738 ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல்
738 ஒளி புறஊதாக்கதிர் நிறமாலையியல் வரைவியின் உருத்தோற்றத் தளத்தில் ஒரு சிறிய துளையைப் பொருத்திக் குறுகிய நெடுக்கமுள்ள அலை நீளப் பட்டைகளைத் தனிப்படுத்தி ஒளி பெருக்கிக் குழல்களில் விழச் செய்வதன் மூலம், கதிர் வீசலை மெய் நேரப் பகுப்பாய்வு செய்ய முடியும். நிறமாலையின் வெவ்வேறு பகுதிகளில் பல ஒளி பெருக்கிக் குழல்களைப் பொருத்திப் பரந்த அளவில் பதிவுகளை எடுக்கலாம். எனினும் ஒளிப்படத்தகடு களைப் போன்று விரிவான உள்ளடக்கமுள்ள பதிவுகள் கிடைப்பதில்லை. வகை ஒளிப்படத் தகடுகளின் விரிந்த உள்ளடக்கத் தன்மையையும் ஒளிபெருக்கிக் குழாய்களின் நேர் போக்குப் பண்பையும் ஒருங்கே கொண்டுள்ள எயில் எலெக்ட்ரானிய ஒளிதுலக்கி வரிசை (electronic photoarray) என்னும் அமைப்பு அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த ஒளிமட்டத் தொலைக்காட்சித் தத்துவம் பயன்படுகிறது. இதில் உள்ள துலக்கியில் ஒளி எலெக்ட்ரான்களை உமிழும் பரப்பு, சிலிகான் இலக்கு, பதிவு செய் கற்றை. கற்றையைக் கட்டுப்படுத்தவும் துலக்கவும் உதவும் எலெக்ட்ரான் கருவி ஆகியவை உள்ளன. உமிழ்பரப்பி லிருந்து வெளிப்படும் ஒளி எலெக்ட்ரான்கள், முடுக்கப் பட்டுச்சிலிகான் இலக்குப் பரப்பின் மேல் விழுகின்றன. அப்பரப்பில் இரண்டு பரிமாணமுள்ள ஒளியோடு வரிசை அமைந்திருக்கிறது, ஒளி எலெக்ட்ரான்கள் ஒரு டயோடின் மீது படும்போது அதிலுள்ள பரப்பு மின்னூட்டத்தினைக் குறைத்து விடுகிறது. ஒளி எலெக்ட்ரான் படாத இடங்களில் பரப்பு மின்னூட் டம் அப்படியே உள்ளது. ஓர் எலெக்ட்ரான் கற்றை இலக்குப் பரப்பின் மேல் துருவப்பட்டு (Scan) வெவ்வேறு புள்ளிகளில் இழக்கப்பட்ட மின்னூட்டத்தை இட்டு நிரப்புகிறது. அந்த எலெக்ட்ரான் கற்றை இலக்குப் பரப்பை இணைக்கும் மின்சுற்றாகவும் செயல்படுகிறது. வெவ்வேறு புள்ளிகளில் மின்னூட்டத்தைப் பழைய அளவுக்குக் கொண்டு வரத் தேவைப்பட்ட எலெக்ட் ரான் மின்னோட்டம் துலக்கப்பட்டுப் பெரிதாக்கப் பட்டு ஓர் எண்ணியல் குறியீடாக (digital signal) மாற்றப்பட்டு ஒரு கணிப்பொறியின் நினைவுப் பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. வழக்கமான எண்ணியல் அல்லது வரைபட முறைகளில் கணிப் பொறியிலிருந்து தகவல்கள் மீட்கப்படுகின்றன. இத் தகைய ஓர் இலக்குடன் ஓர் ஒளி எலெக்ட்ரான் உமிழ் பரப்பை இணைத்தால் அது சிலிகான் செறிவு மேம் பட்ட இலக்கு (silicon intensified target) எனப்படும். அதற்கு முன்புறத்தில் ஒரு உருத்தோற்ற மிகைப்பியை {image intensifier) வைத்து விட்டால் ஒளி எலெக்ட் ரான் உமிழ் பரப்பினுடைய பொலிவு மிக்க