726 ஒளிப்படவியல்
726 ஒளிப்படவியல் தரக் நீரில் நன்கு கழுவப்பட்டபின் உலர வைக்கப்படுகிறது. இப்படத்தில் வெண்மையான பகுதி கறுப்பாகவும், கறுப்பான பகுதி வெண்மையாகவும் தோன்றுவதால் இது எதிர்ப்படம் (negative) எனப்படுகிறது. இதைக் உருவத்தைத் கொண்டு உண்மையான கூடிய நேர் (positive) படங்களைத் தேவையான எண்ணிக்கையில் தயாரித்துக் கொள்ளலாம். இந்த எதிர்ப்படத்தில் வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு அளவில் ஒளிபுகும் தன்மையுடையவாக இருக்கும். ஒளியுணர் தன்மை கொண்ட வேதிப் பொருள் பூசப்பட்ட ஒரு வெள்ளை அச்சுத்தாளின் மீது இந்த எதிர்ப்படம் வைக்கப்பட்டுத் தேவையான நேரத் திற்குச் சீரான ஒளி பாய்ச்சப்படுகிறது. இதனால், எதிர்ப்படத்தின் பல்வேறு பகுதிகளில் ஒளிபுகும் அளவிற்கு ஏற்றவாறு ஒளி சென்று அச்சுத்தாளின் மீதுள்ள வேதியல் பொருள்களில் மாற்றம் செய்கிறது. எனவே எதிர்ப்படத்திலுள்ள உருவத்திற்கு ஏற்றவாறு ஓர் உள்ளுறை உருத்தோற்றம் தோன்றுகிறது. இதுவும் கண்ணுக்குத் தெரியாது. இருட்டறையில் ஒரு தோற்றுவிப்பான் நீர்மத்தில் இத்தாள் மூழ்க வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. முன்புபோலவே ஒளித்தாக்கம் மிகுந்த இடங்களில் உள்ள வேதிப் பொருள் தோற்றுவிப்பானுடன் செயல்பட்டுக் கருமையாகிறது. குறைவான ஒளியால் தாக்கமுற்ற இடங்கள் குறைந்த கருமையடைகின்றன. முற்றிலும் கறுப்பாக உள்ள இடங்களில் ஒளி செல்லாததால் அந்த இடங்கள் தாக்கமுறாமல் வெண்மையாகவே இருக்கும். டங் தாளின் மீது தோன்றிய படத்தில் பல களில் வேதிப் பொருள்கள் இன்னும் செயல்படாமல் இருப்பதால், இதை இருட்டறையைவிட்டு நல்ல ஒளியுள்ள இடத்திற்குக் கொண்டு வந்தால் தாள் முழுதும் கருமையாகி உருத்தோற்றம் மறைந்துவிடும். எனவே.உருத்தோற்றத்தை நிறுத்த முன்போலவே. ஹைப்போ நீர்மத்தில் சிறிது நேரம் இருக்கச் செய்ய வேண்டும். இதனால் தோற்றுவிப்பானால் செயல் படாத வேதிப் பொருள்கள் தாளினின்றும் நீக்கப் பட்டுவிடும். எனவே, அச்சுத்தாளின் மீது உண்டான உருவம் மாறாமல் உள்ளவாறே நிலைநிறுத்தப்படு கிறது. இதனாலேயே ஹைப்போ நிலைநிறுத்தி (fixer) என்று குறிப்பிடப்படுகிறது. ஓடும் நீரில் நன்கு கழுவி தாளின் மீது படிந்த தேவையற்ற வேதிப் பொருள்கள் நீக்கப்பட்டு உலர்த்தப்படும். தேவை யிருந்தால், தாளின் மேற்பரப்பும் பளப்பளப்பாக்கப் படுகிறது. இப்போது, தாளில் தோன்றும் உருவம் உண்மையான பொருளின் உருவத்தை ஒத்திருக்கும். எதிர்ப் படத்திலுள்ள உருத்தோற்ற அளைவை விடப் பல மடங்கு பெரிய நேர் தோற்றத்தை உருப் பெருக்கி (enlarger) என்னும் கருவியைக் கொண்டு தயாரிக்கலாம்.உருப்பெருக்கிக் கருவியுள் (படம் 1) சீரான ஒளியைத் தரக்கூடிய ஒரு மின்விளக்கிலிருந்து வெளிப்படும் வெள்ளை ஒளி சரியான தொலைவில் வைக்கப்பட்டுள்ள வில்லையிணைப்பின் வழியே சென்று இணைக்கற்றை ஒளியை உண்டாக்குகிறது. அவ்வொளி, வைக்கப்பட்டுள்ள அருகில் படத்தின் மீது விழுந்து அதைப் பொலிவாக்குதிறது. பொலிவூட்டப்பட்ட இப்படத்தின் பெரிய உண்மை 6 5 படம் 1.உருப்பெருக்கி எதிர்ப் எதிர்ப் அடிப்பலகை 1. மின்விளக்கு 2. இணையாக்கி வில்லைகள் 3. படம் தாங்கி 4. 5. உருப்பெருக்கி வில்லை உருப்பெருக்கம் பெற்ற பிம்பம் 8. உருத்தோற்றம் ஒரு குவிவில்லையால் தோற்றுவிக்கப் படுகிறது. வில்லையை மேலும் கீழும் நகர்த்தி இத் தோற்றம் தெளிவாக இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். இவ்வுருத்தோற்றம் ஒரு பெரிய அச்சுத் தாளின் மீது விழும்படிச்செய்யப்பட்டு முன்பு கூறிய படியே பதிவு செய்யப்படுகிறது. இம் முறையில் தே தேவையான அளவிற்கு நேர்படங்களைப் பெரிய அளவில் தயார் செய்யலாம். ய எதிர்ப் படத்திலிருந்து நேர் படம் தயாரிக்கட் பயன்படும் அச்சுத்தாள்களில் பலவகை உண்டு. பொதுவாக, வெள்ளைத் தாளின் மீது பேரியம் சல்ஃபேட் கரைத்த கூழ்க்கரைசல் சீராகப் பூசப் பட்டிருக்கும். தாளுக்கு, இப்பூச்சு ஒரு சிறப்பான வெண்மை அடித்தளத்தை அளிக்கிறது. இதன்மீது ஒளியுணர் தன்மை கொண்ட வெள்ளி உப்புக் கூழ்க் கரைசல் மெல்லேடாகப் பூசப்பட்டிருக்கும். இப்பூச்சு