பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிப்‌ பிறழ்ச்சி (இயற்பியல்‌) 729

எக்ஸ் (x) கதிர்கள் காமா (7) கதிர்கள் போன்றவை ஒளிப்படப் பதிவை உண்டாக்க வல்லவை. இப்பண் பைக் கொண்டு அறிவியல் ஆய்வுகளில் மேற்கூறிய கதிர்வீச்சுகளைக் (கண்ணுக்குப் புலனாகாதவையா னாலும்) கண்டுபிடிக்க ஒளிப்படமுறை சிறப்பாகப் பயன்படுகிறது. மின்னூட்டம் பெற்ற எலெக்ட்ரான், புரோட்டான், பாசிட்ரான் போன்ற துகள்கள் ஒளிப் படப் பதிவைத் தோற்றுவிக்கவல்லவை. எனவே, அவற்றின் போக்கையும் அவை உண்டாக்கும் விளை வையும் பதிவு செய்ய ஒளிப்படமுறை பெரிதும் பயன் படுகிறது. முகிலறை (cloud chamber) போன்ற கருவி களிலும், வானில் காஸ்மிக் கதிர் ஆய்வுகளுக்கு மிகு உயரத்தில் பறக்கவிடப்படும் பலூன்களிலும் ஒளிப் படப் பதிவு முறை பயன்படுகிறது. இயற்பியல், உயிரியல், வானியல் போன்ற துறை களில் அறிவியல் ஆய்வுகளுக்கு ஒளிப்படவியல் சிறந்த கருவியாகச் செயலாற்றுகிறது. குறிப்பாக, இயற்பிய லில் தனிமங்கள் மற்றும் வேதிப் பொருள்கள் வெளி விடும் நிறமாலைகள் ஒளிப்படமுறையில் பதிவு செய் யப்பட்டு, ஓய்வான ஆய்வுகளுக்கும் நீண்ட நாள் பாதுகாப்பிற்கும் வைக்கப்படுகின்றன. வானியலில், பெரிய தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட ஒளிப் படப் பெட்டிகளால் பால்வெளி மண்டலம், கோள் கள். வால்விண்மீன்கள் போன்றவை படமெடுக்கப் பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. உயிரியலில் கண் ணுக்குத் தெரியாத சிறிய உயிரினங்கள், அவற்றின் பகுதிகள், தாவரங்களின் பகுதிகள் போன்றவை நுண்ணோக்கியுடன் இணைக்கப்பட்ட ஒளிப்படப் பெட்டி மூலம் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப் படுகின்றன. வானிலை ஆய்வுகளுக்கு விண்கூடுகளிலிருந்தும் ஏவுகணைகளிலிருந்தும் நெடுந்தொலைவு ஒளிப் படங்கள் எடுக்கப்படுகின்றன. மருத்துவத் துறையில் உடலில் முறிந்துள்ள எலும்பின் பகுதிகள், நாணயம் போன்ற உலோகப் பகுதிகள் உடலில் சென்றுள்ள இடங்கள். குடல்புண் உள்ள இடங்கள் ஆகியவற்றை அறியவும் எக்ஸ்கதிர் ஒளிப்படமுறை பயன்படுகிறது. தீயில் வெந்துவிட்ட ஆவணங்களிலுள்ள எழுத்து களைப்படிக்க அகச் சிவப்பு, புற ஊதா ஒளிப்படமுறை பயன்படுகிறது. இம்முறையில், ஆவணங்களில் அடித்துத்திருத்தப்பட்ட எழுத்துகளையும் கைரேகைப் பதிவுகளையும்கூடக் கண்டறிய யலாம். ஒளிப்பட முறையாலேயே திரைப்படத் தொழில் தோன்றியது. ஒளிப் படவியலில் வண்ணத் திருப்பல் ஒளிப்படம் (colour reversal photograph) தயாரிக்கப் படுகிறது. இதில், அச்சுத்தாளுக்குப் பதில் ஒளி ஊடுரு வத்தக்க செல்லுலாய்டு (celluloid) போன்ற மெல்லிய படச் சுருள்களிலேயே நேர்உருத்தோற்றத்தைப் பெற லாம். இப் படங்கள், பொலிவுமிக்க விளக்குகளின் உதவியால் பெரிய உருத்தோற்றத்தைத் திரையில் விழச்செய்யப் பயன்படுகின்றன. இதைக் கறுப்பு ஒளிப் பிறழ்ச்சி (இயற்பியல்) 729 வெள்ளை ஒளிப்பட முறையிலும் செய்யலாம். இம் முறையில் நிலைப்படங்களும் இயங்கும் திரைப் படங்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்காலத்தில் முப்பரிமாணப் படங்களும் (3D) தயாரிக்கப்படு கின்றன. படிப்பகங்களில், பெரும் நூல்களிலுள்ள செய்திகளையும் படங்களையும் நுண் படச்சுருள்களில் (micro film) பதிவு செய்து சிறு இடங்களில் அடக்க மாக வைத்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான அளவிற்குத் திரையில் பெரிதாக்கிக் காணலாம். ஆ.பொன்னுசாமி ஒளிப்பாயம் ஒளி அளவியலில் கட்புலன் ஒளி மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஒரு நொடியில் பாயும் ஒளியின் அளவு ஒளிப்பாயம் (luminous flux) எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக ஒரு நொடியில் பாயும் ஒளியாற்றலின் அளவு அப்பரப்பின் ஊடே செல்லும் ஒளிப்பாயம் எனப்படும். ஓர் ஒளித்தோற்று வாய் அனைத்துத் திசைகளிலும், ஒரு நொடியில் கதிர் வீசும் மொத்த ஆற்றல், அத்தோற்று வாயிலிருந்து வரும் மொத்த ஒளிப்பாயம் ஆகும். ஒளிப்பாயத்தின் அலகு லூமன். இது ஒரு மெழுகுத் திறன் (candle power) செறிவுள்ள, ஒரு சீரான புள்ளித் தோற்றுவாய் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளியிடும் ஒளிப்பாயத்திற்குச் சமம். ஒரு வத்தித் திறனுள்ள ஒரு சீரான புள்ளித் தோற்றுவாயிலிருந்து வரும் மொத்த ஒளிப்பாயம் 4 என்னும் திண்மக் கோணத்தில் நிரம்புவதால், அதன் மொத்த ஒளிப் பாயம் 47 லூமன் ஆகும். கே.என். இராமச்சந்திரன் ஒளிப் பிறழ்ச்சி (இயற்பியல்) ஒளியியலில், பொருளுக்கும் வில்லைக்கும் (lens) இடை யிலுள்ள தொலைவு. வில்லையினின்று உருத் தோற்றத்திற்குள்ள தொலைவு, குவியத்தொலைவு. வளைவு ஆரம் ஆகியவற்றிற்குள்ள தொடர்பைத் தரும் பல எளிய சமன்பாடுகள் உள்ளன. பொருளி னின்று வரும் ஒளிக்கதிர்கள் யாவும் வில்லை அச்சுடன் சிறு கோணங்களையே உருவாக்குகின்றன என்று கருதிச் சமன்பாடுகள் தரப்பட்டுள்ளன. பொருளி லிருந்து வரும் கதிர்களில் வில்லை அச்சுக்கு அண்மை யில் வாராமல் சேய்மையில் வரும் கதிர்களும் உண்டு. வை ஒளி விலகலுக்குப் பின் ஒரு புள்ளியில்