ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல் 737
ஆ வேறுபாடுகளுடைய கருவிகள் நிறமாலை ஆய்வுகளில் பயன்படுகின்றன. இக்கருவிகளில் நிறப்பிரிகைத் திறன் (dispersive power) பகுதிறன் (resolving power) கிய அளவு கள் குறிப்பிடத்தக்கவை. ஒரு நிறமாலை காட்டியின் ஒளிப்படத்தட்டில் d a என்னும் அலை நீள வேறுபாடு கொண்ட இரண்டு வரிகள் d1 என்னும் இடைத்தொலைவில் அமைந்திருந்தால், dl/da என்பது அதன் நிறப்பிரிகைத் திறன் எனப்படும். இதன் தலைகீழ் மதிப்பான daidi என்னும் அளவும் பிரிகைத்திறனாகக் குறிப்பிடப்படுவதுண்டு. அது நானோமீட்டர்/மில்லிமீட்டர் என்னும் அலகில் அளவிடப்படும். விலகல் எண் பகுதிறன் என்பது நிறமாலை வரிகளின் கூர்மை பையும் இரண்டு நிறமாலை வரிகள் ஓர் அகன்ற பட்டையாகக் கலந்து தெரியாமல் தனித்தனியாகத் தெரியத் தேவையான சி சிறும அலைநீள வேறுபாட் டையும் அளவிடுவதாகும். முப்பட்டகத்தைவிடக் கீற்றணியைப் பயன்படுத்தினால் நிறப்பிரிகைத் திறனும் பகுதிறனும் மிகுதியாக இருக்கும். முப்பட்ட கத்தில் ஒளி விலகலும், அதிர்வெண் அல்லது அலை நீளத்துடன் ஒளி மாறுவதும் நிற மாலையை உண்டாக்குகின்றன. கீற்றணியில் ஒளிக்குறுக்கீட்டு விளைவும் விளிம்பு விலகலும். நிறமாலையை உண்டாக்கும். சில ஊடகங்கள் சில குறிப்பிட்ட கதிர்களையே தம்மூடாகக் கடந்து செல்ல விடும். எதிரொளிப்பு வகைக் கீற்றணிகளைப் பயன்படுத்தும்போது இந்த இடையூறு தோன்றுவ தில்லை. அவை மென்மையான எக்ஸ் கதிர்களிலிருந்து நுண்ணலைகள் வரையுள்ள அனைத்துக் கதிர்களை யும் எதிரொளிக்கும். குழியாடி வகைக் கீற்றணிகள் பொருத்தப்பட்ட நிறமாலை காட்டிகளுக்கு யாக்கிகளும் முப்பட்டகங்களும் தொலைநோக்கிகளும் தேவையில்லை. குழியாடிக்கீற்றணிகள் விளிம்பு விலகல் உருத்தோற்றங்களைத் தாமே ஒளிப்படத் தகட்டில் குளித்துவிடும். துலக்கி. ஒளிப்படத் தகடுகள் செம்மைப்படுத்தப் படும் வரை நிறமாலை ஆய்வர்கள் தம் கண்களையும், நிறமாலைகளை நுட்பமான ஓவியங்களாக வரையும் திறமையையுமே நம்பியிருக்க வேண்டி யிருந்து. ஒளிப்படங்களில் நிறமாலைகளைப் பதிவு செய்ய முடிந்தபோது நிலையான, புலனால் உணரக் கூடிய பதிவுகள் கிடைத்தன. அத்துடன் கண்ணுக்குத் தெரியாத புற ஊதாக் கதிர்களையும் அண்மைக் கீழ்ச் சிவப்புக் கதிர்களையும்கூடப் பதிவு செய்ய முடிந்தது. நிறமாலைகளைப் பதிவு செய்வதற்கான ஒளிப்படத்தடுகளை உற்பத்தி செய்யும்போது சில சிறப்புத் தன்மையுள்ள வண்ணங்களைக் கலந்து சில குறிப்பிட்ட நிறமாலைப் பகுதிகளை மிகு தெளிவுடன் பதிவாகும்படிச் செய்யலாம், பல வகையான குறு நொய்த் தன்மைகளைத் (graininess) தரக்கூடிய பாய்மங்களைப் பூசுவதன் மூலம் ஒளிப்படத் தகட்டின் அ.