பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிமாறு விண்மீன்‌ 745

ஒளிமாறு விணமீன் 745 பகுதி. முழு வளைய மறைப்புக்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். கருநிழல், புறநிழல் பகுதியைவிட, சூரியனுக்கும் புவிக்குமிடையேயுள்ள பகுதி அகலமாக உள்ளதாலும் குறிப்பிட்ட காலத்தில் சந்திரன் இப்பகுதியில் நீண்ட காலத்திற்கு இருக்க வாய்ப்பு இருப்பதாலும் சூரிய மறைப்புகள் சந்திரன் மறைப்புகளைவிட எண்ணிக்கை யில் மிகுந்திருக்கும். புவியில் சந்திரனை நோக்கியுள்ள பகுதியில் உள்ள அனைவருக்கும் சந்திரன் மறைப்பு அப்படியே தெரியும். ஆனால் சூரியன் மறைப்பு பல இடங்களில் தெரியாமலும் இருக்கும். தெரியும் இடங்களிலும் ஒவ்வொரு விதமாகத் தெரியும். ஓர் இடத்தில் பகுதி மறைப்பாக இருப்பது மற்றோர் இடத்தில் முழு மறைப்பாகவோ வளையமறைப்பாகவோ தெரிய லாம். ஆகவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியன் மறைப்புகளைவிடச் சந்திரன் மறைப்புகள் மிகுதி யாகத் தெரியும். சந்திரனின் முழு மறைப்பு நேரம் நெடுநேரம் இருக்கும். ஆனால் சூரியனின் முழு மறைப்பு நேரம், சில நிமிட அளவில் தான் இருக்கும். மேலும், ஓராண்டுக் காலத்தில் மறைப்புக்களின் மீப்பெரு எண்ணிக்கை 7 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படும் மறைப்பு சூரிய மறைப்பானால் அவ்வாண்டில் 5 சூரியமறைப்புகளும் 2 சந்திர மறைப்புக்களும் நிகழும். அல்லது சந்திர மறைப்புடன் ஆண்டு தொடங்கினால் 4சூரிய மறைப்புகளும் 3 சந்திர மறைப்புகளும் நிகழும். மேலும் ஒரு கோள் சந்தியின் அருகில் ஏற்படும் மறைப்புகளின் மீச்சிறு எண்ணிக்கை 2 என்றும் அவ்விரு மறைப்புக்களும் சூரிய மறைப்புகளாகவே இருக்கும் என்றும், மீப்பெரு எண்ணிக்கை 3என்றும் அவற்றில் 2சூரிய மறைப்பு ஒரு சந்திர மறைப்பு ஏற் படும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகச் சூரியன் மறைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தபோது, குறிப்பிட்ட ஓராண்டில் ஒரு நாட்டில் சூரிய மறைப்பு தெரியாமலே இருக்கலாம். அதனால் அந்த ஆண்டில் சூரிய மறைப்பு ஏற்படவில்லை என்று கருதக்கூடாது. அந் நாட்டில் தெரியாவிட்டாலும் வேறுஎப்பகுதியிலேனும் தெரியலாம். மேலும் சூரியன் முழு மறைப்பும் வளைய மறைப் பும் வானியல் அறிஞர்களுக்கு, ஓர் அறிய வாய்ப் பளிக்கும். அன்று சூரியனின் அருகிலுள்ள விண் பொருள்களைப் பற்றியும், சூரியனின் புற உட்பகுதி களைப் பற்றியும் ஆய்வு செய்ய முடியும். அதனால் புவியின் மேல் எந்த இடத்தில் இம்மறைப்பு ஏற்படு கிறதோ அவ்விடத்திற்குப் பல நாட்டு வானியல் அறிஞர்களும் தக்க வழக்கம். ஏற்பாடுகளுடன் செல்வது ஒளிமாறு விண்மீன் பங்கஜம் கணசேன் சிஃபியஸ் என்னும் விண்கூட்டத்தில் ஒளிமாறு விண் மீன் கூட்டம் (cepheid) வகையைச் சேர்ந்த விண்மீன் கள் உள்ளன. இந்த விண்மீன் கூட்டம் பிளெட்ஸ் (pleadies) எனும் மண்டலத்திற்கும். காசியோப்பியா எனும் மண்டலத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டத்தின் சிறப்பான எடுத்துக்காட்டாக 8-சிஃ பெய் (8-cephei) என்னும் விண்மீனைக் குறிப்பிட லாம். 1785 இல் குட்ரிக் என்னும் வானவியலாரால். இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பொலிவுப் பரி மாணம் (magnitude) ஏறக்குறைய 3.6 4.2 அளவு வரை ஆகும். இவ்வினத்தைச் சேர்ந்த மற்றொரு விண்மீன் நீ - செஃபாயாகும் (B-cephei). இதன் பொலி வுப் பரிமாணம் 0.05 அளவாக இருந்தும்கூட, பெர் லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானவியலார் பால்குத்னிக் என்பாரால் இதன் ஒளிமாறுந் தன்மை காணப்பட்டது. ஒளிமாறு விண்மீனின் காலவட்டம் ஏறக்குறைய 5.37 நாளாகும். இவ் விண்மீன் கூட்டத்தில் ஒரு நாளுக்குக் குறைந்த கால வட்டமுடைய விண்மீன் களும் பல நாள் காலவட்டமுடைய விண்மீன்களு ம் உள்ளன. ஒரு நாளிலிருந்து ஐம்பது நாள் கால வட்டமுடைய ஒளிமாறு விண்மீன்களும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. சில மணி நேரமே காலவட்டமுடைய விண்மீன்களும் திரள் திரளாக இவ்விண்மீன் கூட்டத் திலுள்ளன. இத்திரள்கள் விண்மீன் திரள் மாறிகள் (cluster variables) எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை கோள வடிவத்தைப் பெற்றவை ஆகும். இக் கூட்டத்தைச் சேர்ந்த விண்மீன்களுக்குப் பல பொதுத் தன்மைகள் உள்ளன. அவை முறையே, மீப்பெரு விண்மீன்களாக உள்ளவை. பிற மீப்பெரு விண்மீன் களைவிடப் பொலிவு மிகுந்தவையாகும். பொலிவு மாற்றத்தில் குறையும், மிகையும் சீரா கவும், விட்டுவிட்டு மாற்றங்கள் இல்லாமல் தொடர்ச் சியாகவும் உள்ளன. பொலிவுப் பரிமாணம் தன் மீப் பெரு மதிப்பை விரைவில் அடையும். அதே சமயம் அதன் சரிவு சீராகவும், மெதுவாகவும் இருக்கும். நாள் ஆக, ஆக விண்மீன் மிகுதியான செம்மை நிறத் தைப் பெற்று, பளபளப்பையும் மிகுதியாகப் பெறும். ஒளிமாறு விண்மீனை வான ஆராய்ச்சியாளரின் செந்தர ஒளி (astronomer's standard candle) எனக் குறிப்பிடலாம். மங்கலான விண்மீன்கள். வர்ஜினஸ்