பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி எதிரிணையம்‌ 689

ஒளி எதிரணையம் 689 k - உள்ளீடு kxx + kyy + kzz எனக் கொள்ளலாம். எதிரொளிக்கப்பட்ட கற்றையை k- வெளியேற்றம் என்னும் திசையினால் குறிக் கலாம். எதிரொளிக்கப்படும் த்திசையனின் x, y திசைகளில் மாற்றம் எதுவும் இராது. திசையில் மாற்றம் உண்டாகும். எனவே, k- வெளியேற்றம் = kØx + kyy ஆனால் kzz எனக் கொள்ளலாம். ஆடியின் தளத்திற்கு இணை யான திசைகளில் (x,y) மாற்றம் ஏற்படாமல், அதன் செங்குத்துத் திசையில் (Z) மட்டும் மாற்றம் ஏற்பட் டுள்ளது. ஆடியைத் தகுந்தவாறு சுழற்றி அதில் விழும் ஒளிக்கற்றையைத் தேவையான திசைக்குத் திருப்பலாம். ஒளி எதிரிணைய ஆடியில் (படம். ஆ) விழும் ஒளிக்கற்றை முழுமையாகத் திசைமாற்றம் செய்யப் பட்டு எதிரொளிக்கப்படுகிறது. எனவே. k- உள்ளீடு = - k வெளியேற்றம் விளக்க என்னும் சமன்பாட்டால் இந்நிகழ்ச்சியை லாம். விழுகற்றை விழுபாதை மீது அப்படியே எதிர்த் திசையில் மீண்டும் எதிரொளிக்கப்படுகிறது என்பதை இச்சமன்பாடு குறிக்கிறது. டவை. எதிரிணைய அலைகளின் பண்புகள். ஒளி எதிரி ணைய அலைகள் வியப்புப் பண்புகள் கொண் அவ்வலைகள் செல்லும் பாதையில் ஓர் உடைந்த கண்ணாடித் துண்டுபோன்று ஒளிப்பிறழ்ச்சி அல்லது குறைவு (distortion) தோற்றுவிக்கும் எப் பொருள் வைக்கப்பட்டிருந்தாலும், வகை மாற்றம் நிகழாமல் ஆடியில் விழும் கதிர் அப்படியே மீண்டும் பெறப்படுகிறது. இந்நிகழ்ச்சி படம் 2இல் விளக்கப்பட்டுள்ளது. ஓர் ஆப்புப் போன்ற வடிவம் உள்ள சிறுகோணக் கண்ணாடிப் பட்டகம் ஒளி செல்லும் பாதைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது (படம் 2 அ). இங்கு, எதிரொளிப்பில் மாற்றம் எதுவும் இல்லை. இப்போது ஒளி செல்லும் பாதை யின் குறுக்கே அப்பட்டகம் நகர்த்தப்படுகிறது.(படம் 2ஆ). இப்போதும் எதிரொளிப்பில் மாற்றம் எதுவும் இல்லை. பட்டகத்தில் விழும் கற்றையில் விலக்கம் (refraction) ஏற்பட்டு, எதிரிணைய ஆடியில் விழுகிறது. கற்றைப் பட்டகத்தின் அதே புள்ளிக்கு மீண்டும் எதிரொளிக்கப்பட்டுப் பட்டகத்தால் திசை திருப்பப்பட்டுச் சென்ற பாதையிலேயே திரும்பி வருகிறது. எனவே, இத்தகைய அலைகள் குலைவு உண்டாக்கும் ஊடகத்தால் சிறிதும் குலைக்கப்படுவ தில்லை. எதிரிணைய அலைகள் மூலம் தரம் வாய்ந்த ஓர் ஒளிக் கற்றையைத் தரம் குறைந்த ஒளிக் அ.க. 6-44 படம் 2. படம் 2. (1) ஒளி எதிரிணைய ஆடிக்கும் ஒளித்தோற்று வாய்க்கும் அருகில் ஆப்பு (wedge) போன்ற பட்டகம் வைக்கப் பட்டுள்ளது. ஒளிக்கற்றை ஆடியில் பட்டு அப்படியே ஒளித்தோற்று வாய்க்குத் திரும்புகிறது. (ஆ) ஆடிக்கும் தோற்றுவாய்க்கும் இடையில் பட்டகம் வைக்கப்பட்டுள்ளது. பட்டகத்தால் ஒளி விலகல் ஏற்படுகிறது. மேலும் ஒளிக்கற்றை தோற்றுவாய்க்கே திருட்பப்படுகிறது. ஒளிப்பாதையில் பட்டகத்தைப் புகுத்தாவிட் டால் உண்டாகும் விளைவே ஏற்படுகிறது. கற்றையின் வழியாகச் செலுத்தினாலும் கற்றையின் தரம் சிறிதும் மாறுபடுவதில்லை. ஓர் எளிய ஆடியின் முன்னால் ஒருவர் நின்றால் அவர் தம் முழு முகத்தையும் நன்றாகப் பார்க்க முடியும்; ஆனால் ஓர் எதிரிணைய ஆடியின் முன் நின்றால் தம் முகத்தைக் காண முடியாது. கண் பாவையை மட்டுமே பார்க்கமுடியும். முகத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து புறப்பட்டு ஆடியில் ஒளி மட்டும் எதிரொளிக்கப்பட்டு மீண்டும் அந்தப் புள்ளியையே அடைகிறது. எனவே, கண்ணுக்கு வெளியே உள்ள பிற பகுதிகள் காட்சியில் இடம் பெறுவதில்லை. காண்போர்க்கும் ஆடிக்கும் இடையே உருக்குலைவு உண்டாக்கும் ஒரு பொருளைப் புகுத்தினாலும் காட்சியில் மாற்றம் எதுவும் உண்டாவதில்லை. இத்தகைய பண்புகளால், ஒளி செல்லும் பாதையில் இடையூறு விளைவிக்கும் எத்தகைய ஒளிபுகுபொருள் கள் இருந்தாலும், ஒளிக்கற்றையைக் குலைவின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஒளி எதிரிணைய அலைகளைத் தோற்றுவிக்கும் முறை. ஒரு சமதள அலையை எளிதில் ஒளி எதிரிணைய அலையாக மாற்றலாம். எத்திசையில் சமதள அலை பரவுகிறது என்பதை அறிந்து, அத்