ஒளி முறைத் தாழ்த்தல் 753
மண்டலத்தில் பல நிறமுள்ள ஒளிப்பட்டைகள் தோன்றுகின்றன. கண்ணாடியின் அமைப்பையும், அதன்மீது செலுத்தப்படும் தகைவையும் ஆராய 1893இல் மார்ஸ்ட்டன் என்பார் இத்தத்துவத்தைப் பயன்படுத்தினார். வட்டமுனைவாக்கம் பெற்ற ஒளியைப் பயன்படுத்தும் ஒரு கருவியைக் காக்கர் என்பார் 1913இல் நிறுவினார். யூவல் என்பார் மின் கடவா இடைப்பொருள்களான உருளையை முறுக்கினால் அவ்வுருளை முனைவு கொண்ட யின் தளத்தைச் சுழற்றுகின்றது என்றும், இச்சுழற்சி முறுக்கிற்கு எதிர்த்திசையில் செயல்படுகிறதென்றும் விளக்கினார். ஒளிமீன் (சுவாதி) ஒளி கொ.சு. மகாதேவன் இரவு நேரத்தில் வானில் ஒளிரும் விண்மீன்களில் நான்காம் விண்மீன். சுவாதி விண்மீன் எனப்படும் ஒளிமீன் (arcturus) ஆகும். இது வட விண்மீன் குழு வான (constellation) ஆயன் விண்மீன்குழுவில் (bootes) உள்ளது. பெருங்கரடி மண்டலத்தின் (Ursa- Major) நீண்ட வால்பகுதியான நேர்கோட்டில் இவ் விண்மீன் அமைந்துள்ளது. கரடிக்காப்பாளன் (bear guard) என்று பொருள்படும்படியான கிரேக்கச் சொல்லிலிருந்து இதன் பெயர் உருவாக்கப்பட்டது. ஒளிமீனின் பொலிவுப் பரிமாணம் (magnitude) 0-06 ஆகும். ஆரஞ்சு வண்ண நிறமுடைய இது K- வகை நிறமாலையைச் சார்ந்ததாகும்; மூன்றாம் வகை ஒளிர்தன்மை (luminocity classfii) உடைய தாகும். இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல் 23 மடங்கு பெரியதாக இருப்பதாலும் புவிக்கு அருகில், அதாவது தோராயமாக ஒளியாண்டுத் தொலைவில் இருப்பதாலும் இவ்விண் மீன் மிகவும் வெளிச்சமாகத் தெரிகின்றது. சூரியனை விடச் சற்றுக் குளிர்ச்சியான இவ்விண்மீனின் புறப் பரப்பின் வெப்பநிலை 4300K ஆகும். ஒளி முறைத் தாழ்த்தல் பசுந்தாவரங்கள் 38 பெ. வடிவேல் கார்பன் வளிமண்டலத்திலுள்ள டைஆக்சைடை இலைத் துளைகளின் வழியாகவும், நீரை வேர்களின் மூலமும் பெற்று, இலையிலுள்ள பச்சையத்தைக்கொண்டு ஒளியின் உதவியால் கார்போ ஹைட்ரேட்டுகளைத் தயாரித்துக் கொள்கின்றன. ஒளி முறைத் தாழ்த்தல் 753 இவ்வாறு சிறுமூலக்கூறுகளைச் சூரிய ஆற்றல் கொண்டு இணைத்துப் பெரு மூலக்கூறுகளைப் பெறு வதே ஒளிச்சேர்க்கை எனப்படுகிறது. அதாவது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுவதாகும். பசுந்தாவரங்கள் சூரிய ஒளியை ஈர்க்கும்போது, பசுங் கணிகங்களிலுள்ள (chloroplast) பச்சையங்களின் எலெக்ட்ரான்கள் தூண்டப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்களால் செல்களில் ATP (adinosine tri- phosplate) NADPH (Nictotinamide Adenine Dinudeotide phosphate) எனப்படும் செரிக்கும் ஆற்றல்கள் (assimilatory powers) தோன்றுகின்றன. பச்சையத்திற்குத் தேவையான எலெக்ட்ரான்கள் நீரின் பகுப்பால் கிடைக்கின்றன. இச்செயலின்போது ஆக்சிஜன் வெளிப்படுகிறது. 4H,O → 2H,0 + 0, +4e + 4H+ இச்செயலை ஒளிச்செயல் என்பர். இதற்கு ஹில் செயல் என்னும் பெயரும் உண்டு. இதற்குச் சூரிய ஒளி தேவைப்படுவதால் இது ஒளி வேதியியல் செயல் (photo chemical action) ஆகும். ஒளிச்செயல் (light reaction) பசுங்கணிகத்தி லுள்ள கிரானா பகுதியில் நடைபெறுகிறது. இந்தக் கிரானா (Grana) என்னும் சவ்வுப் படலத்தில் பல பச்சைய மூலக்கூறுகளும், துணை நிறமிகளும் காணப் படுகின்றன. இவற்றின் பாகுபாடு. அவை ஈர்க்கக் கூடிய அலைவரிசை ஒளியைப் பொறுத்ததாகும். பொதுவாக உயர் தாவரங்களில் இந்த ஒளிச்சேர்க்கை நிறமிகளை இரு பிரிவாகப் பிரித்துள்ளனர். அவை ஒளித் தொகுப்பு I மற்றும் ஒளித்தொகுப்பு II என் பனவாகும். ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு பச்சைய மூலக்கூறும் வேறு பல துணை நிறமிகளுமுண்டு. பச்சைய மூலக்கூறு, ஒளிச்செயல் மையம் (photo rea- ction centre) எனப்படும். ஒளித் தொகுப்பு IIக்கு photo system I[) ஒளி மையம் நி 700 (நிறமி 700) ஆகும். அதாவது 700 நா.மீ. அலைவரிசை ஒளிக் கற்றையை ஈர்க்கவல்லவை. ஒளித் தொகுப்பு IIக்கு ஒளிமையம் நி 680 ஆகும். இதைப் பச்சையம் (chlorophyll) என்று கண்டறிந்துள்ளனர். . ஒவ்வோர் ஒளித் தொகுப்பிலும் காணப்படும் துணை நிறமிகள் அவற்றின் ஆற்றலுக்கு ஏற்ப ஒளிக் கற்றைகளை ஈர்த்து அந்த ஆற்றலை ஒளி மையத் திற்குக் கடத்தும். இதன் தூண்டுதலால் ஒளி மையத் திலிருந்து ஓர் எலெக்ட்ரான் வெளியேற்றப்படு கிறது. தாழ் நிலையிலுள்ள ஓர் எலெக்ட்ரானைத் தூண்டத் தேவையான ஆற்றல் ஒரு ஃபோட்டான் ஆகும். இதனால் எலெக்ட்ரான், ஆற்றல் வாய்ந்த மூன்றாம் நிலையை (triplet state) அடைகிறது. இந் நிலையில் பச்சைய மூலக்கூறு ஓர் எலெக்ட்ரானை இழப்பதால் அது ஆக்சிஜனேற்ற நிலையை அடை கிறது. அது மீண்டும் தாழ் நிலையை அடைய ஓர்