ஒளி உயிரியல் விளைவு 687
விலங்குகளை வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறச் செய்து வாழ்நாளை அதிகரிக்க உதவுகின்றன. புவியின் பனிநிறைந்ததுருவப் பகுதிகளில் வாழும் சில பாலூட்டிகள் குளிர்காலத்தில் வெண்மையான தோலைப் பெற்றுள்ளன. ஆனால் இவற்றின் நிறம் கோடைக்காலத்தில் சூரிய ஒளியில் நிறத்துகள்களைப் பெற்றுப் பழுப்பாகிறது. வெப்பப்பகுதியில் வாழும் மனிதர்களின் நிறம் கருமையாக இருக்க அவற்றின் தோலில் உண்டாகும் மெலானின் (melanin) என் னும் நிறத்துக்கள் ஆக்கத்திற்கு ஒளி உதவுகிறது. ஒளி யற்ற ஆழ்கடல் பகுதியில் வாழும் விலங்குகளில் நிற மிகள் காணப்பட்டாலும் பல வண்ணத்தன்மை இருப் பதில்லை. ழை சில விலங்குகளில் ஒளிக்கும், ஒளியால் அவ்விலங் குகளில் ஏற்படும் இயக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒளியால் இவற்றின் வேகம் பாதிக்கப் படுகிறது. இதற்கு ஒளிசார் இயக்கம் (photokinesis ) என்று பெயர். யூக்ளினா போன்ற ஒரு செல் உயிரிகள் ஒளியை நோக்கி நிலை கொள்வதற்கு ஒளிசார்நாட்டம் (phototaxis) என்றும், மாறாக அதன் கசை (flagellum) அல்லது குழி உடலிகளின் (coelenterates) நிலையான பாலிப்புகள் ஒளியை நோக்கி ஈர்க்கப் படுவதற்கு ஒளி ஈர்ப்புத் தன்மை (phototropism) என்றும் பெயர். வானிலுள்ள ஒளிவிடும் விண்மீன் களின் நிலைகளுக்கு ஏற்ப உயிரிகளின் நிலை கொள் ளும்தன்மையும் குறிப்பிடத்தக்கது. பகல் - இரவுப் பொழுதில் நாள்தோறும் பருவ காலந்தோறும் அல்லது ஆண்டுதோறும் ஏற்படுகின்ற மாறுதல்களின் காரணமாக உயிரிகளின் செயல்முறை நடத்தை, துலங்கல் (responses) ஆகியவற்றில் காலவாரி தோன்றும் வேறுபாடுகள் ஒளி சார்ந்த நிகழ்வுகள் (photoperiodism) எனப்படுகின்றன. இதன் விளைவாகத் தாவரங்களில் பூக்கள் மலர்தலும், விலங்குகளில் இனப்பெருக்க இச்சை தோன்றுதலும். பறவைகளில் வல்சை போதலும் நிகழ்கின்றன. சில பருவங்களில் 24-மணி நேரம் கொண்ட ஒரு நாளில் பகல்-இரவு நேரக்கால மாறுபட்டால் சில பாலூட்டிகள் பறவைகளில் வலசை போதல் இனப் பெருக்கம் செய்தல். தோல், இறகு முதலிய வற்றின் நிறம் மாறுதல் ஆகியவை நிகழ்கின்றன. இவை ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் ஒரு தொடர்ந்து நடைபெறும் செயல்கள். இந்த விளைவு களை மாறுபட்ட காலங்களில், செயற்கை ஒளியைக் இனப் கொண்டு தூண்டித் தோன்றச் செய்யலாம். பெருக்கத்திற்காக இளவேனிற்காலத்தில் பறவைகள் வடபுலத்தை நோக்கி வலசைபோவதற்கு முன்னர், அவற்றின் உடலில் குறிப்பாகஇனப்பெருக்க உறுப்பு களில் பல உடற்செயலில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றின் உடலில் பெருவளவில்கொழுப்பு சேமிக்கப் படுகிறது. குளிர்காலத்தில் செயற்கையாக ஒளிக் . ஒளி உயிரியல் விளைவு 687 காலத்தைத் தோற்றுவித்துப் பறவைகளை வட புலம் நோக்கி வலசை போகச் செய்யலாம். பல ஆய்வுகளிலிருந்து பருவகாலங்களில் ஏற்படு கின்ற உடற்செயல் மாற்றங்களுக்கும் அக்காலங் களில் உள்ள ஒளிக்கால அளவிற்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகிறது. குறைந்தது ஒன்பது மணி நேரப்பகற்பொழுது, இச் செயலைத் தூண்டத் தேவைப்படுகிறது. இந்தத் தூண்டல் பகற் பொழுது மிகுந்துள்ள நாள்களில் விரைவாகவும், பகற்பொழுது குறைந்துள்ள நாள்களில் மெதுவாக வும் உள்ளது. சிறிது சிறிதாக உயரக் கூடிய ஒளிக் கால விளைவைவிட நீண்ட பகற்பொழுதிற்கிடையே தோன்றுகின்ற இருள்கால விளைவு மிகுதியான தூண்டுதல்களைத் தோற்றுவிக்கிறது. பெரும்பாலான பறவைகள், பாலூட்டிகள் சில முதுகெலும்பிகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் இனப்பெருக்கம் நடைபெறும். செயற்கையாகப் பகல் நேரத்தை (ஒளிக்காலத்தை) தேவைக்கேற்ப மாற்றிப் பருவமிலாக் காலத்தில் கூட விலங்குகளில் இனப்பெருக்கச்செயல்களை தூண்டிவிட முடிகிறது. இயல்பாக இலையுதிர்காலத்தில் இனப் பெருக்கம் செய்யக்கூடிய விலங்குகளில் குறைவான ஒளிக்காலம் அல்லது குறைந்த பகற்பொழுதுடைய நாள்களைத் தொடர்ந்து நீண்ட பகற்பொழுது உடைய நாள்கள் சில வகை விலங்குகளில் வருவது பயனுடையதாக இருக்கும். இளவேனிற்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் நீண்ட பகற் காலமுடைய நாள்களைக் குறுகிய பகற்காலமுடைய நாள்கள் பின் தொடர்தல் மிக்க பயன் அளிக்கும். தெற்குக் கோளத்திலிருந்து வடக்குக் கோளத் திற்கோ, வெப்பப்பகுதியிலிருந்து மித வெப்பப்பகு திக்கோ எடுத்துச்செல்லப்பட்ட சில பறவைகளிலும் சில பாலூட்டிகளிலும் பகல் - இரவுக் கால வேறுபாடு களின் பாதிப்புகள், உண்டாகின்றன. சில முதுகெலும் பற்ற விலங்குகளான நத்தைகள் ஓட்டுடலிகள், பூச்சி கள் முதலியவற்றில் ஒளி-இருள் கால விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. . ஒளிக்காலத்தன்மைக்கும் இனப்பெருக்கச் சுற்றுக் குமிடையேயுள்ள தொடர்பை விளக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒளி பார்வைப் புலனுறுப்பாகிய கண்களில் தூண்டல்களைத் தோற்று விக்கிறது. அவை மூளையை அடைந்து தனித்தன்மை வாய்ந்த ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் மூளையின் அடிப்பகுதியிலுள்ள நாளிமில்லாச்சுரப்பியாகிய பிட்டியூட்டரியைத் தூண்டி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கின்றன. இவை இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றன.இங்கும் ஒளி உடைய காலத் தைவிட, ஒளியற்ற காலமே சிறப்புப் பெற்றுள்ளது.