பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/780

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 ஒளி முனைவுத்‌ திருப்பளவிப்‌ பகுப்பு

756 ஒளி முனைவுத் திருப்பளவிப் பகுப்பு சோடியம் விளக்கு திருப்பான் HRM MY திருப்பளவிக் குழாய் பகுப்பான் தி 1 d 11 சுழற்சிக்கோணம் நீர்ம அமைப்பின் நீளம் கரைசலின் அடர்த்தி கரைசலானால், ஒளிசுழற்று பொருளின் செறிவைப் பயன்படுத்தலாம். அப்போது [a] =°( 1.C C என்பது 100 மி.வி. கரைசலில் அந்தப் பொருளின் கிராம் எண்ணிக்கையாகும். அலகு கோணத் திரிபு அப்பொருளின் மூலக்கூறு அலகு கோணத்திரிபு ஆகும். . உள்ளன. ஒளி முனைவுத் திருப்பு அளவியால் (polarimeter) சுழற்சிக் கோணத்தைக் கணக்கிடலாம். திருப்பு அளவியில் இரு நைக்கால் பட்டகங்கள் ஒன்று முனைவுத் திருப்பானாகவும், மற்றொன்று பகுப்பானாகவும் அமைகின்றன. திருப்பான் நிலை யாகவும், பகுப்பான் சுழன்று இயங்குவதாகவும் உள்ளன. திருப்பான் வழியாக ஒளி அலைகள் செலுத்தப்படுகின்றன. நிலையான அமைப்பில் உள்ள பட்டகம், ஒளி முனைவுத் திருப்பம் ஏற்படுத்துகிறது. பகுப்பான் பட்டகம் வழி அத்திருப்பமேற்பட்ட ஒளி செல்லும்போது, கட்புலன் பாதை இருட்டாகத் தெரிகிறது. இரு பட்டகங்களுக்கிடையில் ஒளி சுழற்றும் கரைசலை ஒரு குழாயில் வைத்து, முனைவு பெற்ற ஒளியின் சுழற்சியைக் காண வேண்டும். முன்போல் இருண்ட அமைப்பைப் பெறப் பகுப் பானைச் சுழற்றும்போது வரும் கோண அளவைக் கணக்கிட வேண்டும். இதுவே ஒளிச் சுழற்சிக் கோண மாகும். சர்க்கரைக் கரைசலின் அலகு கோணத்திரிபைக் கணக்கிடல். ஒரு முனைவுத் திருப்பு அளவிக் குழாயை நன்கு தூய்மை செய்து காய்ச்சி வடிக்கப்பட்ட நீரை அதில் நிரப்பி அந்தக் குழாயைத் திருப் பானுக்கும் பகுப்பானுக்குமிடையே வைக்க வேண்டும். பகுப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணைக் கருவியைத் திருப்பு அளவியில் மெல்லிய நிழற் பகுதி தெரியுமாறு சரிசெய்து கொள்ள வேண்டும். பிறகு இரு அரைப்பகுதிகளும் ஒரே அளவு இருட் டாகத் தெரியும் வரை பகுப்பானைச் சுழற்றி, அதன் காட்சிப் பகுதியை குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு குழாயில் உள்ள நீரை அகற்றிவிட்டு எந்தக் கரைசலின் திருப்பு எண்ணைக் கணக்கிட வேண் டுமோ அந்தக் கரைசலை நிரப்பி முன்போலக் கணக் கீடு செய்ய வேண்டும். கணக்கீட்டைத் தொடர்ந்து செய்து அதன் சராசரிச் சுழற்சியைப் பெறலாம். கரைசலின் செறிவு அறியப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ஒளிச் சுழற்சி காணக் கரைசலின் பல்வேறு செறிவுகளையும் பயன்படுத்தலாம். அமிலத்தினால் சர்க்கரைக் கரைசலில் ஏற்படும் இட வலமாற்றமறிதல். சர்க்கரைக் கரைசலின் டவல மாற்ற வினை ஒரு போலி ஒற்றை மூலக்கூறு வினை யாகும். இவ்வினையின் வேகம் சுரைசலின் செறிவி லிருந்து கணக்கிடப்படுகிறது. dx [சர்க்கரை] dt அல்லது dx = k (சர்க்கரை] at இதில் dx at என்பது வினைவேகத்தையும்,k k என்பது வினைவேக மாறிலியையும் குறிக்கும்.(சர்க் கரை] என்பது சர்க்கரைக் கரைசலின் செறிவு. ஒளிமுனைவுத் திருப்பு அளவியால் சர்க்கரைக் கரைசலின் ஒளிச்சுழற்சியைக் கணக்கிட்டு அதன் மூலம் இவ்வினை நிகழ்ச்சியை அறிய முடியும். சர்க் கரையும், குளுக்கோஸும் வலஞ் சுழியாகவும்