பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/776

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 ஒளி மின்னியல்‌

752 ஒளி மின்னியல் எலெக்ட்ரான்களால் ஏற்படும். ஏனையது p வகைப் பொருளாலானது. அதில் மின்கடத்தல் நேர்மின் துளைகளால் நிகழும். இத்தகைய ஒரு சந்திக்கு அரு கில் ஒளி உட்கவரப்படும்போது புதிய இயக்கமுள்ள எலெக்ட்ரான்களும், துளைகளும் உண்டாக்கப்படு கின்றன.ஓர் ஒளி மின்னழுத்தக்கலத்தில் இரண்டு குறை கடத்தி வகைப் பொருள்களின் சந்தியைச் சுற்றி யுள்ள தோன்றுகிறது. பகுதியில் ஒரு மின்புலம் எலெக்ட்ரான்களும், துளைகளும் இம்மின்புலத்தில் இயங்குகின்றன. இதனால் ஏற்படும் மின்னோட்டம் வெளிச்சுற்றில் பாய்ச்சப்படுகிறது. மின்கலம் இல்லா மலேயே இச்சுற்றில் மின்னோட்டம் தோன்றுகிறது. இக்கருவிகள் விண்வெளிக்கலங்களில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றப் பயன்படுகின்றன. கே.என். ராமச்சந்திரன் நூலோதி-Paladin, How Things work, Gra- nada Publishing, England, 1978. ஒளி மின்னியல் திண்மம், - நீர்மம் அல்லது வளிமத்தின் மேல் படும் மின்காந்தக் கதிர்வீச்சு மின்னூட்டங்களை விடுவிப்பது ஒளிமின்னியல் (photoelectricity) எனப் படும். அந்த மின்னூட்டங்களை ஒரு மின்புலத்தில் கண்டுணர முடியும். இச்செயல்முறையில் உறுதி யான குவாண்ட்டம் தன்மை உள்ளது. மின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ் விளைவுக்கான விளக் கத்தை முதன்முதலாக அளித்தார். அவர் காந்தக் கதிர்வீச்சின் குவாண்ட்டம் தன்மையின் அடிப்படையில் தம் விளக்கத்தை உருவாக்கினார். மின்காந்தக் கதிர்வீச்சு ஃபோட்டான் துகள்களால் ஆனது. ஒவ்வொரு போட்டானும் hv தனிச்சிறப்புமிக்க ஆற்றல் கொண்டது. இதில் என்னும் என்பது பிளாங்கின் மாறிவி. V என்பது கதிர் வீச்சின் அதிர்வெண், E=hv-p என்னும் ஐன்ஸ்டீனின் ஒளிமின் சமன்பாட்டுக்குக் கீழ்ப்படியும் வகையில் பொருள்களிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் படுகின்றன. இதில் E என்பது வெளிப்படும் எலெக்ட் ரான்களின் இயக்க ஆற்றல். டி என்பது எலெக்ட் ரான்களின் பிணைப்பு ஆற்றல். மின்னியல் தொடக்ககால ஒளி ஆய்வுகளில் உலோகப் பரப்புகளிலிருந்து ஒளியால் வெளியேற்றப் பட்ட எலெக்ட்ரான்கள் வெற்றிடத்துக்குள் செலுத் தப்பட்டன அல்லது வளிமங்களில் ஒளி மூலமான அயனியாக்கத்தின் காரணமாக எலெக்ட்ரான்க களும் நேர் மின் அயனிகளும் விடுவிக்கப்பட்டன. இத் தகைய நிகழ்வுகளுக்கான பிணைப்பு ஆற்றல் சில எலெக்ட்ரான் வோல்ட் அளவிலேயே இருந்தது. இத்தகைய ஆய்வுகள் கண்ணுக்குப் புலனாகும் ஒளி அல்லது புற ஊதாக்கதிர்களைக் கொண்டே நிகழ்த் தப்பட்டன. சாதாரண ஒளிமிகைப்பிக் குழாய்களில் இந் நிகழ்வு பயன்படுகிறது. ஒரு திண்மத்திற்குள் எலெக்ட்ரானையும், நேர் மின் துளைகளையும் விடுவிப்பதில் மின் காந்தக் கதிர்வீச்சுகள் தம் குவாண்ட்டம் தன்மையை வெளிக் காட்டிக் கொள்கின்றன. இவற்றின் மூலம் ஒளி மின் கடத்தல் (photoconductivity) ஒளி மின்னழுத்தம் (photovoltaic effect) ஆகிய விளைவுகள் தோன்று கின்றன. குறை கடத்திகள் எனப்படும் பொருள் களில் இவ் விளைவுகளை எளிதாகக் காணலாம். குறை கடத்திகளில் எலெக்ட்ரான்கள் நேர்மின் துளைகள் ஆகியவற்றுக்கான பிணைப்பு ஆற்றல் சில மில்லி எலெக்ட்ரான் வோல்ட் அளவுக்கும் குறைவா யிருக்கக்கூடும். எனவே இத்தகைய விளைவுகளைக் கட்புலன் ஒளியும், கீழ்ச்சிவப்பு, தொலைக் கீழ்ச் சிவப்புக் கதிர்களும்கூட உண்டாக்க முடியும். இவ் விளைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருவிகள் வெப்பக் கதிர் வீச்சு உருத்தோற்றங்களை உருவாக்குதல், சூரிய ஆற்றவை மின்னாற்றலாக மாற்றுதல், பாதுகாப்புக் கண்காணிப்பு, தகவல் காட்டிகள், உற்பத்திக் கண்காணிப்புப் போன்ற பல பணிகளில் பயன்பட்டு வருகின்றன. கே.என். ராமச்சந்திரன் நூலோதி:- J. B. Rajam, Atomic Physics, Chand and Company, New Delhi, 1985. ஒளி மீட்சியல் மின் ஒளியைப் புகவிடும் சமச்சீரான (isotropic) கடத்தா இடைப்பொருள்கள் (dielectrics) ஊடே ஒளியைச் செலுத்தி அதே சமயத்தில் அப்பொருள்கள் மீது தகைவைச் (stress) செலுத்தினால் சில ஒளியியல் தன்மைகள் மாறுபடுகின்றன. இவ்விளைவு ஒளி மீட்சியியல் (photoelasticity) எனப்படும். எடுத்துக் காட்டாக, ஒரு பழுதில்லாத கண்ணாடித்துண்டை எடுத்துக்கொண்டு அதன் நீளம், அகலம் அல்லது உயரத்திற்கு இணையாக அழுத்தினாலோ, முறுக்கி னாலோ அது வலிந்த இரட்டை ஒளிவிலக்க விளைவை (forced double refraction) ஏற்படுத்தும். கண்ணாடித்துண்டை நிக்கல் பட்டகங் களிடையே வைத்து முனைவுடை ஒளியை (polarised light) உட்செலுத்தி ஆய்ந்தால் பார்வை மண்டலம் இருண்டு தோன்றும். இக்கண்ணாடித் துண்டின் மீது தகைவைச் செலுத்தி ஆய்ந்தால் பார்வை