பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌

52 எக்ஸ் கதிர் ஒளியியல் பின் X அச்சில் சாய் கோணத்தையும், Y அச்சில் கால்வனா மீட்டர் விலக்கத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு வரைபடம் வரைந்தால் அது படம் 5இல் காட்டி யுள்ளது போன்று அமைந்திருக்கும். படத்தில் 81,0, மற்றும் i என்ற சாய் கோணங்களுக்கு அயனியாக்கம் பெருமநிலை பெறுவதால், pr, p, மற்றும் p என்ற முகட்டு உச்சிகள் காணப்படுகின்றன. இவை முறையே ஒன்று, இரண்டு. மூன்று ஆகிய நிறமாலை வரிசை களைக் குறிக்கின்றன. 2d sin 0 = 11 அதாவது n=1 முதல்வரிசை 2d sin சீ, = 21 அதாவது I 2 ரண்டாம் வரிசை 2d sin is = 31 அதாவது n = 3 மூன்றாம் = வரிசை நிறமாலைகளைத் தருகின்றன. இச்சமன்பாட்டில் வருகிற தள இடைவெளியாகிய d இன் மதிப்பைப் படிகவியல் அறிவு காண்டு கணிக்க வேண்டும். ம் முறையில் எக்ஸ் கதிரின் அலை நீளத்தை அளவிடும் செயல் வெற்றி பெற்றது என்றாலும் இது சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அக்குறைகள் கருவியைச் செம்மைப்படுத்தியதன் மூலமும், தக்க திருத்தங்கள் தந்ததன் மூலமும் பின்னர் நீக்கப் பட்டன. குறை. ஆய்வுக் கூடத்தின் வெப்ப நிலைக்கு ஏற்ப, படிகத்தின் தள இடைவெளி (d) மாறுபடு கிறது. அட்டவணை 18 இல் கணக்கிடப்பட்ட d மதிப்புகளைத் தரும். இதற்கான திருத்தத்துடன் d ஐக் கணக்கிட வேண்டும். படிகத்தின் மீது படும் கற்றை முற்றிலும் எதிரொளிக்கப்படுவதாகக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு பகுதி விலகல் அடைகிறது. Sin o [1– nA = 2d Sin 1 1 p Sin² # என்பதே என்பது திருத்தப்பட்ட சமன்பாடு. இதில் படிகத்தின் எக்ஸ்கதிர் விலகல் எண் ஆகும். இம்முறை மிகமிகக் குறைவான பிரிதிறன் (resolving power} கொண்டது. ஒரு குறிப்பு எடுக்கவே மிகு நேரம் ஆகிறது. அவ்வாறு பல குறிப்புகள் எடுத்த பிறகே வரைபடம் வரைய இயலும். எனவே இது சலிப்பூட்டும் முறையாகும். ஒரு செம்மைப்படுத்தல். மாரிஸ்-டி-ப்ராய், சீபான் போன்றோரும் வேறு பலரும் பிராக்கின் கருவியை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர். இப்புதிய அமைப்பில் படிக மேசை இங்கும் அங்குமாகக் குறிப்பிட்ட ஒரு கோண எல்லைக்குள் மீண்டும் மீண்டும் அசைக்கப்படு கிறது. இதற்கு ஒரு கடிகார விசை நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. அயனிக் கலத்திற்குப் பதில் ஓர் ஒளிப்படப் பெட்டி வைக்கப்படுகிறது. வலிவூட்டும் செறிவுக்கு உரிய கோணத்தில் படிகம் திரும்பும்போது ஒளிப்படத் தகட்டில் ஒரு சுவடு உண்டாகிறது. அவ்வாறே ஒவ்வொரு வரிசைக்குரிய கோணம் வரும்போதும், ஒளிப்படத் தகட்டில் ஒரு சுவடு உண்டாகும். ஒளிப்பதிவு நேரம் அதிகமாக இருந்தால் தான் சுவடு செறிவு உடையதாக இருக்கும். எனவே படிகம் மீண்டும் மீண்டும் இங்கும் அங்கும் அசைக்கப் படுகிறது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கோணங் களில் படிகம் திரும்பும்போது மீண்டும் மீண்டும் முன்பு விழுந்த இடங்களிலேயே, சுவடுகள் பதிவதால் அவை செறிவுள்ளவையாகின்றன. ஓய்வாக இருக்கும்போது ஒளிப்படச் சுவடுகளைக் கொண்டு தேவையான ஆய்வுக்குறிப்புகளைப் பெற லாம். இவ்வாறு அயனிக்கலம், கால்வட்டக் கால் வனா மீட்டர் என்ற கருவிகளில் குறிப்புகள் எடுக்க வேண்டிய கடினம் நீங்கியது. தொடர் நிறமாலை- சிவப்பு நிறமாலை. முடுக்கமுற்ற எலெக்ட்ரான்கள் எக்ஸ்கதிர்க் குழாயின் இலக் கினைத் தாக்கும்போது, இலக்கிலிருந்து பல்வேறு அலை நீளங்களும், செறிவுகளும் கொண்ட எக்ஸ் கதிர்கள் வருகின்றன. இவற்றின் வரிசை, தொடர் நிறமாலை எனப்படுகிறது. இவற்றுடன் இலக்கின் தனித் தன்மையைக் காட்டுகின்ற சில குறிப்பிட்ட அலை நீளங்களுடைய செறிவு மிகவும் அதிகமான சில எக்ஸ்கதிர்களும் வருகின்றன. இவை அந்த லக்கின் இயல்பைக் குறிக்கும் சிறப்பு நிறமாலை எனப்படும். எக்ஸ் கதிர்க் குழாயினுள் உள்ள எல்லா எலெக்ட்ரான்களும் ஒரே அளவில் முடுக்கமுறுவது L h v K K படம் 6. L hv