பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 ஒளி மின்‌ விளைவு

750 ஒளி மின் விளைவு சாரம் 0.5 1மில்லி ஆம்பியர் வரை கிடைக்கிறது. இவ் வகை டையோடுகள் 20000 இலட்சம் சுற்றுகள் நொடி அதிர்வெண்வரையிலும் வேலை செய்யும் திறன் கொண்டவை இத்தகைய டையோடுகளின் விலை அதிகம் என்பதே ஒரு குறையாகும். NPN ஒளி டிரான்சிஸ்டர். உண்மையில் எந்த ஒரு சாதாரண டிரான்ஸிஸ்டரும் ஒளியின் காரணமாகப் பாதிக்கப்படுவது உண்டு. இதன் காரணமாகவே மற்ற கருவிகளில் பயன்படும் டிரான்சிஸ்டர்கள் ஒளி படாவண்ணம் அமைக்கப்படுகின்றன. ஆனால் NPN ஒளி டிரான்சிஸ்டர்களில் ஒளி அதிக அளவில் ஏற்பு வாய்- அடிவாய்ச் சந்திப்பின் மீது ஒளியைக் குவிக் கும் வண்ணம் குவி வில்லைகள் அமைக்கப்பட்டுள்ளன ஒளி விழும்போது இந்தச் சந்திப்பில் உண்டாகும். மின்சாரம், ஏற்புவாய் மின்சாரத்தைப் பெருக்குகிறது இத்தகைய NPN டிரான்சிஸ்டர் குவி வில்லை களுடன் 0.2 அங்குல விட்டமும், 0, 2 அங்குல நீளமும் கொண்டதாக இருக்கும். இதன் இருள் மின்சாரம் 10 நானோ ஆம்பியர் (10nA=10X10-2A)இருக்கும். ஏற்புவாய் மின்சாரம் 25 மில்லி ஆம்பியர் என்ற அளவாக இருக்கும். இது அதிக அளவு உணர்திறன் தேவைப்படும் கருவிகளில் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. -நா. தங்கவேல் நூலோதி. Allen Mottershed, Electronic devices and Circuits, Prentice Hall of India, New Delhi. 1982 John D.Ryder, Engineering Electronics, Mc Graw- Hill Book Co 1969; S.M. Sze, Physics of Semi conductor devices, Wiley Eastern Limited, New Delhi, 1983. கிறது. நேர்மின்னூட்டம் பெற்ற துததநாகத் தகட் டின் மேல் புற ஊதாக் கதிர்களை வீசினால், அதி லுள்ள நேர் மின் அளவு மிகுதியாகிறது. எனவே புற ஊதாக் கதிர்களை வீசுவதன் மூலம் ஓர் உலோகப் பரப்பிலிருந்து எதிர் மின் துகள்களை மட்டுமே வெளியேற்ற முடியும் என ஹால்வாக்ஸ் முடிவு செய்தார். 1898 இல் தாம்சன் உலோகங்களி லிருந்து புற ஊதாக் கதிர்களால் வெளியேற்றப்பட்ட துகள்களின் efm மதிப்பு எதிர்மின் முனைக் கதிர் களின் em மதிப்புக்குச் சமமாக இருப்பதைக் கண்டு பிடித்தார். 1916 இல் ஐன்ஸ்டீன் வெவ்வேறு அலை நீளமுள்ள கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கதிர்களை சோடியம், பொட்டாசியம்,சீசியம். ருபீடியம், லித்தியம் ஆகிய உலோகங்களின் மேல் செலுத்தி அவற்றிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிபடுவதைக் கண்டுபிடித்தார். இந்த எலெக்ட்ரான்கள் ஒளி எலெக்ட்ரான்கள் (photoelectrons ) என்றும் இந்த நிகழ்வு ஒளி மின்னியல் விளைவு (photoelectric effect) என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஒளிமின் விளைவு மிகக்குறைந்த அலை நீளமுள்ள கதிர்கள் உலோகப் பரப்புகளின் மேல் விழும்போது அவற்றிலிருந்து எலக்ட்ரான்கள் வெளிப்படுவதை 1887இல் ஹெர்ட்ஸ் என்பார் கண்டு பிடித்தார். ஒரு மின்பொறி இடைவெளியிலுள்ள காற்றின் மேல் புறஊதாக் கதிர்களை வீசினால் உயர்வதையும் அவர் கண்டார். அதன் மின் கடத்து திறன் 1888 இல் ஹால்வாக்ஸ் என்பார் பின்வரும் உண்மைகளைக் கண்டுபிடித்தார். மின் நடு நிலை யான ஒரு துத்தநாகத் தகட்டின் மேல் புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சினால் அத்தகடு நேர் மின்னுள்ள தாகி விடுகிறது. எதிர்மின்னூட்டம் பெற்ற துத்த நாகத் தகட்டின் மேல் புறஊதாக் கதிர்களை வீசி னால் அதிலுள்ள எதிர் மின் அளவு விரைந்து குை + H ஒளிமின் விளைவு சோதனை அமைப்பு ஒளி மின்னியல் விளைவைப் படத்தில் காட்டி யுள்ளது போன்ற கருவியமைப்பால் ஆராயலாம். ஒரு வெற்றிடமாக்கப்பட்ட கண்ணாடிக் குழாயில் ஓர் ஒளிமின் விளைவு காட்டும் தகடு தீ வைக்கப் பட்டுள்ளது. பொதுவாக அது ஒரு மெருகேற்றப் பட்ட துத்தநாகத் தகடாக இருக்கும். கண்ணாடிக் குழாயுள் ஓர் உள்ளீடற்ற குழாய் C உள்ளது. அதிலுள்ள சிறிய துளை வழியாக ஒளி p- தகட்டின் மேல் விழுகிறது. கண்ணாடிக் குழாயின் மறுமுனை யில் உள்ள ஒரு குவார்ட்ஸ் படிகத்தாலான சாளரத் தின் வழியாக ஒளி உள்ளே செலுத்தப்படுகிறது.