உருத் தோற்றம் கிடைக்கும். இந்தக் கருவிகள் கொண்ட அமைப்பு, செறிவு மேம்பட்ட சிலிகான் இலக்கு (intensified silicon and target) எனப்படும். பிறபல திண்ம நிலைத் துலக்கிகளும் உருவாக்கப்பட்டு வரு கின்றன. இக்கருவிகளின் விலை மிகுதியே இவற்றின் பெருங்குறையாகும். செய் பயன். அணுக் கட்டமைப்பு, மூலக்கூற்றுக்கட்ட மைப்பு ஆகியவற்றைக் கண்டு அறிவதும், தெரியாத மாதிரிப் பொருள்களை வேதிப் பகுப்பாய்வுச் வதும் நிறமாலையியலில் இரு பெரும் பயன்களாகும். இவற்றை முறையே நிறமாலைப் பகுப்பாய்வு (spectrum analysis) நிறமாலை வேதிப்பகுப்பாய்வு (spectro chemical analysis) எனக் குறிப்பிடுவதுண்டு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் இவற்றின் மூலம் அணுக்கள், மூலக்கூறுகள் ஆகிய வற்றின் எலெக்ட்ரான் கட்டமைப்பைப் பற்றிய பல முக்கியமான உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. வேதிப் பகுப்பாய்வுக்குக் கீழ்ச்சிவப்பு நிறமாலைப் பகுதி பெரிதும் உதவியுள்ளது. நிறமாலையை ஒளிப்படமாகவோ வரைபட மாகவோ, எண்ணியல் குறியீடுகளாகவோ பதிவு செய்த பிறகு ஆய்வாளர்கள் ஒவ்வொரு நிறமாலைப் பகுதியையும் ஆய்ந்தலசி அதன் மைய அலை நீளம் அல்லது அதிர்வெண், நிறமாலை வரியின் அகலம், அதன் சார்பு ஒளிச் செறிவு, சில சமயங்களில் முனை வாக்கம் ஆகிய தகவல்களைக் கண்டுபிடிக்கின்றனர். புதிய நிறமாலை அளவி அலைநீளம், அதிர்வெண், வரி அகலம் ஆகியவற்றை நேரடியாகவே அளந்து விட வசதியுண்டு. இவ்வாறில்லாதபோது இரும்பு போன்ற தெரிந்த அலை நீளமுள்ள பல வரிகளை வெளியிடக் கூடிய ஒரு மூலத்தின் நிறமா லையைக் கூடலே பதிவு செய்து அதை மேற்கோள் செந்தர மாகப் பயன்படுத்திப் பிற வரிகளின் அலை நீளங் களைக் கணக்கிடலாம். ஒரு நேர்போக்குத் தன்மை யுள்ள துலக்கியைப் பயன்படுத்தி வரிகளின் சார்புச் செறிவுகளை அளவிடலாம். ஒளிப்படத் தகடுகளை வைத்து இதைச் செய்வது கடி னம். சார் பிலாச் செறிவு அளவுகளைக் கண்டு பிடிப்பது மேலும் கடினமாகும். அனைத்து வகை இழப்பு களையும், அலை நீளச் சார்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். துலக்கியில் ஒரு செந்தர மூலத்தைப் பயன்படுத்தி அளவு குறிக்க வேண்டும். ஓர் அணு நிறமாலைக்குள் பல நிகழ்வுகளில் உமிழ்வு வரிகளின் அதிர்வெண்கள் ஒன்றுக்கொன்று கூட்டுத் தொகைகளாகவோ, வேறுபாடுகளாகவோ தொடர்பு கொண்டவை. அணு எலெக்ட்ரான் கட்டமைப்பின் காரணமாக து போன்ற நிலை ஏற்படுகிறது. அணுக்கள், வெவ்வேறு நிலைகளுக்கு அயனியாக்கம் அணுக்கள் ஆகிய வற்றின் நிறமாலைகளை ஆய்வு செய்வதன் மூலம் தத்துவ இயற்பியல் வல்லுநர்கள் குவாண்ட்டம் எந்திரவியல் கணக்கீடுகளின் மூலம் பெறப்பட்ட செய்யப்பட்ட