ஒளிக்கோட்டம் 703
செறிவு ஒளிக்கோட்டம் 703 1 inim P படம் 7. ஒளிக்கோட்டப் படிவம் கீற்றணி பகுதிறன். ஓர் ஒளியியல் கருவியின் பகுதிறன் என்பது அருகருகே உள்ள இரு பொருள்களின் பிம் பங்களைத் தனிப்படுத்திக் காட்டும் திறனாகும். வடிவ ஒளியியல் விதிகளின்படி ஒரு தொலைநோக்கி அல்லது நுண்ணோக்கியின் பகுதிறன் என்பது எந்த அளவிற்கு அது சிறிய புள்ளியின் வடிவத்தைக் காண முடியும் என்பதாகும். ஆனால் கொள்கை அளவில் பகுதிறனுக்கு முடிவு கட்டுவது கோட்ட விளைவு தான். கோட்ட விளைவின்படி எந்த ஒரு பொருளுக் கும் வடிவம் ஒரு புள்ளியாக இல்லாமல், குறிப்பிட்ட அகலத்துடன் உள்ள நடுப்பெருமத்துடன் கூடிய ஒரு படிவமாகும். எனவே இரு பொருள்களின் இடையே உள்ள தொலைவு கோட்டப்படிவத்தின் பிம்பங் களைத் தனிப்படுத்திப் பார்க்க இயலாது. ஒரு படிவத் தின் நடுப்பெருமம் மற்றதன் முதல் துணைச்சிறுமத் துடன் இணைந்திருக்குமானால் அவ்விரு வடிவங்களும் பகுக்கப்பட்டுள்ளனவாகக் கருதப்படும் என்பது லார்டு ரெலே என்பாரின் கோட்பாடாகும். இக்கோட் பாட்டைப் பயன்படுத்திப் பல்வேறு ஒளியியல் கருவி களின் பகுதிறனைக் காணலாம். தொலைநோக்கியின் பகுதிறன் பொருளருகு வில்லையின் விட்டத்தினைப் பொறுத்திருக்கும். நுண்ணோக்கியின் பகுதிறனை அதிகரிக்கப் பொருளருகு கருவியின் இடைவெளி எண் மதிப்பை அதிகரிப்பதும் பொருளை ஒளிப்படுத் தும் ஒளி அலைநீளத்தைக் குறைப்பதுமாகும். இடை வெளி எண் மதிப்பை அதிகரிக்க எண்ணெய் மூழ்கிப் கருவியினைப் பொருளருகு பயன்படுத்துவதும், பொருளை ஒளிப்படுத்தப் புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளன. இக் கருத்தின் அடிப்படையிலேயே எலெக்ட்ரான் நுண் ணோக்கி அமைக்கப்பட்டுள்ளது. முப்பட்டகம் அல்லது கீற்றணியைப் பொறுத் தவரை பகுதிறன் என்பது அடுத்தடுத்த இரு நிற மாலை வரிகளைப் பிரித்துக் கொடுக்கும் திறனாகும். முப்பட்டகத்தின் பகுதிறன் அதன் அடிப்பக்கத்தின் நீளத்தினையும் குறிப்பிட்டபட்டகப் பருப்பொருளுக்கு நிறத்தினை ஒட்டிய ஒளிவிலகல் எண் மாறும் விகிதத் தினையும் பொறுத்தது. கீற்றணியின் பகுதிறன் அதன் வரி எண்ணிக்கையையும், நிறமாலையின் படியினை யும் பொறுத்தது. 2 ப்ரெனெல் ஒளிக்கோட்டம். ப்ரெனெல் 1815 இல் ஹைஜயனின் அலைக் குட்டிகளையும் ஒளிக் குறுக் கீட்டு விளைவினையும் கொண்டு கொண்டு முதன்முதலில் ஒளிக்கோட்டத்தையும், ஒளியின் நேர்கோட்டுப் பரவ லையும் விளக்கினார். ப்ரெனெலின் முக்கிய கோட் பாடுகளாவன அலைமுகப்பு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ப்ரெனெல் மண்டலங்கள் என வழங்கப் படுகின்றன. ஒரு புள்ளியில் செறிவு என்பது பல்வேறு மண்டலங்கள் ஏற்படுத்தும் துணை அலைகளின் வீச் சுத் தொகுப்பினைப் பொறுத்தது. ஒரு புள்ளியில் காணப்படும் செறிவு மண்டலத்திருந்து புள்ளி எவ் வளவு தொலைவிலிருக்கிறது என்பதைப் பொறுத்தது. மேலும் மண்டலத்தைப் பொறுத்துப் புள்ளி தாங்கும் கோணத்தையும் பொறுத்தது. அலைமுகப்பின் பின் னோக்குப் பரவலைத் தவிர்ப்பதற்காக, ஒரு புள்ளியில் ஏற்படும் செறிவிற்கு (1+cos 8) நேர்விகிதத்தி லிருக்கும்.இதில் 8 என்பது புள்ளி அச்சுக்கோட்டுடன் தாங்கும் கோணமாகும் (படம் 8), ப்ரெனெலின் அரை அலைவு நேர மண்டலங்கள். ஒளிக்கோட்ட விளைவினை ப்ரெனெல் முறையில் புரிந்துகொள்ளப் பின்வரும் எடுத்துக்காட்டைக் S M N 6 படம் 8. ப்ரெனெல் விளைவு X P