பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 ஒளி மிகைப்பி

746 ஒளி மிகைப்பி விண்மீன்கள் எனப்படுகின்றன. ஒரு நாளுக்குக் குறைந்த காலவட்டமுடைய விண்மீன்கள்R.R. விரா விண்மீன்கள் எனவும், குறைகால ஒளிமாறி விண் மீன்களெனவும், திறன் மாறிகள் எனவும் கருதப் படுகின்றன. மு. அரவாண்டி நூலோதி. ரா. அனுமந்தராவ், வானியல், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. ஒளி மிகைப்பி ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியை ஏற்று, அதைவிடப் பன்மடங்கு மிகுதியான ஒளியை வெளியிடும் கருவி ஒளி மிகைப்பி (light amplifier) எனப்படுகிறது.ஓர் ஒளி மூலமும், ஒளிமின்கல அஞ்சல் (photocell relay) கருவியும் கொண்ட ஓர் எளிய அமைப்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.ஓர் ஒளி மிகைப்பி தன் மேல் படும் உருவத்தை முற்றிலும் ஒத்த ஓர் உருத்தோற்றத்தை மிகு பொலிவுடன் உண்டாக்க வேண்டும். மேலும் அது மிகக் குறைவான பொலிவு மட்டங்களிலும் செயல்பட்டு, தான் உண்டாக்கும் உருத்தோற்றத்தில் போலியான பொலிவு மாற்றங் களை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். ஒளி மிகைப்பிகளை உருவ மிகைப்பிகள் (image intensi- fiers) என்று குறிப்பிடுவர். இவை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மங்கலான ஓர் உருவத்தின் பொலிவைப் பெருக்கி வெறும் கண்ணால் காணக் கூடிய அளவுக்கு மிகைப்படுத்துகின்றன. ஆனாலும் முழுமையான இருளில் உள்ள பொருள்களின் உருத் தோற்றங்களை அவற்றால் பொலிவூட்ட முடியாது. உண்மையில் ஒரு குறிப்பிட்ட அடிப்படையான பொலிவு வரம்புக்கு மேற்பட்ட பொலிவுள்ள உருத் தோற்றங்களையே ஒளி மிகைப்பிகளால் மிகைப் படுத்திக் காட்ட முடியும். ஒளியின் துகள் தன்மை காரணமாக இக் கட்டுப்பாடு உண்டாகிறது. ஒரு வில்லையின் வழியாகவோ, வேறு ஒளியியல் அமைப் பின் வழியாகவோ வந்து ஓர் உருத்தோற்றப் பரப் பின் மேல் விழுகிற ஃபோட்டான்கள் தன்னிச்சையாக எந்த நேரத்திலும் வந்து விழும். உருத்தோற்றம் உருவாகத் தேவையான குறிப்பிட்ட நேர இடை வெளி அலகுப் பரப்பில் வந்து விழும் ஃபோட்டான் களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தால், உருத்தோற்றப் பொலிவில் உள்ள உண்மையான வேறுபாடுகள் காரணமாகப் ஃபோட்டான்களின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைவிடப் புள்ளியியல் தன்மையிலான (statistical) ஏற்ற இறக் கங்கள் மிகுதியாகும். இத்தகைய சூழ்நிலைகளில் உருத்துலக்கம் செய்ய முடியாமல் போகும். உருவ மிகைப்பிக் குழல். சில மிகைப்பிக் குழல் களில் ஓரளவு ஒளி புகக்கூடிய ஒளி எதிர்மின்முனை உள்ளது. அதிலிருந்து வெளிப்படும் எலெக்ட்ரான் களின் அடர்த்திப் பரவீடு அதன் மேல் விழுகின்ற ஒளிச்செறிவின் பரவீட்டுக்கு நேர்விகிதத்தில் உள்ளது. ஓர் ஒளி உருத்தோற்றம் எதிர்மின் முனைத் தகட்டின் ஒரு பக்கத்தில் விழும்போது மறு பக்கத்திலிருந்து ஓர் எலெக்ட்ரான் மின்னோட்ட உருத்தோற்றம் வெளிப்படுகிறது. ஒளிக் கதிர்களை ஒரு கண்ணாடி வில்லை குவிப்பதைப் போலவே ஓர் எலெக்ட்ரான் குவி அமைப்பு இந்த எலெக்ட்ரான் உருத்தோற்றத்தை ஒரு மிகைப்பி உறுப்பின் மேல் குளிக்கிறது. எலெக்ட் ரான்கள் நிலை மின்சார அல்லது காந்த விசைகளைப் பயன்படுத்திக் குவிக்கப்படும். மிகைப்பியிலிருந்து மிகு செறிவுடன் வெளிப்படும் எலெக்ட்ரான் கற்றையைப் பிறிதோர் குவி அமைப்பு மீண்டும் குவித்து அடுத்த மிகைப்பி உறுப்பின் மேல் செலுத்தும். இவ்வாறு பலமுறை மிகைப்படுத்தப்பட்ட எலெக்ட்ரான் கற்றை ஓர் ஒளிர்திரையின் மேல் வீழ்த்தப்பட்டு அதன் ஒளி உருத்தோற்றம் தோற்றுவிக்கப்படுகிறது. அண்மை ஒளிமிகைப்பிக் குழல்கள் (proximity tubes) போன்ற கருவிகளில் ஒளி எதிர்மின்வாய்த் தகடும், ஒளிர் திரையும் ஒன்றுக்கொன்று இணை யாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இக்கருவி களில் எலெக்ட்ரான்களைக் குவியப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஒளி எதிர் மின்வாயில் வெளிப்படும் எலெக்ட்ரான்கள் உயர்மின்புலங்களால் குழாயின் அச்சுக்கு இணையாக முடுக்கப்பட்டு ஒளிர் திரையின் மேல் விழும். உருத்தோற்ற மிகைப்பிக்குழாய்களின் நிறமாலை மறு விளைவு, அவற்றிலுள்ள ஒளி எதிர்மின் வாய் களின் தன்மையைப் பொறுத்திருக்கிறது. அவற்றை அலை நீள மாற்றிகளாகவும் (wave length converter) செயல்பட வைக்கலாம். சாதாரணமாக இரு வகை யான ஒளி மிகைப்பி உறுப்புகள் பயன்படுகின்றன. ஒரு வகையில் ஓர் ஒளி புகும் மெல்லிய படலம் அல்லது ஒளியியல் இழைத் தகட்டின் ஒரு பக்கத்தில் ஓர் ஒளிர் திரையும் மறு பக்கத்தில் ஓர் ஒளி எதிர்மின் வாயும் பொருத்தப்பட்டுள்ளன. ஒளித் தகட்டின் மேல் எலெக்ட்ரான் உமிழ்விலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரான்களை வெளியேற்றுகிறது. இவ்வாறு மிகைப்பி உறுப்பு எலெக்ட்ரான் உருத் தோற்ற மின்னோட்ட அடர்த்தியை 50 மடங்கு மிகைப்படுத்துகிறது. இத்தகைய இரண்டு மிகைப்பி உறுப்புகளை அடுத்தடுத்து அமைத்து 2500 மடங்கு வரை மிகைப்படுத்த முடியும். இரண்டாம் வகை ஒளிமிகைப்பி உறுப்பு ஒரு மெலிந்த துணை உமிழ்வு மின்னோட்டப் பெருக்கி (secondary emission current amplifier) ஆகும். அதற்கு நுண் வழித்தகடு (microchannel plate