708 ஒளிச்சேர்க்கை
708 ஒளிச்சேர்க்கை வரலாறு. பசுந்தாவரங்களில் நடைபெறும் ஒளிச் சேர்க்கையின் தன்மை பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அறிவியல்உலகத்திற்கு விளங்கிற்று 1772 இல் பிரிஸ்ட்லி என்னும் ஆங்கிலேய வேதியி யலார், விலங்குகளில் செய்த ஆய்வுகளில், அவை வெளியிடும் கார்பன் டைஆக்சைடு தாவரங்களால் தூய்மை அடைந்து மீண்டும் விலங்கினங்கள் வாழ்வதற் கேற்ற வகையில் மாற்றமடைகிறதெனக் கண்டார். இன்கென் - ஹௌஸ் என்னும் ஆஸ்திரிய மருத்து வர் 1774 இல் தாம் செய்த ஆய்வுகளிலிருந்து, கார் பன் டை ஆக்சைடு தூய்மையாவற்குத் தாவரங்களி லுள்ள பச்சை நிறமிகளே காரணம் என்பதையறிந் தார். 1814 இல் டிசோசூர் என்னும் பிரெஞ்சு அறிவி யலார், இச்செயலின்போது கார்பன் டை ஆக்சைடும் நீரும் உட்கொள்ளப்பட்டுச் சூரிய ஒளியால் வேதி மாற்றம் செய்யப்பெற்று ஆக்சிஜன் வெளியேற்றப்படு கிறது என்று கண்டறிந்தார். இதனால் தாவரத்தின் எடை கூடுகிறதென்றும் கண்டுபிடித்தார். பத்தொன் பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பல ஆய்வு களின் பயனாக ஒளிச்சேர்க்கை உணவுப்பொருளைத் தொகுக்கும் செயலென்றும் முதலில் இதில் ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள் உண்டாகிறதென்றும் தெளி வாயின. பல ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றும் இதன் முழு நுட்பம் இதுவரை முற்றி லும் உணரப்படவில்லை. தேவையான பொருள்கள். இச்செயலில் தாவரங் கள் சேர்க்கும் பொருள்கள் கார்பன் டைஆக்சைடும் நீரும் ஆகும். நிலத்தடி நீர் வேர்களால் உறிஞ்சப் பட்டுத் தண்டு இலைக்காம்பு வழியாக இலையின் மையப்பகுதியிலுள்ள நடுச்சோற்றுச் செல்களை வந்த டைகிறது. தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் நீரில் ஒரு பகுதி மட்டுமே உணவு தயாரிக்கப் படுன்படு கிறது. எஞ்சியுள்ன நீரில் ஒரு பகுதி இலை. தண்டு முதலிய உறுப்புகள் தளர்வுறாமல் பருத்தோ நிமிர்ந்தோ அகன்றோ இருப்பதற்குப் பயன்படு கிறது. பெரும்பகுதி நீர் இலைத்துகள் வழியாக ஆவி யாக மாறிக் காற்றில் கலந்து விடுகிறது. ஒளிச்சேர்க் கைக்குத் தேவையான கார்பன் டைஆக்சைடு முழுதும் காற்றிலிருந்தே பெறப்படுகிறது. காற்றில் இதன் அளவு மிகக்குறைவு (0.03%) விலங்குகளும். தாவரங் களும் மூச்சுவிடுவது, பொருள் சிதைந்து அழிவது, எரிவது போன்றவற்றால் கார்பன் டை ஆக்சைடு தோன்றிக் காற்றில் சுலக்கிறது. பொதுவாகக் காற்றும் கடலும் சேர்ந்து காற்றி லுள்ள கார்பன் டைஆக்சைடின் அளவைச் சமநிலை யில் வைக்கின்றன. ஒரு தாவரத்தின் எடையில் 45% கார்பன் பொருளாகும். தாவரம் தனக்குத் தேவை யான கார்பனைக் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சை