பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌ 49

எக்ஸ் கதிர் ஒளியியல் கண்ணுக்குப் புலனாகும் ஒளியைப் போன்று கண்ணுக்குப் புலனாகாத எக்ஸ் கதிர்களும் மின்காந்த அலைகளாகும். அவ்வாறாயின் இவற்றையும் எதிரொளிக்கவும், விலக்கவும், குறுக்கீடு செய்யவும். விளிம்புவிளைவு மற்றும் முனைவாக்கம் செய்யவும் வேண்டும். கொள்ளச் இந்நிலையில் 1912 ஆம் ஆண்டில் பேராசிரியர் லாவே மிகக் குறைந்த அலை நீளமுடைய எக்ஸ்- கதிர்களுக்கு ஒளியியல் கீற்றணியின் (optical grating element) மூலம் மிகமிகப் பெரியதாக இருக்கக்கூடும். எனக் கருதினார். தக்க ஒரு படிகத்தைக் கீற்றணி யாகப் பயன்படுத்தி எக்ஸ்-கதிர்களை ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியதன் விளை வாக எக்ஸ்-கதிர் ஒளியியல் (x-ray optics ) என்னும் பிரிவு உண்டாயிற்று. லாவே புள்ளிக்கோலம், படிக அணுக்கள், முப்பரி மாண இடத்தில் ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட் பட்டு அமைந்துள்ளன. ஒன்றுக்கொன்று இணையான, அணுச்செறிவு மிக்க பல தளங்களும், அத்தளங்களுக் கிடையே குறுகிய இடைவெளியும் கொண்ட ஒரு கீற்றணியாகப் படிகம் செயல்படுகிறது. இது மிகச் சிறிய மூலத்தைக் கொண்ட கீற்றணியாகும். காரீயப் பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ள எக்ஸ்- கதிர்க்குழாயிலிருந்து வெளிவரும் கதிர்கள். நேர் கோட்டிலமைந்த S.. Sa என்ற காரீயத் தகட்டின் சிறு துளைகளால் செம்மையான மெல்லிய கற்றை யாக்கப்படும். C என்பது தக்கபடி வெட்டப்பட்ட, துத்தநாக சல்ஃபைடு படிகத்துண்டு, கற்றை எக்ஸ் கதிர் ஒளியில் 49 துண்டின் மேல் விழுந்து வெளிவந்து அதன் பின் பக்கம் வைக்கப்பட்டுள்ள ஒளிப்படத் தகட்டின் (P) மீது விழுகிறது. பல மணிநேரப் பதிவிற்குப் பின் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் ஒழுங்கான, சமச் சீரமைவுடன் கூடிய புள்ளிக் கோலம் காணப்பட்டது. இது லாவே புள்ளிகள் எனப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஒளியைப் போலவே எக்ஸ்-கதிர்களும் விளிம்பு விளைவு அடைகின்றன எனக் காட்டியது. இதைத் தொடர்ந்து 1930 இல் பேராசிரியர் லார்சன் என்பார் 6× 10tமீ. அகலமுடைய பிள வின் வழியே எக்ஸ் கதிர்களைச் செலுத்தி விளிம்பு விளைவு வரிகளை உண்டாக்கிக் காட்டினார். பேராசிரியர் லின்னிக் என்பார் லாயிட் ஆடியைப் பயன்படுத்தி எக்ஸ் கதிர்கள் குறுக்கீடு செய்து தரும் வரிவடிவங்களைப் படமெடுத்தார். 1936 இல் பேராசிரியர் பர்க்லா என்பார் ஒளியைப் போலவே எக்ஸ்கதிர்களும் முனைவாக்கம் அடைகின்றன என ஐயத்திற்கிடமின்றிக் காட்டி எக்ஸ் கதிர்கள் ஒளியைப் போலக் குறுக்கு அதிர்வு அலைகளே என நிறுவினார். படிகக்கீற்றணியும், பிராக் விதியும். இப்படத்தில் புள்ளிகள் ரு படிகத்தில் அமைந்த அணுக்களையும், AB, CD, EF என்பன வெவ்வேறு அணுக்கூட்டங் களின் வழியே செல்லும் படிகத் தளங்களையும் குறிக்கின்றன. சில தளங்கள் அணுச் செறிவு மிக்கன வாகவும், சில தளங்கள் அணுச் செறிவு குறைந்த வையாகவும் இருப்பதைக் காணலாம். AB க்கு ணையாசு அமைந்த தளங்கள் எல்லாம் ஒரு குழுவாக அமைந்து ஓர் அளவுள்ள கீற்றணி மூலத்தை யும், CD க்கு இணையாக அமைந்த தளங்கள் குழுவாக அமைந்து மற்றொரு கீற்றணி மூலத்தையும் S₁ Sz படம் 1 கள்