ஒளி மறைப்பு 741
செய்யலாம். எனினும், கட்டாயமாகப் பரிமாற்ற இரத்த மருத்துவம் கொடுக்க வேண்டுமென்று இருந்தால் ஒளி மருத்துவ முறையைவிட, அந்த முறை பயனளிக்கும். இரத்தமிகை பிலிரூபின் இருப்பதாக உறுதியாக முடிவு செய்த பின்னரே ஒளி மருத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயம், காமாலைக்கான உரிய மருத்துவமும் அளிக்கப்படவேண்டும். இரத்த ஓட்டச் சீர்குலைவின் விகிதம் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தும், குளுகுரோனைல் டிரான்ஸ்பரேசின் நடவடிக்கையைப் பொறுத்தும், ஒளி மருத்துவத்தின் விளைவு அமைகிறது. ஓரிரு நாளில், ஒளி மருத்துவம் பெறும் இளங் குழந்தைகளில், பிலிரூபின் 50% குறைகிறது. முதிராக் குழந்தைகளுக்கு ஒளி மருத்துவம் அளிக்கப்பட்டால் பிலிரூபின்,8-12 மணி நேரத்தில் 1-3 மி.கி. மி.லி.க்குக் குறைகிறது. இரத்தத்தில் பிலிரூபினின் அளவு குறைந்தவுடன் ஒளி மருத்துவத்தை நிறுத்த வேண்டும். குருதிச் சிதைவு நோய் கொண்ட இளங் குழந்தைக்கு, ஒளி மருத்துவத்தால் சோகை உண்டாகலாம். விளைவுகள். வயிற்றுப் போக்கு, தோல் பொரிவு. மிகை சூடு, ஒளியால் நீர்ம இழப்பு, குழந்தை திறந்த வெளியில் இருப்பதால் ஏற்படும் நீர்க்கோப்பு, கண் காயம் ஆகியவை உண்டாகலாம். வெண்கலக் குழந்தை நோயியம் (Bronze baby syndrome) என்னும் சிக்கலும் ஒளி மருத்துவத்தால் ஒளி மறைப்பு 741 உண்டாகிற றது. ஒளி மருத்துவம் பெறும் இளங் குழந்தைகளின் தோல் சாம்பல் அல்லது மாநிற மடைகிறது. இத்தகைய குழந்தைகளிடம் பலவகைப் பட்ட இரத்த மிகை பிலிரூபின்கள் காணப்படு கின்றன. இங்கு, அடைப்புக் காமாலைக்கான அறி குறிகளும் காணப்படுகின்றன. இந்தநிறமாற்றம், நீண்டநாள் இருக்கும். ஒளி மருத்துவம் டி. என். ஏ (D, N. A) மீதும் வினைபுரிந்து சிக்கல்களை உண் டாக்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனினும் நீண்டகாலப் பட்டறிவின் மூலம், ஒளி மருத்துவம் தீமையற்றது எனக் கருதப்படுகிறது. மு.கி.பழனியப்பன் நூலோதி. Richard E Behrman, Nelson Text Book of Paediatrics, W.B. Saunders Co.. Philadel- phia, twelfth edition, 1983. ஒளி மறைப்பு விண்ணுலகில், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படும் வியக்கத்தக்க நிகழ்ச்சிகளில் ஒளிமறைப்பும் (eclipse) ஒன்றாகும். இதை மறைப்பு என்றும் குறிப்பிடுவதுமுண்டு. சூரியனை ஒரு குவிய மையமாகக் கொண்ட நீள்வட்டப்பாதைகளில் கோள் களும் துணைக்கோள்களும் கெப்ளர் விதிகளுக்குட் பட்டு இயங்குகின்றன. காண்க, கெப்ளர் விதிகள். S படம் 1