722 ஒளிப்பட முறையில் அச்சுக்கோத்தல்
722 ஒளிப்பட முறையில் அச்சுக்கோத்தல் கணிப்பொறியே இந்த எந்திரத்தில் இரண்டா வதும் முதன்மையானதும் ஆகும். க்கணிப்பொறி வரியின் இறுதியை முடிவு செய்கிறது. செய்திகளை நினைவில் பதிவு செய்து கொள்கிறது; எழுத்தின் அளவை முடிவு செய்கின்றது; ஒளிப்படத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது; காலக்குறியீடுகளை அமைக்கிறது. இடை வெளியைச் சீர் செய்கின்றது. இது தட்டெழுத்து எந்திரத்துடன் இணைந்தும் தனித்தும் இயங்கும் அல்லது ஒளிப்பட எந்திரத்துடன் சேர்ந்தும் இயங்கும். மூன்றாவதாக தட்டெழுத்து அமைப்பில் தந் துள்ள செய்தியைத் திரைமூலம் காட்டக் கூடிய கருவியும் உண்டு. அதைப் படித்து ஆவன செய்து கொள்ளவும் முடியும். நான்காவதாகத் உள்ள ஒளிப்பதிவு செய்யும் எந்திரம், எந்திரத்தின் தயமாகக் கருதப்படும். எழுத்துகளின் வரிவடிவம் அமைந்த மறிநிலைப்படி வத்தால் (negative) ஆன வட்ட அமைப்புகள் அல்லது படச்சுருள்கள் இதில் இருக்கும். அடுத்து இப்பகுதியில் ஒரே சீராக ஒளியிடும் கருவி உண்டு. வில்லைகள் கொண்ட குழல்கள் பல அமைந்துள்ளன. மேலும் எழுத்துகளை முறைப்படுத்த ஒரு முப்பட்டைக் கண்ணாடியுள்ளது. இதனால் . எழுத்துக்கள் ஒன்றின்மேல் ஒன்று விழுவது தடுக்கப்படுகிறது. இறுதியாக ஒளிப்படச் சுருளை வரி அமைப்புக்கிணங்க நகர்த்தும் கருவி இருக்கும் மேலே கூறியவாறு ஒளியிடப்பட்ட படச்சுருளைப் பெருக்கிக்கொள்ளத் தனி எந்திரம் உள்ளது. இது மேற்காணும் சுருளை வேதி முறையில் பெருக்கி உலர்த்தி எழுத்துகளைச் சுருளில் உறுதிப்படுத்தி அச்சிடப்பயன்படும் தகடுகள் பயன்பட ஏற்றவாறு செய்கிறது. வட்டுகளும் நாடாக்களும் (discs and tapes) தட் டெழுத்துக் கருவியில் எழுத்துக்கள் யாவும் அதன் அருகில் உள்ள திரையில் தோன்றிக் கொண்டே யிருக்கும். அதைக் கணிப்பொறியில் பதிவு செய்து கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. இன்றைய நிலையில் தாள் நாடா, காந்த நாடா அல்லது காந்தத் தட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ் வொன்றிலும் அதன் தனித்தன்மையாகப் பல நன்மைகள் உள்ளன. தாள்நாடா. வரிசையாகத் துளையிடப்பட்டதாள் நாடா ஏறக்குறைய ஓர் அங்குலம் அகலமுடையது. தட்டெழுத்துக் கருவியில் எழுத்துகள் அடிக்கும்போது அதற்கேற்றவாறு துளைகள் தோன்றுகின்றன. தாள் நாடா ஒதுக்கப்பட்டதற்கான காரணங்களாவன: ஒளிப்படச்சுருள் எழுத்துகளை வரிசைப்படுத்தும் முப்பட்டைக் கண்ணாடி எழுத்துக்கள் அமைந்த சுழலும் தட்டு மின்விளக்கு எழுத்துகளின் அளவை அறுதியிடும் வில்லை ஒளிப்பட அச்சுக் கோக்கும் எந்திரத்தின் தத்துவம்.