பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 ஒளி மின்‌ கடத்துமை

748 ஒளி மின் கடத்துமை உள்ள எந்த ஓர் அரிதில் கடத்தி. அல்லது குறை கடத்தியின் மீது விழும்போதும் ஒளிமின் கடத்துமை நிகழ்கிறது. ஆனால் அனைத்துப் பொருள்களிலும் உண்டாகும் ஒளிமின் கடத்துமை ஒரே அளவாக ராது. எந்த ஒரு பொருளில் சிறப்பான குறைபாடுகள் னவோ அவற்றில் ஒளியின் காரணமாக ஏற்படும் மின் கடத்துமை பெருமளவில் இருக்கும். வணிக முறையில் பல ஒளிமின் கடத்துமைக் கலன்கள் உள்ளன. ஜெர்மானியம், காட்மியம், சல்ஃபைடு, கோட்மியம் செலுனைடு, ஈய சல்ஃபைடு ஆகிய பொருள்களால் ஆனவையாகும். ஒளிமின்கடத்துமை உணர்வி. மின்னனு கடத்தும்பட்டை ஆற்றல் இடைவெளி மின்னனு ஒளிப்பான் ஆற்றல் E, = hf, + துளை + துளை இணைதிறன்பட்டை ஒளிப்பான் ஆற்றல் E=hf, படம் 1. வை 1. இலக்கமிட்ட ஒளிப்பான் எலெக்ட்ரானைக் கடத்தும் பட்டைக்கு உயர்த்துகின்றது. 2. இலக்கமிட்ட ஒளிப்பான் எலெக்ட் ரானை இடைவெளியைத் தாண்டிச் செல்லச் செய்ய இயலவில்லை E, என்னும் ஆற்றல் அளவு கொண்ட ஓர் ஒளிப் பானின் ஆற்றல் E = hf, என்று குறிப்பிடலாம். h என்பது பிளாங்கின் மாறிலி f என்பது ஒளிப்பானின் அதிர்வெண். இந்த ஒளிப் பானின் ஆற்றல் குறை கடத்தியின் கடத்தும் பட் டைக்கும் இணைதிறன் பட்டைக்கும் இடையே உள்ள ஆற்றல் இடைவெளியைவிட மிகுந்தால் இத்தகைய ஒளிப்பான் ஒரு குறை கடத்தியின் மீது விழும்போது. அதிலுள்ள எலெக்ட்ரானுக்கு ஆற்றல் அளிக்கப்பட்டு அது கடத்தும் பட்டைக்கு உயர்த்தப்படுகின்றது. அதே சமயத்தில் ணைதிறன் பட்டையில் ஒரு துளை உண்டாகிறது. இவ்வாறு எலெக்ட்ரான் - துளை இணையொன்று உருவாகிறது. இந்தஎலெக்ட்ரானும், துளையும் மின்சாரத்தைக் கடத்தும் தாங்கி களாகப் பணி புரிகின்றன. இதன் காரணமாக அக் குறை கடத்தியின் மின் கடத்துமை மிகுதியாகிறது. இவ்வாறு ஏற்படும் மின் கடத்துமை. ஒளியின் அள வையும், அவ்வொளி விழும் பரப்பையும் பொறுத்து மாறுகிறது. இத்தகைய குறை கடத்திகளின் மின் தடை, ஒளியின் காரணமாக மாறுபடுவதால் ஒளி மின் கடத்துமைக் கலன்கள் ஒளிமின்தடை (photo resistor) எனப்படுகின்றன. இவ்வகை அமைப்புகள் ஒளிமின் கடத்துமை உணர்விகள் (photo conductive sensors) எனப்படும். நிறமாலை மறுதலிப்பு. ஒளிமின் கடத்துமைப் பண்பு கொண்ட குனீற கடத்திகளின் மின் கடத்துமை அவற்றின் மீது விழும் ஒளியின் அலைநீளத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. ஒரு குறிப்பிட்ட ஒளிமின் கடத்தும் கலன் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளிக்குப்பெருமஅளவு மின் கடத்துமையைக் காட்டும். பிற அலைநீளங்களுக்குச் சிறும அளவு மின்கடத்து மையைக் காட்டும். இப் பண்பு நிறமாலை மறு தலிப்பு (spectral response) எனப்படும். நிறமாலை மறுதலிப்பு என்னும் பண்பு ஒளிமின் கடத்தும் மின் கலன்களின் அடிப்படைப் பொருளைப் பொறுத்ததாகும். மேலும் அவ்வடிப்படைப் பொருள் களில் ஊட்டப் பட்ட கலப்புகளின் அளவையும், மின் கலன்கள் உருவாக்கப்பட்ட முறையையும் பொறுத்து நிறமாலை மறுதலிப்பு அமையும். படம் 1 இல் காட்டியுள்ளபடி E, = hf, போன்ற குறை ஆற்றல் கொண்ட ஒளிப்பான்கள் எலெக்ட் ரான்களை இணைதிறன் பட்டையிலிருந்து கடத்தும் பட்டைக்கு உயர்த்த முடிவதில்லை. இத்தகைய ஒளிப்பான்களால் மின்கடத்துமை மிகுவதில்லை. விளக்கின் ஆற்றல், மனிதக் கண்ணின் மறுதலிப்பு மனித 80 கண் S 40 புற ஊதா 22 3000 5000 7000 700 2870°K வெப்பநிலை கொண்ட டங்ஸ்டன் விளக்கு அகச்சிவப்பு 9000 900 அலை நீளம், 10-10 மீட்டர் அளவில் 300 500 அலை நீளம் மில்லி மைக்ரானில் படம் 2. 11,000 1100