பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 ஒளிக்கதிர்‌ கோட்டம்‌ (வானியல்‌)

696 ஒளிக்கதிர் கோட்டம் (வானியல்) அப்பால் வெற்றிடம் உள்ளது. ஒரு விண்மீனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர், நேர்கோட்டில் வெற்றிடத்தைக் கடந்து வளிச்சூழலில் புகும்போது வளைகிறது. புவியை நெருங்க, நெருங்க அடர்த்தி மிகுதியாகை யால் மென்மேலும் வளைந்து புவியின் மேற்பரப்பை அடைகிறது. எனவே, காணும் விண்மீன் அதன் மெய்யான டத்திலிருந்து வேறுபட்டு, உயரமான இடத்தில் இருப்பது போல் தென்படுகிறது. E S என்னும் விண்மீன் புவியிலிருந்து பல கோடிக் கணக்கான கிலோமீட்டருக்கப்பால் உள்ளது. எனவே (மிகக் குறைந்த உயரமான) 160 கி. மீ. மேல் உள்ள A இல் இருந்து பார்த்தாலும், புவியில் மேல் உள்ள ல்இருந்து பார்த்தாலும், அதன் உயரம் a ஆகத் தான் இருக்கவேண்டும். ஆனால் SA என்னும் ஒளிக் கதிர் AE ஆக வளைந்து புவியை அடைகிறது. இந்த வளைவரையின் தொடுகோடான ES' திசையில் விண்மீன் காணப்படும். இது மெய்யான உயரம் 2 இலிருந்து r அளவு மாறுபட்டிருக்கும். இது வானியல் ஒளிவிலகல் எனப்படுகிறது. ஒளிவிலகலின் விளைவுகள். நேர் வடக்கே 45° உயரத்தில் இருக்கும் விண்மீனின் உயரம் 45° + T' ஆகத் தெரியும். அது இருக்கும் திசையில் சிறிதும் மாற்றம் ஏற்படாது. பொதுவாக ஒரு விண்மீன் எத்திசையில் இருப்பினும், அத்திசையில் மாற்றம் ஏற்படாது. வான்கோளத் வானியலில் உச்சிப் புள்ளிகள் துருவங்கள் இவற்றின் வழியாகச் செல்லும் வட்டத்தை உச்சி வட்டம் என்பர். இது கிடைநிலை வட்டத்தைக் கிழக்கு, மேற்குப்புள்ளிகளில் வெட்டும். ஒரு விண்மீன் உச்சி வட்டத்தை வடக்கிலோ (S) தெற்கிலோ (S) கடப்பதால் வட்டத்தைக் கடக்கும் காலம் மாறுபடாது. . குத்துயரமும், உச்சித் தொலைவும். உச்சி வட்டத் தில் ZZ ஐ இணைக்கும் அனைத்து வட்டங்களும், IS, க்குச் செங்குத்தாக இருக்கும். ஆகவே, ZM =90° = ZOM விண்மீனின் குத்துயரம் SM = a = SOM அது அதன் உச்சித்தொலைவு ZS = Z = ZOS So N S So Z n Zi Z₁ படம் 4. 54 படம் 5 Z= 90-a என்பது தெளிவு. ஒளிவிலகலின் விளைவாக விண்மீன் S, r அளவு உயர்வாகக் காணப்படுவதால் அதன் உச்சித் தொலைவு " அளவு குறையும். கிடைநிலை ஒளிவிலகல். சூரியன் கிடைநிலை வட்டத்தை அடையும்போது உதயமாகிறது என்பர். ஆனால், ஒளிவிலகல் விளைவாகச் சூரியன் கிடை நிலை வட்டத்துக்கு " கீழே இருக்கும்போதே கிடை நிலை வட்டத்தில் சூரியன் இருப்பதுபோல் காணப் படும். இதுபோல், மேற்குத் திசையில் மறைந்த பின்னும், அதாவது கிடைநிலைவட்டத்தைக் கடந்த