ஒளிப்படவியல் 723
ஒளிப்படவியல் 723 ஒளிப்படச்சுருள் அமைக்கும் கருவி Laser சீர் செய்யும் கருவி ஒளியை ஒளி வெளியிடும் வடிகட்டி கருவி இயக்கு லேசர் ஒளிக்கதிர் சுழலும் பட்டகம் நிறுத்து வில்லை லேசர் ஒளிமுறையில் அமைந்த ஒளிப்பட அச்சுக் கோக்கும் எந்திரத்தின் வரைபடம் இது கணிப்பொறியில் மிகு இடத்தை அடைத் துக் கொள்கிறது. காந்த நாடாவிலும் தட்டு களிலும் உள்ளதைவிட மிகக்குறைந்த தகவல்களையே இதில் சேர்த்து வைக்க முடியும். தவறுகள் திருத்தப் பட வேண்டுமென்றால் வேறு தாள் நாடாவையே அமைக்க வேண்டியுள்ளது. காந்த நாடா பாட்டுக் கேட்கும் ஒலிப்பதிவு நாடா வைப் போல் பழைய தகவல்களை முழுதுமாக அழித் துவிட்டு வேறு புதிய தகவல்களை இதில் சேர்த்து வைக்க முடியும். இதன் விலை தாள் நாடாவைவிடக் கூடுதலாக இருந்தாலும் இது. விரைவானதும், இரைச்சலற்றதும், வாய்ப்புடையதுமான அமைப் பாகும். காந்தத் தட்டுகள். இது நிமிடத்திற்கு 45 சுற்றுகள் சுற்றக்கூடிய இசைத் தட்டுத் தோற்றம் உடையது. குறைந்த விலை, இரு பக்கங்களிலும் தகவல்கள் சேர்த்துக் கொள்ளும் தன்மை ஆகியவையே இதில் உள்ள சிறப்புக்களாகும். ஒளிப்பட முறையில் எழுத்துக் கோக்கும் கருவி ஒளி, மின்னணு, எந்திர ஆற்றல் ஆகிய மூன்று ஆற்றல்களின் உதவியால் இயங்கு கிறது. ஒளிப்படக் கருவி ஒரே நேரத்தில் பல தட்டச்சு எந்திரம் தரும் எழுத்துகளை எளிதாக நினைவில் கொள்ளும் ஆற்றலுடையது. அ.க. 6-46அ பதிவாகும் முறை. ஒளிப்படம் எடுக்கும் கருவியின் முன் பொருளை நிறுத்தி வைத்து ஒளிப்படச் சுருளில் உருத்தோற்றம் படுமாறு செய்தால் பொருளின் மேல் உள்ள ஒளியின் காரணமாக அதன் உருவம் ஒளிப் படக்கருவியின் உள்ளே இருக்கும் படச் சுருளில் பதி வாகிறது. அதேபோல் இங்கு எழுத்துகள் தட்டப் படும்போது அகற்கேற்ற ஆற்றல் வாய்ந்த ஒளி கணிப்பொறியில் இருக்கும் ஒளிப்படச் சுருளிலோ, தாளிலேயோ பதிவாகும். ஒளிப்படவியல் ப. தருமர் ஒளியால் பாதிக்கப்படும் வேதிக் கூட்டுப்பொருள் பூசப்பட்ட தளத்தின் மீது வில்லையின் (lens) உதவியால் ஒரு பொருளின் உருவத்தைப் பதிய வைத்தல் ஒளிப்படம் (photograph) தயாரித்தல் எனப்படும். (கிரேக்க மொழியில் photo என்னும் சொல் ஒளியையும், graphein என்பது வரை வதையும் குறிக்கிறது) ஒளிப்படங்களைத் தயாரிக்கும் முறை. ஒளியியல் செயல்பாட்டாலும் வேதிச்