு ஏற்ற காலமாகும். பல தாவரங்களின் வளர்ச் சிக்கும், பூக்கும் தன்மைக்கும், ஒளி இருள்கால அளவு (light dark period) இன்றியமையாததாக உள்ளது. இதன் காரணமாகத் தாவரங்களை மூன்று பிரிவு களாகத் தொகுத்துள்ளனர். அவையாவன: மிகு பகற்பொழுதுத் தாவரங்கள். இவை ஒரு நாளின் 24-மணி நேரத்தில், 12 மணிக்குமேல் பகலாக உள்ள காலங்களில் பூக்கும் தாவரங்களாகும் (முள்ளங்கி, உருளைக்கிழங்கு). குறு பகற்பொழுதுத் தாவரங்கள். இவை நாளின் 24 மணிநேரத்தில் 12-மணி நேரத்திற்குக் குறைவான பகற்பொழுதுடைய அதாவது இருள் காலம் 12 மணிக்கு மேல் இருக்கும் காலத்தில் பூக்கும் தன்மையுடையவை. (எ.கா. பருப்புவகைகள், புகை யிலை). சமபொழுதுத் தாவரங்கள். இவை 24-மணி நேரத் தில் பகல் இரவுக் கால அளவின் மாறுபட்டால் பெரிதும் தாக்கமடையாதவை. (எ.கா. தக்காளி) தற்காலக் கருத்துப்படி ஒளியுள்ள காலத்தை விட ஒளியற்ற இருட்காலமே சிறப்புத்தன்மை பெறுகிறது. முழுத்தாவரங்களோ அவற்றின் பகுதிகளோ ஒளியால் ஈர்க்கப்படுகின்றன. தண்டுப் பகுதி ஒளியை நோக்கிச் செல்லும் வேர்கள், இருளை நோக்கிச் செல்லும் நேர் ஒளி -ஈர்ப்புத்தன்மையும் (positive phototropism) எதிர் ஒளி - ஈர்ப்புத் தன்மை யும் (negative photolropism) உடையன. முளைக் கும் விதைகளும் ஒளியால் தாக்கப்படுகின்றன. ஒளி, தாவரங்களில் தோற்றுவிக்கின்றது. எடுத்துக்காட்டாக இலைத் துளைகள் திறந்து மூடுதல், சுவாச அளவு வேறுபடு சில மறைமுக விளைவுகளைத் தல், வளர்சிதை மாற்றவீதம் (metabolic rate) வேறு படுதல் போன்றவற்றைக் கூறலாம். விலங்குகளில் ஒளி விளைவு- விலங்குகளின் வாழ் வில் ஒளி பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்து கிறது. இதன் செயலாதிக்கம் (influence) செல்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்கள், வளர்ச்சி நிறத் துகளாக்கம் (pigmentation) இடப்பெயர்ச்சி, இனப் பெருக்கம் வாழ்க்கைச் சுற்று. பருவகால இடப் பெயர்வு (seasonal movement) வலசை போதல் உயிரியக் கடிகை (biological clock) ஆகியவற்றில் வெளிப்படும். உயிரிகளிலுள்ள அடிப்படைப் பொருளான புரோட்டோப்பிளாசம் என்னும் உயிர்ப்பொருள் பல புறப்பாதுகாப்பு அமைப்புகளுடன் செல்களாக உருப்பெற்றிருந்தாலும், மிகு ஒளி, செல்களைத் துளைத்துக் கொண்டு புரோட்டோப் பிளாசத்தில். மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இதனால், புரோட்டோப்பிளாசத்தில் தூண்டுதல்கள், செல் செயல்பாடு மிகுதல், அயனிகளாதல், வெப்பமிடுதல் போன்றவை நிகழ்கின்றன, புற ஊதாக் கதிர்கள் பல உயிரிகளின் செல்களில் குறிப்பாக டிஆக்சிரிபோ நியூக்கிளிக் அமிலம் (DNA) எனப்படும் மரபியல் பொருளில் திடீர் மாற்றங்களைத் தோற்றுவிக் கின்றன. வாக விலங்குகளின் வளர்சிதை மாற்ற அளவும் ஒளியால் தாக்கப்படுகிறது. வரம்பிற்கு மேற்பட்ட ஒளி, நொதியின் செயல் திறனை உயர்த்திப் பொது வளர்சிதை மாற்றத்தின் அளவையும், உப்பு, தாது உப்புக்களின் கரைதிறனையும் பெருக்குகிறது. ஆனால் வளிம நிலையிலுள்ள பொருள்களின் கரை திறன் மிகுதியால் குறைகிறது. ஒளி குன்றிய அல்லது ஒளியற்ற வாழுமிடங்களாகிய குகைகளில் வாழும் விலங்குகள் குறைந்த அளவு இயக்கமுடையவையாக இருப்பதற்கு அவற்றின் குறைவான வளர்சிதை மாற்றமே காரணமாகும். விலங்குகளில் வளர்ச்சி யின் அளவு ஒளியால் கூடவோ, குறையவோ செய்ய லாம். விலங்குகளில் நிறமிகள் அல்லது நிறத்துகளின் ஆக்கத்திற்கு ஒளி பெரிதும் பயன்படுகிறது. ஒளி ஆற்றல், பல வேதிமாற்றங்களின் மூலம் நிறத்துக்கள் களைத் தோற்றிவிக்கிறது. குகைவாழ் விலங்குகள் நிறமற்ற நிலையில் உள்ளதற்கு ஒளியற்ற சூழ் நிலையே காரணமாகும். மேலும் இங்குக் காணப் படும் பார்வையற்ற, நிறமற்ற, இரு வாழ்விகள் (amphibians) மீன்கள் போன்றவற்றை, ஒளியுள்ள சூழ்நிலைக்கு மாற்றினால் அவற்றில் நிறமும், பார்வை புலனுறுப்புகளும் தோன்றுகின்றன. உடலுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள், சூழ்நிலையுடன் இயைந்த தன்மையைக் கொடுத்து