692 ஒளி எலெக்ட்ரான் நிறமாலையியல்
692 ஒளி எலெக்ட்ரான் நிறமாலையியல் மற்றொரு மட்டு வுடைய ஒளித்துடிப்பைப் பெறுவதோடு மல்லாமல் அதை மிகச்சிறிய இலக்கின்மீது சரியாக ஒருமுகப்படுத்தவும் முடிகிறது. மிகை வெப்பம் கொண்ட லேசர்பிளாஸ்மா (laser plasma) இவ்வாறு உண்டாக்கப்படுகிறது. லேசர் பிளாஸ்மாவிலிருந்து. புற ஊதாக் கதிர்களையும், கதிர்களையும் எக்ஸ் பெறலாம். நுண்ணிய திசைநோக்கு கோண்ட இத் தகைய ஆற்றல் மிக்க லேசர் கற்றைகள் லேசர் உருகி (laser fusion) முறை ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன் படுகின்றன. எதிரிணைய அலைகள், ஓலோகிராஃபி (holog raphy) எனப்படும் முப்பரிமாண முழுமைப் பதிவு உருவம் தோற்றுவிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. இதற்கு இயக்க ஓலோகிராஃபி என்று பெயர். எளிய ஓலோகிராஃபி முறையில் ஆற்றலுள்ள லேசர் கற்றையின் ஒரு பகுதி நேராகவும் பார்வை அலை பொருள் ஓலோகிராம் பிறழ்ச்சிஊடகம் (EX) ஓலோகிராம் ஒளியூட்டி பிறழ்ச்சியற்ற முழுமைப் பிம்பம் ஒரு பகுதி உருவம் பெறவேண்டிய பொருளால் எதிரொளிக்கப்படும் ஓர் ஒளிப்படத் தகட்டையும் அடைகின்றன. இவ்வாறு பெறப்படும் ஒளிப்படப் பதிவு ஒலோகிராம் (hologram) எனப் படும். இயக்க ஓலோகிராஃபி முறையில், ஒளிப்படத் தகட்டிற்கு முன்னால் பிறழ்ச்சி உண்டாக்கும் ஓர் ஊடகம் வைக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் ஓலோகிராஃபியை மற்றோர் ஒளிக்கற்றையால் ஒளி யூட்டினால், அதனின்றும் குலைவற்ற தூய உருவ மும் பிறிதோர் அலையும் (reconstructed reference wave) பெறப்படும். இவ்வுருவம் முப்பரிமாண உருவ மாக அமையும். இவ்விளைவைப் படம் 5 விளக்கு கிறது. ஒளி எதிரிணைய அலைகளைப் பயன்படுத்தி, வில்லையின் உதவியில்லாமல் ஒளியை ஒருமுகப்படுத்தி உருவம் தோற்றுவிக்கும் ஒரு புதிய முறைகண்டறியப் பட்டுள்ளது. அச்சுத் துறையில் பயன்படும் இம்முறை லேசர் ஒளிப்பட லித்தோகிராஃபி எனப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒளி அலைகளை எளிதில் பரப்ப எதிரி ணைய அலைகள் பெரிதும் உதவுகின்றன. தற்போது ஒளியியல் கணிப்பொறிகள், (optical computers), ஒத் திசைவு வேசர் அமைப்புகள் (laser resonator design), நேர் கோட்டிலமையாப் பண்புகள் கொண்ட லேசர் நிரல் அளவிகள் (laser spectrometers). நுண்ணோக்கி கள் குறுக்கீட்டு விளைவு அளவிகள் (interferometers) முதலிய ஒளியியல் கருவிகளில் எதிரிணைய முறை பயன்படுகிறது. மு.நா.சீனிவாசன் நூலோதி I.J. Bigio et al, Proceedings of Interna tional conference on Laser, STS press Mclean Virginia, 1978, page 532; J.W. Goodnan et al, wave front Reconstruction imaging through random media, Applied Physics LeH, 8, page 311. (ஆ) இரண்டாம் பாாலை அலை படம் 5 இயக்க ஓலோகிராஃபி (dynamic holography) மூலம் முப்பரிமாண முழுஉருத்தோற்றம் தோற்றுவித்தல் (அ) ஒரு பொருளில் பட்டுத் திரும்பும் அலையும், மற்றுமொரு பார்வை அலையும் பிறழ்ச்சி ஊடகத்தின் வழியாக ஒளிப்படத் தகட்டில் விழுகின்றன. இது ஓலோகிராஃப் எனப்படுகிறது.(ஆ) ஒளி வீச்சுப்பெற்ற ஒலோகிராஃபியிலிருந்து குலைவற்ற முழுஉருத்) தோற்றமும் மற்றுமொரு பார்வை அலையும் பெறப்படும். ஒளி எலெக்ட்ரான் நிறமாலையியல் கதிர்வீச்சுப்பட்ட பொருளிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிப்படும் புற ஒளி மின் விளைவு 1887 இல் ஹெர்ட்ஸ் என்பாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1905 இல் ஐன்ஸ்டீன் தம் ஒளியின் குவாண்ட்டக் கொள்கையை வெளியிட்டார். ஆனாலும் 1945 இல் தான் ஒளி எலெக்ட்ரான்களின் நிறமாலையின் மூலம் பொருள்களின் அனைத்து நிலையிலும் எலெக்ட்ரான் கட்டமைப்பை ஆராய முடியும் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அடிப்படையாகிய ஒளி எலெக்ட்ரான்