ஒளிப்படவியல் 727
கேடுறாமல் இருக்க இதன் மீது மெல்லிய கூழ்க்கரைசல் பூச்சும் தரப்படுகிறது. தாளின் மீது பூசப்படும் வெள்ளி உப்பு, வெள்ளிபுரோமைடு அல்லது வெள்ளி குளோரைடு ஆக இருப்பதுண்டு. இவ்வுப்பின் பெயராலேயே இவை புரோமைடுதாள் அல்லது குளோரைடுதாள் எனப்படுகின்றன. அச்சுத்தாளின் மீது தேவையான ஒளிவிடுப்புச் செய்யப்படும் அளவைப் பொறுத்து அவை மென்மை (soft) இயல்பு (normal), கடின (hard) வகைத் தாள் என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. நல்ல, பொலிவான ஒளிப்பட அச்சை உண்டாக்க எதிர்ப் படத்தின் ஒளி ஊடுருவும் தன்மையைப் பொறுத்துத் தகுந்த தர முடைய தாளைப் பயன்படுத்தல் வேண்டும் படம் ஒளிவிடுப்புப் பெற்ற படச்சுருளிலிருந்து எதிர்ப் உருத்துலக்கப்படுவதற்கும் அச்சுத்தாளில் நேர் படம் உருத்துலக்கப்படுவதற்கும், பொதுவாக மிட்டால், ஹைட்ரோகுயினோன், சோடியம் அல்லது பொட்டாசியம் சல்ஃபைட், சோடியம் கார்பனேட், பொட்டாசியம் புரோமைடு ஆகிய வேதிப் பொருள் கள் பல்வேறு அளவுகளில் சேர்க்கப்பட்ட கரைசல் பயன்படுகிறது. இக்கரைசலைத் தோற்றுவிப்பான் அல்லது உருத்துலக்கி எனலாம். இவற்றுள் மெட்டாலும் ஹைட்ரோகுயினோனும் ஒளியால் தாக்கப்பட்ட பகுதியிலுள்ள வெள்ளி உப்பைக் கருமையான வெள்ளி உலோகமாக மாற்று வதற்குப் பயன்படுகின்றன. காற்றிலுள்ள ஆக்சிஜ னால் இவ்விரண்டும் கேடுறாமல் காக்கச் சோடியம் சல்ஃபைட் பயன்படுகிறது. இது சேர்க்கப்படுவதால் உருத்துலக்கிக் கரைசலின் செயல்வேகம் குறைக்கப் படும். எனவே, இதை ஈடுசெய்யச் சோடியம் கார்பனேட் சேர்க்கப்படுகிறது. இது உருத்துலக்கலை முடுக்கிவிடுகிறது எனலாம். ஒளி படாத பகுதி யிலுள்ள வெள்ளி உப்புகளை உருத்துலக்கிக் கரைசல் ஓரளவு தாக்கிப் படம் முழுதும் ஒரு மெல்லிய கருமையைத் தோற்றுவிக்கும். இதைத் தவிர்க்க, பொட்டாசியம் புரோமைடு ஒரு கட்டுப்படுத்தியைப் போலச் செயலாற்றுகிறது. வேகமாகச் செயற்படும் உருத்துலக்கிக்கும் மிகு கருமையைத் தரும் உருத் துலக்கிக்குமாகப் பல்வேறு தனிப்பட்ட நோக்கங் களுக்கென்று மேற்கூறிய வேதிக் கூட்டுப்பொருள்கள் வெவ்வேறு தகவுகளில் சேர்க்கப்பட்ட உருத்துலக்கிகள் நடைமுறையில் உள்ளன. ஒரு காட்சியில் தோன்றும் பல்வேறு வண்ணங்கள் அதிலுள்ளவாறே அதன் வண்ணப்படத்தில் இருக்கும். எனவே, ஒரு காட்சியின் இயற்கையான தன்மையையும் அழகையும் அதன் வண்ண ஒளிப் படத்தின் மூலமே முழுதும் உணரமுடியும். இயற் கையாக, ஒளிவிடும் பல மூலங்களிலிருந்து வெளிப் படும் ஒளி, வெண்மையானதேயாகும். இவ்வெண்மை ஒளி அனைத்து வண்ணங்களும் கலந்த ஒரு கூட்டு ஒளிப்படவியல் 727 ஒளி ஆகும். இவ்வொளி பொருளின் மீது விழும்போது அப்பொருளின் தன்மைக்கேற்ப, குறிப்பிட்ட ஒரு வண்ணத்தை மட்டும் எதிரொளித்துவிட்டு ஏனைய வற்றை உட்கவர்ந்து கொள்கிறது. இம்முறையில் வெண்மை ஒளியைப் பெற்ற இலைகளும் பூக்களும் நிலமும் நீரும் வயலும் வானும் ஏனைய பொருள் களும் பல வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. மரத்தில் இலைகளின் மீது வெண்மை ஒளி விழும் போது அது ஏனைய வண்ணங்களை உட்கவர்ந்து விட்டுப் பச்சை வண்ணத்தை மட்டும் எதிரொளிக் கிறது. ஆகவேதான், அது பச்சை வண்ணமாகத் தோன்றுகிறது. இவ்விலைகளின் மீது வெண்மை ஒளிக்குப் பதில் சிவப்பு ஒளி விழுந்தால் அப்போது அவை கருமையாகத்தான் தோன்றும். இதேபோல் இரத்தத்தின் மீது வெண்மை ஒளி விழும்போது அது சிவப்பை மட்டும் எதிரொளித்துச் சிவப்பாகக் காட்சி யளிக்கிறது. இரத்தத்தின் மீது மஞ்சள் அல்லது பச்சை போன்ற பிற ஒளி விழும்போது அது கறுப் பாகத்தான் தோன்றும். ஆகவே, பல வண்ண ஒளி களையும் உள்ளடக்கிய வெண்மை ஒளி விழுவதால் பொருள்கள் பல வண்ணங்களில் காட்சியளிக்கின்றன கண்கள் காணும் பற்பல வண்ணங்கள். மூன்று அடிப்படை வண்ணங்களின் கூட்டு எனலாம். சிவப்பு. R W C Σ B படம் 2. வண்ணக் கூட்டுமுறை R = சிவப்பு, G = பச்சை, B= நீலம் ; M = மெஜந்தா ; C=சயான் Y = மஞ்சள் W = வெள்ளை.