728 ஒளிப்படவியல்
728 ஒளிப்படவியல் பச்சை, நீலம் ஆசிய இவையே அம்மூன்று அடிப் படை வண்ணங்களாகும். சிவப்பையும் பச்சையையும் கூட்டினால் மஞ்சள் வண்ணம் கிடைக்கும். பச்சை யையும், நீலத்தையும் கூட்டினால் சயான் (cyan) வண்ணமும், நீலத்தையும் சிவப்பையும் கூட்டினால் மெஜன்ட்டா (megenta) வண்ணமும் கிடைக்கும். மேலும் சிவப்பு, பச்சை நீலம் ஆகிய மூன்றையுமே ஒரு சேரக் கலந்தால் வெள்ளை கிடைக்கும். இக் கூட்டு முறையைப் படம்-2 விளக்குகிறது. இக் கூட்டு வண்ண முறையில் (colour additive method) வண்ண ஒளிப்பட முறையை விளக்கலாம். ஒரு காட்சியிலுள்ள சிவப்புப் பகுதிகளை மட்டும் பதிவு செய்து ஒரு சிவப்பு ஒளிப்படம் எடுப்பதாகவும் இதேபோல் பச்சை வண்ணத்தைத் தனியாகவும் நீல வண்ணத்தைத் தனியாகவும் ஒளிப்படம் எடுப்பதா கவும் கருதி அவை மூன்றையும் ஒருசேர ஒரு திரை யில் குவித்தால் காட்சியிலுள்ள அனைத்து வண்ணங் களும் இயற்கையிலுள்ளவாறே தோன்றும். இம்முறையில், ஓர் ஒளிப்படச் சுருளின் மீது மேற் கூறிய மூன்று வண்ணங்களின் உணர்திறன் கொண்ட வேதிக் கூட்டுப்பொருள்கள் (மெல்லிய முன்று வெவ் வேறு அடுக்காக) பூசப்பட்டு ஒரு காட்சி படமெடுக்கப் படுகிறது. மூன்று அடுக்கிலுள்ள வெவ்வேறு வேதிப் பொருள்கள் அந்தந்த வண்ண ஒளிக்கேற்பப் பதிவை உண்டாக்கும். கறுப்பு-வெள்ளைப் படச்சுருளை ஒரே முறையில் உருத்துலக்கியது போலல்லாமல் வண்ணப் படச்சுருள், மூன்று அடிப்படை வண்ணத்திற்காக மூன்று முறை தனித்தனியாக மூன்று வெவ்வேறு உருத்துலக்கிக் கரைசல்களில் உருத்துலக்கப்படு கிறது. இப்போது மூன்று வண்ணங்களின் கூட்டாக அமைந்த அனைத்து வண்ணங்களும் உண்மையில் உள்ளவாறே தோன்றும். இக்கூட்டுமுறை தவிர, நீக்கல் முறையிலும் (sub stractive method) வண்ண ஒளிப்படம் தயாரிக்கப்படு கிறது. இது வெள்ளை ஒளியிலிருந்து வடிப்பான் மூலம் சயான், மெஜன்ட்டா, மஞ்சள் ஒளிகளை உண்டாக்கும். பின்னர் அவற்றைப் படம்- 3 இல் காட்டியுள்ளவாறு சேர்க்க வேண்டும். மெஜன்ட்டாவும் (வெள்ளை-பச்சை) மஞ்சளும் (வெள்ளை - நீலம்) இணையச் சிவப்பு உண்டாகிறது. இதேபோல் மஞ்சளும் சயானும் சேரப் பச்சையும், சயானும் மெஜன்ட்டாவும் சேர நீலமும் உண்டாகும். மெஜன்ட்டா, மஞ்சள், சயான் ஆகிய மூன்றும் சேர்ந்தால் கருமையாகி விடும். நீக்கல்முறை தற்கால வண்ண ஒளிப்படவியலில் பெரும்பான்மையாகப் பின் பற்றப்படுகிறது. கறுப்பு-வெள்ளை ஒளிப்பட முறையில் செய்தது போலவே இங்கும் வண்ண எதிர்ப்படத்தைத் தயா M R BK G B C படம் 3. M = மெஜன்ட்டா, y = மஞ்சள்,= சயான் R = சிவப்பு, G= பச்சை, B = நீலம் Bk = கறுப்பு ரித்து அதைக் கொண்டு வெள்ளை அச்சுத்தாளின் மீது எவ்வளவு வண்ண நேர்படங்கள் வேண்டு மானாலும் (எந்த அளவிலும்) தயாரித்துக் கொள்ள லாம். இருட்டறையில் மனிதன் பல மணிநேரம் செல விட்டுத் தயாரித்து வந்த இப்படங்கள் தற்காலத்தில் கணிப்பொறிகளின் உதவியால் சில நிமிடங்களிலேயே தயாரிக்கப்படுகின்றன. வண் ஒளியின் அலை நீளம் மிகுதியாக உள்ளபோது காற்றிலுள்ள தூசுகளாலும் வளிம மூலக்கூறுகளாலும் சிதறடிக்கப்படும் ஒளியின் அளவு குறைவாக இருக்கும். கட்புலன் ஒளி நிறமாலையிலுள்ள ஊதா ணத்தை விடச் சிவப்பு வண்ணத்தின் அலை நீளம் மிகுதியானதால் ஊதாவைவிடச் சிவப்பு சிதறடிக்கப் படுவது குறைவாகும். சிவப்புக்கு அப்பாலுள்ள அகச் சிவப்புக் கதிர்வீச்சின் அலைநீளம் மேலும் மிகுதி யாகும். அதைக் கொண்டு ஒளிப்படம் தயாரிக்கப்படு கையில் சிதறல் குறைந்து நன்கு தெளிவான ஒளிப் படம் கிடைக்கும். தூசு அல்லது பனிப்படலம் நிறைந்த காட்சி தெளிவாகத் தெரியாத நேரங்களில் இந்த அகச்சிவப்பு ஒளிப்பட முறை நன்கு பயன்படும். . மின் காந்த நிறமாலையில் அகச்சிவப்பு (IR), கட்புலன் ஒளி (visible) புற ஊதா (UV) கதிர்வீச்சு,