பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌

50 எக்ஸ் கதிர் ஒளியியல் ° ° 0 ° . . . E படம் 2 தரும். இவ்வாறு ஒரு படிகக் கீற்றணி அதன் நிலைக்கு ஏற்றவாறு பல கீற்றணி மூலங்களைக் கொண்ட முப்பரிமாணக் கீற்றணியாகச் செயல்படுகிறது. படி கத்தில் விழுகின்ற ஓர் எக்ஸ் கதிர் இணைக் கற்றை மேற்கூறிய தளங்களினால் எதிரொளிக்கப்பட்டுப் பல்வேறு திசைகளில் செல்வதைப் படத்தில் காணலாம். ஒரு குழுவிலமைந்த பல தளங்களால் எதிரொளிக்கப்பட்ட கற்றைகள் இணையாக வெளி வந்து, ஒன்றன் மீது ஒன்று இணைந்து வலிவூட்டிச் செறிவுமிக்க புள்ளிகளைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய லாவே புள்ளிகளைத் தோற்றுவிப்பதற் கான விதி முறைகளையும் பேராசிரியர் பிராக் என்பவர் பின்வருமாறு பெற்றார். ணையான படத்தில் AB, CD, EF என்பன ஒன்றுக்கொன்று அணுத்தளங்கள். d என்பது இரு தளங்களுக்கிடையே உள்ள இடைவெளி. PQ மற்றும் ST என்பன இணையான இரு கதிர்கள். அவை தளத்தின் மீது i என்னும் சாய் கோணத்தில் பட்டு, முறையே QR, TU என்ற திசையில் எதிரொளிக்கப் படுகின்றன. இந்த எதிரொளிப்பினால் இவ்விரு கதிர்களுக்குமிடையே உண்டாகும் பாதை வேறுபாடு MT + TN என அறியலாம். மேலும் MT TN= d Sini ஆகவே பாதை வேறுபாடு 2d Sind ஆகும். இக்கதிர்கள் ஒன்றின் மீது மற்றொன்று மேற் பொருந்தும் போது பாதை வேறுபாட்டின் அளவிற்கு ஏற்ப, ஒன்றை ஒன்று அழிக்கவோ வலிவூட்டவோ செய்யும். வலிவூட்டும் முறையில் குறுக்கீடு செய்ய, பாதை வேறுபாடு எக்ஸ்கதிர் அலைநீளத்தின் (A) F படம் 3 முழு எண் மடங்காக இருக்க வேண்டும். அதாவது, 2d Sint = n à இங்கு n என்பது ஒரு முழு எண் ஆகும். மேற்கூறிய இச்சமன்பாடு பிராக் விதி எனப்படும். . லாவே புள்ளியின் தோற்றம். ஒரு படிகத்தில் பல இணைத்தளக் குழுக்கள் உண்டு. ஓர் இணைக்கற்றை, படிகத்தின் மீது படும்போது வெவ்வேறு தளக் குழுக் களில், வெவ்வேறு சாய் கோணங்களில் விழும். தள இடைவெளியும் (d), குழுவுக்குக் குழு வேறுபடும். லாவே பயன்படுத்திய எக்ஸ் கதிர்க்கற்றை, பல கலப்பினக் அலைநீளங்களைக் கொண்ட ஆதலால், 2d, Sin 0, =nd; 2d, Sin 8, = nλ, 2d, Sin 0 = nis 3 கற்றை. என்ற பிராக் சமன்பாடுகளை நிறைவேற்றும் கோணங்களில் சமச்சீர் அமைவுடைய பல செறிவு மிக்க புள்ளிகள் தோன்றின என்பது விளங்கும். பிராக் எக்ஸ்கதிர் நிறமாலை அளவி. எக்ஸ் கதிர்க் குழாயிலிருந்து வரும் கதிர்கள், தடித்த காரீயத் தகடுகளில், ஒரு நேர் கோட்டில் அமைந்த S,, S, என்ற பிளவுகளின் வழியாகச் செலுத்தப்பட்டுச் செம்மையான, மெல்லிய. இணைக்கற்றையாக்கப் படுகின்றன. இப்பகுதி ஒளியியல் நிறமாலை அளவியி லுள்ள ணையாக்கி போன் றது. செங்குத்து அச்சு ஒன்றில் சுழலக் கூடிய அளப் பதற்குரிய வட்ட அளவுகோலும், வெர்னியரும்