ஒளிப்பிறழ்ச்சி (கணிதம்) 733
ஒளிப்பிறழ்ச்சி (கணிதம்) 733 காட்டுகிறது. அதாவது ஆஸ்டிக் மாட்டிசா ல்லா அமைப்பில் T.S பரப்புகள் இணைகின்றன. பல வளைவு உருதோற்றம் பர வளையப் பரப் பில் கிடைத்தால் அப்பரப்பு பெட்ஸ்வால் பரப்பு (petzval surface) எனப்படும். குவியத் தளம் வளைந் திருப்பதே இதற்குக் காரணமாகும். சமதளத்திரை B இல் வைக்கப்பட்டால் உருத்தோற்றத்தின் மையம் கூராகவும் ஓரம் மங்கலாகவும் இருக்கும். திரை Aஇல் வைக்கப்பட்டால் மையமும் ஓரமும் மங்கலாகத் தெரி யும். இடைப்பட்ட பகுதி கூராக இருக்கும். உருக்குலைவு (distortion). உருத்தோற்றத்தில் உருக்குலைவு இல்லாதிருக்க வேண்டுமாயின் பக்க வாட்டு உருப்பெருக்கம் (lateral magnification) சீராக இருக்க வேண்டும். ஊசித்துளை ஒளிப்படப் பெட்டி டி. யில் (pin hole camera) உருக்குலைவு இருப்பதில்லை. பொருள் தளம், உருத்தோற்றத் தளம் இவற்றி லுள்ள புள்ளிகளை ஒன்றுக்கொன்று இணைக்கும் நேர்கோடுகள் ஊசித்துளை வழியாகச் செல்கின்றன. சாதாரண வில்லைகள் உருவாக்கும் குலைவுகள் படம் 9 ல் காட்டப்பட்டுள்ளன. இ படம் 9 உருக் குலைவற்ற உருத்தோற்றம் ஆ. பிபாய் குலைவு உருத் தோற்றம் மையக் கதிர்கள் மிகு உருப்பெருக்கத்தையும் ஓரக்கதிர் கள் குறை உருப்பெருக்கத்தையும் தருவதால் இது உருவாகிறது. இ. ஊசித் திண்டு குலைவு உருத்தோற்றம். ஓரத்துக் கதிர்கள் மையக் கதிர்களைவிட மிகு உருப்பெருக்கத்தைத் தருவதால் இது உருவாகிறது. மெல்லிய வில்லை ஒன்றின் முன்னால் அல்லது பின்னால் தடை வைக்கப்படின் குலைவு ஏற்படும். தடையை வில்லையோடு பொருத்தினால் குலைவைத் தவிர்க்கலாம். இரு வேறுபாடற்ற வில்லைகளுக் கிடையில் தடை பொருத்தப்பட்டுக் குலைவு தவிர்க் கப்படுகிறது. படப்பெட்டிகளில் இம்முறை கையாளப் படுகிறது. இவ்வமைப்பில் உருப்பெருக்கத்தின் மதிப்பு ஒன்று. தடை படம் 10 டையாப் புள்ளிப் பிழை (diapoint error). முனை இணை தளப் புள்ளிப் படம் டையாப் புள்ளி எனப் படும். இவற்றைப் பகுப்பாய்வு செய்வது எளிது. புள்ளிகள் யாவும் ஒன்று சேர்ந்தால் அமைப்பில் பிழை திருத்தம் நன்கு செய்யப்பட்டுள்ளது என்று பொருள். புள்ளிகள் ஒரு நேர்கோட்டில் விழுந்தால் கோளப் பிறழ்ச்சி உள்ளது என்று பொருள். புள்ளிகள் வளைவில் விழுவதிலிருந்து கூடுதல் சமச் சீர்மையற்ற பிழைகள் உள்ளன என்பதை அறியலாம். சிறு ஒளிவாயில் கொண்ட அமைப்புக்குக் கிடை தளக் குவியத்தையும் (sagittal focus) முதன்மைக் கதிரையும் கருத்தில் கொள்ளவேண்டும். கிடைத்தளக் குவியத்தினின்று டையாப் புள்ளிக்குள்ள நெடு வெட்டுத்தொலைவு (longitudinal distance) கோளப் பிறழ்ச்சியின் அளவைக்காட்டும். முதன்மைக் கதிரி னின்று டையாப்புள்ளிக்குள்ள தொலைவு கோளப் பிழையின் அளவைக் காட்டும். ஒளிப்பிறழ்ச்சி (கணிதம்) புவி. த.ஜான்பாலஸ் விண்வெளியில் சூரியனைச்சுற்றி இயங்கும் போது அதன் பாதையின் வழிமுனை (apex) என்னும் புள்ளியை நோக்கி அதன் திசைவேகம் செயற்படு கிறது. ஒளி நொடிக்கு ஏறக்குறைய 3,00,000 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தாலும், ஒரு விண்மீனி . லிருந்து வரும் ஒளி, அக்கணமே புவியை வந்தடைவ தில்லை. ஒளி, புவி இவற்றின் திசைவேகச் சேர்க்கையின் .