பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/768

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 ஒளி மறைப்பு

744 ஒளி மறைப்பு அதேபோல் சந்திரனின் விட்டம் சூரியனின் விட்டத் தைவிடச் சிறிதாக இருக்குமாயின் சூரியனின் நடுப் பகுதி மட்டும் மறைக்கப்பட்டு நடுச் சூரியன் மறைப்பு annular solar eclipse) ஏற்படும். எனவே சூரியன் மறைப்பு, பகுதி சூரியன் மறைப்பு, முழுச் சூரியனின் மறைப்பு, நடுச் சூரியன் மறைப்பு அல்லது வளைய மறைப்பு என மூன்று வகைப்படும். சூரியனின் உருவ அமைப்பு, புவியிலிருந்து அதன் தொலைவு, சந்திரனின் உருவ அமைப்பு அதன் தொலைவு இவற்றைப்பார்க்கும்போது, சூரிய மறைப்பு புவியின் மேல் ஒரு சில இடங்களில் மட்டும் தெரிய லாம். பிற இடங்களில் தெரியாமல், ஒளி வீசிக் கொண்டிருக்கலாம். மேலும் ஓரிடத்திற்குப் பகுதி மறைப்பாகவும் மற்றோரிடத்திற்கு முழு மறைப்பாக வும், பிறிதோர் இடத்திற்கு நடு மறைப்பாகவும் இருக்க வாய்ப்புண்டு. மேலும் அமாவாசை நாளன்று சூரியன் அண்மை யில் உள்ள கோள் சந்தியிலிருந்து 15°5 க்குள்ளிருந் தால் சூரியன் மறைப்பு உறுதியாக இருக்கும். 18,°3க்கு மேலிருந்தால் மறைப்பு ஏற்படாது. 15.°5 க்கும். 183க்கும் இடையிலிருந்தால் மறைப்பு ஏற்படலாம் சூரியன் சந்திரன் மறைப்புகளின் முக்கிய ஒற்றுமை வேற்றுமைகள். சந்திரன் புவியைக் கிழக்கிலிருந்து மேற் காகச் சுற்றி வருவதால், சந்திரன் மறைப்பின்போது முதலில் அதன் கிழக்குப் பகுதி கருநிழல் கூம்பில் நுழையும். அதனால் மறைப்பு கிழக்குப் பகுதியில் தொடங்கும். ஆனால் சூரியன் மறைப்பின் போது, சூரியனின் மேற்பகுதி மறையும். சந்திரன் மறைப்பில், சூரிய ஒளிபடாததால் சந்திரன் இருண்டுவிடும். சூரியன் மறைப்பில், சூரியன் சந்திரனால் மறைக்கப் படும். சந்திரன் மறைப்பு முக்கியமாகப் பகுதி அல்லது முழு மறைப்பு என இருவகைப்படும். சூரியன் மறைப்பு பகுதி சூரியன் மறைப்பு முழுச் சூரியன் மறைப்பு M நடுச் சூரியன் மறைப்பு படம் M As A₁ M B₁ A2 A B₁