டிலிருந்தே பெறுகிறது. கார்பன், ஆக்சிஜன், ஹைட் ஜன், நிலத்தடி நீர் வழியாக வந்த சில தனிமங்கள் தாவரங்களுக்கு மிகவும் தேவையான வேதிப்பொருள் கள் ஆகும். தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் களை இம்மூலப்பொருள்களிலிருந்தே தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைத் துளைகள் வழி யாகக் கார்பன் டைஆக்சைடு இலைக்குள் வருகிறது. மையப்பகுதிச் செல்களில் உள்ள நீரில் கார்பன் டை ஆக்சைடு கரைந்து நீருடன் பச்சையத்தை வந்தடை கிறது. செயல்படுத்தும் காரணி, தாவரங்களில் நீரையும் கார்பன் டைஆக்சைடையும் சேர்க்கும்காரணிபச்சை யம் ஆகும். இதில் பசுங்கணிகள் (chloroplasts) சைட்டோப் உள்ளன. பசுங்கணிகம், செல்லிலுள்ள பிளாசத்திலான, அடர்த்தி மிக்க நுண் உறுப்பாகும். கீழ்நிலைத் தாவரங்களில் பசுங்கணிகம் பெரியதா கவும், மேல்நிலைத் தாவரங்களில் மிகச்சிறியதாகவும் இருக்கும். பொதுவாக இது இலையிலுள்ள கிராதி யடுக்குச் (palisade layer) செல்களில் மிகுதியாக ருக்கும். பச்சையாக உள்ள பிற உறுப்புகளிலும் தைக் காணலாம். . கார்பன், புரதம், ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சிறிது மக்னீசியம் ஆகியவை கொண்ட பச்சையம் சிக்கலானதாகும். இதில் இரும்பும், ஒளியும் தேவைப்படும். ஒளியற்ற இடத்தில் வளரும் தாவரங் களில் பச்சையம் குறைவதால் இலைகள் வெளுத்து விடும். பச்சையத்தில், பச்சையம், பச்சையம், என இரு வகைப்பொருள்களுள்ளன. பச்சையம் நீலப் பச்சை நிறத்துடன், மிகுதியாக இருக்கும். பச்சை யம்பூ, மஞ்சள் பச்சை நிறம் கொண்டது. இவற்றின் வேதிய வாய்பாடு: பச்சையம்: - C,H,, 0, N, Mg பச்சையம் - C6 Ho Os N4 Mg ஆகும். 8 70 இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினையொத்த பச்சையத்தில் மக்னீசியம் உள்ளது. ஹீமோகுளோ பினில் இரும்பு உள்ளது. இவ்விருவகைப் பச்சையங் களிலும் உடனொளிர்தல் (fluorescence) என்னும் இயற்பியல் பண்பு உள்ளது. பச்சையம் வழியாகச் சூரிய ஒளி ஊடுருவி வரும்போது ஒரு நிறமாகவும், திலிருந்து எதிரொளித்து வரும்போது வேறு நிற மாகவும் தோன்றும். பச்சையம் ஆல்கஹாலில் கரை யும். மேல் நிலைத் தாவரங்களில் பச்சையத்தோடு சுரோட்டின், இலைமஞ்சள் என்னும் இரு நிறமிகள் உள்ளன. கரோட்டீனில் கார்பனும் ஹைட்ரஜனும் அடங்கியுள்ளன. இலை மஞ்சளில் கார்பன், ஹைட்ர ஜன் ஆக்சிஜன் மூன்றுமுள்ளன. இவை ஒளிச்சேர்க் கைக்குப் பெரிதும் பயன்படுவதில்லை. தாவரங்களில் காணும் மஞ்சள் நிறத்திற்கு இவையே காரணமாகும். விலங்குகளுக்கு மிகத் தேவையான வைட்டமின் A கரோட்டின் அமைப்பை ஒத்தது. இதிலிருந்து தான் வைட்டமின் A உண்டாகிறது. லை முதிர்ந்து