698 ஒளிக்கூண்டு மீன்
698 ஒளிக்கூண்டு மீன் படம் 8. Z₁ -S காசினி வாய்பாடு (Cassinis formula). வானியல் அறிஞர் காசினி புவியைக் கோளமாகவும் ஆனால் அதைச் சுற்றியுள்ள வளிச்சூழலை ஒருபடித்தான (homogeneous) ஊடகமாகவும் கொண்டு 3 f= A tan 2 + B tan என்னும் வாய் பாட்டினை நிறுவினார். ஒலிவிலகலின் விளைவாகச் சூரியனும். சந்திர னும் உதயத்தின்போதும், மறையும்போதும் நீள்வட்ட மாகக் காணப்படும். வட்டவடிவமாக உள்ள இவற் றின் கிடைவட்ட அளவில் மாறுதலின்றியும் செங் குத்துவிட்ட அளவில் குறைந்தும் காணப்படுவதால் இம்மாறுதல் தெரிகிறது. மேலும் வளிம அழுத்தம் மிகுந்தால் ஒளிவிலகல் மிகும் என்றும், வெப்பநிலை உயர்ந்தால் ஒளிவிலகல் குறையும் என்றும் அறியப் பட்டுள்ளது. ஜே. டி. சாமுவேல் ஒளிக்கூண்டு மீன் எலும்பு மீன்கள் வகுப்பில் ஆக்டினோட்டெரிஜியத் துணை வகுப்பைச் சேர்ந்த ஒளிக்கூண்டு மீன்கள் ஏறத்தாழ 200-1000. மீ. வரை ஆழமான நீர்ப்பகுதிகளில் 250 க்கும் மேற்பட்ட இனங்கள் கடல் காணப்படுகின்றன. நுக்ட்டோஃபிடே குடும்பத்தையும் மிக்டோஃபிஃபார்மிஸ் வரிசையையும் சேர்ந்த ஒளிக் கூண்டு மீன்கள் டீலியாஸ்ட்டியை (teleostei) என்னும் மேல்வரிசையில் அடங்கும். ஒளிக்கூண்டு மீன்கள் (lantern fish) பழுப்பு, சாம்பல், வெள்ளி நிறங்களில் காணப்படுகின்றன. வை 2.5 செ. மீ. நீளம் வரை வளர்கின்றன. வற்றின் கண்கள் பெரியவை. மிகுதியான ஒளி உறுப்புகளைப் பெற்றிருப்பதால் இவற்றிற்கு ஒளிக் கூண்டு மீன்கள் அல்லது விளக்கு மீன்கள் என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மிக்டோஃபம் இன்டிகஸ் (Myerophum indicus) லாம்ஃபானிக்டஸ் (lampanyctus) Gumara பொதுவாகக் காணப் படும் ஒளிக்கூண்டு மீன்களாகும். உடலின் இருபுறங்களிலும் சிறிய முத்துப் பொத்தான்களைப் போன்ற ஒளி உறுப்புகள் நன்கு புலப்படும்படியாக ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் அமைந்துள்ளன. இவ்வுறுப்புகள் பலவகைகளில் ஒளிக்கூண்டு மீனின் வாழ்விற்குத் துணையாகின்றன. ஒவ்வோரினமும் குறிப்பிட்ட அமைப்புள்ள ஒளி உறுப்புகளைப் பெற்றுள்ளமையால் பிற இனங்களி லிருந்து தாம் சார்ந்த இனத்தைக் கண்டுகொள்ள முடியும். ஆண் மீன் தன் வால் துடுப்பின் மேற் பகுதிக்கருகில் ஒளிமயமான பட்டைகளைப் பெற் றுள்ளது. மாறாகப் பெண் மீன் இவ்வகையான பட்டைகளை வால் துடுப்பின் கீழ்ப்பகுதியில் பெற் றுள்ளது. இவ்வேறுபாடு ஆண், பெண் மீன்கள் ஒன்றையொன்று அடையாளங் காணத் துணையாக உள்ளது. மேலும் ஆண் மீன்கள் எதிரிகளை அச்சுறுத்த வும், ஒளி உறுப்புகளைப் பயன்படுத்துகின்றன என்று வில்லியம் பீப் என்பார் கருதுகிறார். ஒளி உறுப்பு களினின்று வரும் வெளிச்சம் மிதவை உயிரினங்களை (planktons) ஈர்க்கவல்லது என்பதால் மிதவை உயிரி னங்களை ஒளிக்கூண்டு மீன்கள் எளிதில் இரையாக உட்கொள்ள முடிகிறது. ஒருவகை ஒளிக்கூண்டு மீன் களில் ஒளி உறுப்புகள் நாக்கின் மீது அமைந்துள் ளன. இரை நேராக வாயினுள் ஈர்க்கப்படுவதற்கு வை மிகவும் பயன்படுகின்றன. பெரும்பான்மை ஒளிக்கூண்டு மீன்களின் உடல் பகுதிகளில் உள்ள ஒலி உறுப்புகளைத் தவிர தலையின் முன் பகுதியிலும் பல பெரிய ஒளிப்பட்டைகள் காணப்படு கின்றன. இவை சுரங்கத் தொழிலாளி தலையில் சுமக்கும் விளக்கைப்போன்று செயல்படுகின்றன. அவை ஓரிரு அடி வரை ஒளிக்கதிர்களை முன் னோக்கிச் செலுத்துகின்றன. யான ஒவ்வோர் ஒளி உறுப்பின் மையத்திலும் ஓர் ஒளிச்சுரப்பி (luminous gland) உள்ளது. சுரப்பியைச் சுற்றியுள்ள வெள்ளிமயமான உறை, வெளிப்படுகிற ஒளியை எதிரொளிக்கிறது. ஒளிச்சுரப்பியின் முன்