பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி புறஊதாக்கதிர்‌ நிறமாலையியல்‌ 735

புவியைச்சார்ந்த ஒளிப்பிறப்பிடத்தின் சார்பியக்கத் தால் தாக்கமுறுவதில்லை, என்னும் சிறப்புக் கொள் கையை வலியுறுத்துவதாக உள்ளது. விண்மீன்களுக்கு மட்டும்மல்லாமல் சில குவாசர்களும் ஒரே அளவான ஒளிப்பிறழ்ச்சியைப் பெற்றுள்ளன. என்ப பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒளிப்பிறழ்ச்சி, புவி, விண்வெளியிடைப் படர்ந்துள்ள ஈதர் தொரு திரையினூடே சூரியனை வலம் வருகிறது என்னும் கருத்துக்குத் தகுந்த சான்றாக அமைகிறது என்று கருதினர். 1887 இல் மைக்கேல்ஸ்ன் மோர்லி என்பார் மேற்கொண்ட ஆய்வின் விளைவாகப் புவி ஈதரோடு சூரியனை வலம் வருகிறது என்னும் உண்மையை உணர்த்தினார். ஈதரைப் பற்றிய இரு முரண்பட்ட கருத்துக்கள்சார்புத்தத்துவ இயலால் தீர்த்துவைக்கப்பட்டன. ஒளிப்பிறழ்ச்சி சார்பியல் கருத்துக்களுக்கு ஆக்கம் தருவதாக உள்ளது. ம் சி. பழநிசுவாமி கோவிந்தராசன், மற்றும் தி. க. தமிழ்நாட்டுப் பாடநூல் நூலோதி.க. முத்துசாமி, வானியல் நிறுவனம், சென்னை, 1971; இரா. அனுமந்தராவ், வானியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. ஒளிப்புகு ஊடகம் சாதாரணமாக மறு புறத்திலுள்ள பொருள்களைத் தெளிவாகக் கண்ணால் பார்க்கும் வகையில் ஒளி கடந்து செல்லக்கூடிய ஊடகம் ஒளிப்புகு ஊடகம் எனப்படும். கண்ணாடி, நீர் போன்ற நிறமற்ற நீர்மம், காற்றுப் போன்ற நிறமற்ற வளிமம் போன்றவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். முதலில் கண்ணுக்குத் தெரியும் ஒளியின் அடிப்படையிலேயே ஒரு பொருளின் ஒளி புகும் தன்மை விளக்கப்பட்டாலும், பின்னர் மின்காந்த அலைகளின் பிற கதிர்களின் உட்புகுந் திறன் அடிப்படையிலும் ஊடகங்களின் கதிர்புகுந் தன்மை விளக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக எக்ஸ் கதிர்கள் உலோகங்களை உட்புகவிடாத் தன்மை கொண்டவை. ஆனால் தாள், மரம், தசை போன்றவை ஒளியை உட்புகவிடா எனினும் எக்ஸ் கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றை உட்புக விடுகின்றன. நீலக்கண்ணாடி நீல நிற ஒளியை மட்டும் உட்புக விடும் தன்மை பெற்றுள்ளது. பிற நிற ஒளிகளுக்கு அது உட்புகவிடாத் தன்மை கொண்டது. சாதாரண கண்ணாடி வழியாகப் புற ஊதாக் கதிர்கள் கடந்து செல்லா. ஆனால் அவற்றைக் குவார்ட்ஸ் படிகங்கள் கடத்தும். கே. என். ராமச்சந்திரன் ஒளிப்புரை ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல் 735 or சூரியனின் புறப்பரப்பில், ஏறக்குறைய 400 கி.மீ அளவுக்குத் தடிப்பாகப் பரவியுள்ள மிகவும் வெப்ப மான ஆவிப்படலம் ஒளிப்புரை (photosphere light sphere) எனப்படும். இதன் சாராசரி வெப்ப நிலை 4000 . 5700 K வரை ஆகும். இப்பகுதியி லிருந்துதான் ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன. M ஒளிப்புரைக்கடியில், வெப்பமின்னாற்றல்கள் வெப்பநிலை மிகுதியாக உள்ள பகுதியிலிருந்து மேலே குறைவாக உள்ள பகுதிகளுக்கு மாறி, மாறிச் சுழற்சி அடைந்து கொண்டிருக்கின்றன.. உள்ளொளியை ஊடுருவிச் செல்லவிடாத ஆவிமண்டலம், இங்கு உள்ளது. ஒளிப்புரையைச் சுற்றி மேற்புறத்தில் உள்ள மற்றொரு வெப்ப ஆவி மண்டலம், நிறமண்டலம் அல்லது செந்நிறப்புரை (chromosphere) எனப்படும். ஒளிப்புரையின்மேல் அவ்வப்போது தோன்றும் சூரியக் கறைகள் அல்லது கரும்புள்ளிகள் (sun spots) ஆய்வுக்குரியனவாகும். காண்க, சூரியக்கறைகள். பங்கஜம் கணேசன் ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல் ஓர் ஒளியை நிறப்பிரிகை அடையச் செய்து அதிலுள்ள நிறங்களையும், அலை நீளங்களையும் பகுப்பாய்வு செய்வது நிறமாலையியல் (spectroscopy) எனப்படும். வளி மண்டலத்திலுள்ள நீர்த்திவலைகளில் சூரிய ஒளி பட்டு நிறப்பிரிகை அடைவதால் தோன்றும் வானவில் அனைவரும் அறிந்த ஒரு நிறமாலையாகும். வானவில்லில் அகன்ற நிறப்பட்டைகள் உண்டாக அவை விளிம்புகளில் கலந்து கலங்கியிருக்கும். இதற்கு மாறாகப் புதிய நிறமாலையியல் உத்திகள் வெவ்வேறு நிறங்களைச் சரியாகப் பிரித்தெடுக் கின்றன. கூர்மையாக வரையறுக்கப்பட்ட நிறமாலை வரிகளை உண்டாக்கி அவற்றின் அலை நீளங்களை மிகு நுட்பமாக அளவிட முடிகிறது. அலை அகன்று பரந்த மின்காந்த நிறமாலையில் கட்புலனாகும் பகுதி ஒரு சிறிய நெடுக்கத்தில்தான் அமைந்திருக்கிறது. ஆனால் அதில் கண் உணரக்கூடிய நீளங்கள் அடங்கியிருப்பதால் அது ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது ஊதா முனையில் 400 நானோமீட்டரிலிருந்து சிவப்பு முனையில் 700 அல்லது 750 நானோமீட்டர் அலை நீளம் வரை பரவியிருக்கிறது. ஒரு நானோ மீட்டர் என்பது 10-9 மீட்டருக்குச் சமமாகும். சிவப்புக்கு அப்பால் அகன்ற கீழ்ச்சிவப்புப் பகுதி அமைந்துள்ளது. அது நுண்ணலைகள் (micro waves)