க. 6-47 ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல் 737 பகுதிறனை மிகுதிப்படுத்தலாம். அவற்றின் மூலம் பதிவு செய்யும் வேகத்தையும் பதிவாகத் தேவையான காலத்தையும் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம் பதிவாகும் காலம் கூடக் கூடப் பதிவுகள் ஆழ்ந்து தோன்றுவது ஒளிப்படத் தகடுகளின் நற் பண்பு ஆகும். ஒளிப்படத்தகடுகளில் ஒரே சமயத்தில் பல நிறமாலை வரிகளைப் பதிவு செய்ய முடிகிறது. ஒளிப்படத் தகட்டின் உணர்நுட்பம் நேர் போக்குத் தன்மையற்றிருப்பதால் செறிவுகளை அளவிடுவது கடினமாக உள்ளது. ஒளிப்படத் தகடுகளை உருத் துலக்கம் செய்ய வேண்டியிருப்பதால் மெய்நேரப் பகுப்பாய்வு (real-time analysis) செய்ய இயலாமல் போகிறது. ஒளிபெருக்கிக் குழாய்கள் (photo multiplier tubes) ஒளிப்படத் தகடுகளை விட மிகு உணர்வு நுட்பத்தை அளிக்கின்றன. ஓர் ஒளியுணர் பரப்பின் மேல் விழும் ஒளி அதிலிருந்து எலெக்ட்ரான்களை வெளிப்படுத்தக்கூடும். அதன் மூலம் தோன்றும் ஒளி மின்னோட்டத்தை (photccurrent) டைனோடுகளின் (dynode) உதவியால் பெருக்கலாம். இவ்வாறு மின் னோட்டத் துடிப்புகளை உண்டாக்க முடிகிறது. போதிய அளவில் ஒளி விழும்போது ஒளிபெருக்கிக் குழாயிலிருந்து வெளிப்படும் மின்னோட்டத்தின் மூலம் ஒளிக்கதிர் அளவைக் கண்டுபிடிக்கலாம். படு கதிரின் செறிவு மிகக் குறைவாக இருக்கும்போது தனித்தனியான எலக்ட்ரான் துடிப்புகளைச் செந்தரம் செய்யப்பட்ட எண்ணிகளின் உதவியால் கணக்கிட்டுக் கொள்ளலாம். துடிப்புத் தோற்றங்களின் ஒரு குறிப் பிட்ட உயர நெடுக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள் வதன் மூலம் பின்னணிக் குறியீடுகள் காஸ்மிக் கதிர்கள் போன்றவற்றால் தோன்றக்கூடிய தேவை யற்ற துடிப்புகளைக் கண்டுபிடித்து ஒதுக்கி விடலாம். ஒளிபெருக்கிக் குழாயின் உணர்திறன் அலை நீளத்தைப் பொறுத்தது, பெரும்பாலான ஒளிப்பெருக் கிக் குழல்கள் நீலம், புறஊதா போன்ற குறைந்த அலை நீளக் கதிர்களை மிகுதியாக உணர்கின்றன. சிவப்புக் கதிர்களை உணரக்கூடிய ஒளிபெருக்கிக் குழல்களையும் அமைக்க முடியும். ஆனால் இவற்றில் சில இடையூறுகளும் உண்டு. சிவப்புக் கதிர்களால் வெப்பம் தோன்றும். ஒளிபெருக்கிக் குழல்களில் கதிர்வீச்சுப் படாமலிருக்கும்போதே இச் சூழல் வெப்பத்தின் காரணமாக எலெக்ட்ரான்கள் வெளிப் படுவதுண்டு. இவை இருள் எண்ணிக்கைகள் (dark counts) அல்லது இருள் மின்னோட்டங்கள் (dark currents) எனப்படும் பதிவுகளை உண்டாக்கும். ஒளி பெருக்கிக் குழல்களின் சிறும துலக்குத் திறன் இவற் றைப் பொறுத்திருக்கிறது. ஒளிபெருக்கிக் குழல் களைக் குறைந்த வெப்பநிலைகளில் வைப்பதன் மூலம் இவற்றைக் குறைக்க முடியும். ஒளிபெருக்கிக் குழல்கள் மிகுந்த நேர்போக்குத் தன்மையுள்ள உணர்திறன் கொண்டவை. நிறமாலை