740 ஒளி மருத்துவம்
740 ஒளி மருத்துவம் விளைவின் செய்முறை கிடைமட்ட இயக்கத்துடன் சிறிதளவு செங்குத்துத் திசை வேகமும் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. சூரியத் துணுக்குகளில் நிகழ்வது போல் இச்செங்குத்துத் திசைவேகம் மையத்தில் மேல்நோக்கியும் எல்லையோரங்களில் கீழ்நோக்கியும் உள்ளது. இப்பெரிய அளவு கி.மீ. கணக்கான இத்திசைவேக அமைப்பு, வளிம இயக்கம் பத்தாயிரக் ஆழத்தில் உள்ளே நிகழும் ஆழ்ந்த வெப்பச் சலனப் பிரிவுகளின் வெளித்தோற்றமே ஆகும் எனக் குறிக் கின்றது. பெரிய வெப்பச் சலனப் பிரிவுகள் வெப்பச் சலன மண்டலத்தின் மையப்பகுதியென ஊகிக்க முடிகிறது. பெரிய பிரிவுகள் மேம்பட்ட சூரியத் துணுக்குகள் எனப்படுகின்றன. அவற்றில் ஒவ் வொன்றும் விட்ட ஏறத்தாழ 30,000 கி. மீ. முடையதாகவும், ஏறத்தாழ 300 சூரியத் துணுக்கு களை உள்ளடக்கியதாகவும், ஒரு முழுநாள் நீடிக்கக் கூடியதாகவும் உள்ளது. டாப்ளர் விளைவு அள வைகள் பெரும் அளவான இயக்கமுடைய மிகப் பெரிய பிரிவுகள் இருப்பதையும் மெய்ப்பிக்கிறது. அவை வெப்பச் சலனப் பிரிவின் மூன்றாம் பகுதியின் வெளித் தோற்றங்களாக இருக்கக்கூடும். சூரியக் கோளத்தின் கூர்மை. சூரியனின் இறுதி அடுக்கின் வழியாகக் கடக்கும்போது, சூரியனின் அடர்த்தி தொடர்ச்சியாகச் சீராகக் குறைவதால் சிறிதாகக் சூரியக் கோளத்தின் ஒளியும் சிறிது குறைந்து, விண்வெளி இருளை அடையும் என்று கருதக் கூடும். ஆனால் சிறிய தொலை நோக்கியின் மூலமாகச் சூரியனின் விளிம்பை ஆராய்ந்தால், அவ் விளிம்பு மிகக் கூர்மையாக இருப்பது தெளிவாகிறது. ஆழ்ந்த ஆய்வு மூலம் சூரிய விளிம்பின் கூர்மையைப் பற்றி அறியலாம். அதாவது சூரியனின் ஆழத்தி லிருந்து விண்வெளிக்கு ஃபோட்டான்கள் வெளிப் பட்டுச் செல்கின்றன. சூரியனின் ஆழ்ந்த மையத்தில் வளிமத்தின் வெப்பநிலையும் கதிர்வீசும் அணுக்களின் அடர்த்தியும் மிகுதியாக இருப்பதால் ஃபோட்டான்கள் மிகப் பெரிய அளவில் வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை, வரும் வழியில் அடுத்தடுத்த அடுக்குகளால் உட்கவரப்படுகின்றன. மிகச் சிறி தளவே வெளிப்பரப்பை அடைந்து விண்வெளியை அடைகின்றது. அதாவது மிகக் குறைந்த அளவு சூரிய ஒளியே ஆழ்ந்த மையத்திலிருந்து வெளிப் படுகிறது. சூரிய மையத்திலிருந்து மிகு தொலை வில் சூரிய வளிம அடர்த்தியும், கதிர்வீச்சு அணுக் களின் எண்ணிக்கையும் குறைந்து விடுவதால் சூரிய ஒளியில் காணும் ஒரு குறைந்த பங்கு ஃபோட் டான்கள், வெளியேயுள்ள பகுதிகளிலிருந்து வருபவை யாகும். சூரிய ஒளியில் உள்ள பெரும்பங்கு ஃபோட் வரு டான்கள், மிகுஅளவில் ஃபோட்டான்களை வெளிப் படுத்தக்கூடிய மிகு அடர்த்தி கொண்ட சூரிய வளிமம் இருக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கின்றன. இந்நிலைக்கு மேல் அமையும் பொருள்கள் விண்வெளிக்கு வெளிப்படும் ஃபோட்டான்களைத் தடுத்து நிறுத்துமளவில் இல்லை. இந்த இடைப் பட்ட நிலைதான் சூரியனின் கண்ணுறும் பரப்பான ஒளிமண்டலம் ஆகும். இது குறிப்பிட்ட தடிமனும் கூர்மையாக வரையறுக்கப்படாத எல்லைகளும் உடைய மண்டலமாக உள்ளது. சூரிய அடர்த்தி மையத்திலிருந்து தொலைவு மிகுதிக்கேற்ப மிகக் குறைகிறது. குறுகிய தொலைவான 500 கி.மீ.க்கு ஒளிமிகு நிலையிலிருந்து தெளிவான ஒளிபுகும் அடுக்கு அமைகிறது. இந்த 500 கி.மீ. சூரியனின் விட்ட மான 1.4×108 கி. மீட்டரில் மிகச் சிறிய பகுதியே. ஆதலால் சூரியக் கோளம் வெறும் கண்ணால் பார்க்கும்போதுகூட மிகக் கூர்மையான விளிம்புடன் காணப்படுகிறது. கருமையான விளிம்பு. சூரியக் கோளம் ஒரே சீரான ஒளி கொண்டதாகத் தெரிந்த போதும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஒளியின் ஒளிச் செறிவு அளவுகளை ஆராயும்போது விளிம்பிலிருந்து வரும் ஒளியின் அளவு மையத்திலிருந்து வெளிப்படு வதைவிட 70% குறைவாக உள்ளது. இது கருமை யான விளிம்பு எனப்படுகிறது. இவ் விளைவின் அளவு, அலை நீளத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. ஒளிமண்டலத்தின் வெப்பநிலை. ஒளிமண்டலத்தின் வெப்பநிலையின் சராசரி மதிப்பு 6000 K என, சூரிய ஒளி உட்கவர் நிறமாலையின் ஆற்றல் அலைநீள மாறுபடு பண்பிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. ஆ. ளங்கோவன் ஒளி மருத்துவம் இது . . பெரும்பாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை மருத்துவமாகும். பிலிரூபின் மிகை இரத்தமும், காமாலையும் ஒளி மருத்துவத்தால் சீரடைகின்றன. பிலிரூபின், நீல வரிசையில் (420- 470) பெருமளவில் ஒளியை உள்ளேற்கிறது. தோலில் உள்ள பிலிரூபின் ஒளி ஆற்றலை ஏற்று, நச்சான பிலிரூபினை நச்சற்றதாக்கி, கல்லீரல், சிறு நீரகம் இவற்றின் மூலமாக வெளியேற்றுகிறது. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு ரத்த மாற்றுக்கு மாறாகப் பகட்டொளி விளக்குகள் கொண்டு ஒளி மருத்துவம் செய்யலாம். அதே போன்று இரத்த ஓட்டச் சீர்குலைவு கொண்ட குழந்தைகளுக்கும் இரத்த மாற்றுக்கு மாறாகப் பகட்டொளி விளக்குகள் கொண்டு ஒளி மருத்துவம்