பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 ஒளியியல்‌ இழை

758 ஒளியியல் இழை ஞெகிழி இழை, அதைவிடக் குறைந்த விலகல் எண் கொண்ட பொருளாலான உறையால் சூழப்பட்டுள் ளதால் ஒளியிழப்புத் தவிர்க்கப்படுவதுடன். வளை தன்மை கொண்டதாகவும் உள்ளது. கண்ணாடி ஒளியியல் இழைகள் 10-150 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்டவை. ஞெகிழி இழைகள் சற்றுத் தடிமனானவையெனினும், வளைதன்மை மிக்கவை: இத்தகைய பலநூறு இழை முனைகள், அதே வரிசையில் ஒத்தமைவுடன் வெளிவருமாறோ மாறுபட்டு வெளிவருமாறோ கற்றையாக அமைக்கப் பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று ஒளி யியல் இழைமங்களில், சிறிய லேசர் கருவியால் ஊசிமுனையளவில் தோற்றுவிக்கப்படும் அகச்சிவப்புக் கதிர்கள் பயன்படுகின்றன. எண் ஒளியியல் இழைகளில் மூன்று வகைகள் உள்ளன. பன்மை வகையான (multimode), படி வடிவ ஒளி விலகல் எண் (stepped refractive index profile) கொண்ட இழையில் உள்ளகத்திலிருந்து வெளி யுறைக்குச் செல்லும்போது ஒளி விலகல் திடீரென மாறும். இவை வழக்கமான உருத்தோற்ற அனுப்பல்களுக்கும், குறுகிய தொலைவுச் செய்தித் தொடர்புக்கும் பயன்படுகின்றன. அவற்றின் உள்ள கத்தின் பரிமாணத்தையும், உள்ளகத்துக்கும் மேலு றைக்கும் இடையிலுள்ள ஒளி விலகல் எண் வேறு பாட்டையும் பொறுத்து அவற்றின் மூலம் அனுப்பக் கூடிய ஒளிக்கதிர்களின் எண்ணிக்கை அமைகிறது. இத்தகைய ஓர் இழையில் பல கதிர்கள் கதிர்கள் அடங்கிய ஒரு கூர்மையான துடிப்பை உட்புகுத்தினால், அத்துடிப்பு, இழையில் பயணம் செய்யச் செய்ய அகலமாகிவிடுகிறது. இழையின் அச்சுக்கு ணையாகச் செல்லும் கதிர்களும் அச்சுக்குச் சாய்வாகச் சென்று பன்முறை உள் எதிரொளிப்பு அடைந்தவாறு செல்லும் கதிர் களும் இழையில் வெவ்வேறு அளவுகளில் தொலைவு களைக் கடக்க வேண்டியிருப்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாகத் தகவல் கடத்தல் வீதமும் transmission rate), தொலைவும் குறைந்து விடு கின்றன. ஏனெனில் துடிப்பு அகலமாவதன் அடிப் படையிலேயே ஒளித்துடிப்புகளின் நீளத்தையும் அவற்றுக்கிடையிலான நேர இடைவெளியையும் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போது தான் வெளிவரு முனையில் வெளிப்படும் துடிப்புகள் ஒன்றன்மேல் ஒன்று படியாமல் தனித்தனியாக வரும். சரிந்த வடிவ ஒளிவிலகல் எண்ணுள்ள பன்மை இழை அமைப்பில் உள்ளகத்திற்கும் வெளியுறைக்கும் டையில் ஒளி விலகல் எண் வேறுபாடு சிறிது சிறிதாகக் குறைவதாயிருக்கும். இவற்றில் கதிர்கள் விரிவடைவதைக் குறைத்துத் துடிப்பு அகலமாவது குறைக்கப்படுகிறது. ஒளி கதிர்கள் உள்ளகத்தின் அச்சின் வழியாகச் சற்றுக் குறைவான வேகத்தில் பயணம் செய்கின்றன. விளிம்புப் பகுதியில் அவற்றின் வேகம் மிகுதியாயிருக்கும். எனவே அவை இழையின் வெளிவருமுனையில் ஏறக்குறைய ஒன்றாக வெளிப் படும். இவற்றை நடுத்தரத் தொலைவுகளுக்கு நடுத் தரமான தகவல் கடத்தும் வீதத்தில் செய்திகளை அனுப்பப் பயன்படுத்தலாம். ஒற்றைக் கதிர் இழையில் உள்ளகத்திற்கும் வெளியுறைக்கும் இடையிலுள்ள ஒளி விலகல் எண் வேறுபாடு மிகக் குறைவாக இருக்கும். உள்ளகத்தின் விட்டமும் குறைவாயிருக்கும். இதில் துடிப்பு மிகுவ தால் அகலமாவதில்லை. இவை பெரும் தொலைவு களுக்கு, உயர்ந்த தகவல் கடத்தல் வீதத்தில் செய்தி அனுப்ப ஏற்றவை. . தொலைவு எவ்வளவாக இருந்தாலும், இழை வழியாகச் செல்லும்போது ஒளிச்செறிவில் ஏற்படும் இழப்பு கவனத்துக்குரியதாகும். ஒளி உட்கவரப்படுவ தாலும் சிதறப்படுவதாலும் இது ஏற்படுகிறது. அனைத்துவகைப் பொருள்களும் அவற்றிலுள்ள ஆக்கக் கூறுகளின் காரணமாக ஒளியை ஓரளவாவது உட்கவரவே செய்கின்றன. அத்துடன் இழைகளில் உள்ள மாசுகள் காரணமாகக் குறிப்பிட்ட சில அலை நீள ஒளிக்கதிர்கள் உட்கவரப்பட்டு விடுகின்றன. ஒரு பொருளில் மூலக்கூறு மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக உள்ளார்ந்த ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. உள்ளகத்தின் விட்டத்தில் ஏற்படும் வேறுபாடுகள் அல்லது உள்ளகத்தில் குமிழிகள் போன்ற பிழைகள் இருப்பது காரணமாகவும் ஒளி சிதறப்பட்டு இழக்கப்படும். மிகுதியான சிலிகா கலந்த கண்ணாடிகள் மிகக் குறைவான உள்ளார்ந்த ஒளி உட்கவர் திறன் கொண்டவை. ஒளியியல் இழைக் கருவிகளில் ஒளி மூலமாகப் பயன்படுத்தப்படும் லேசர்கள் மற்றும் ஒளி உமிழ் டையோடுகள் போன்ற வற்றிலிருந்து வெளிப்படுகிற அண்மை அகச்சிவப்புக் கதிர்களை ஒளியியல் இழைகள் மிகக் குறைவான அளவிலேயே சிதறடிக்கின்றன. எனவே அத்தகைய கண்ணாடி இழைகள் ஒளி இழப்புச் சிறுமமாக இருக்க வேண்டிய தகவல் கடத்துங் கருவிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றவை. வளிமத்தால் நிரப்பப்பட்ட சிலிகா கண்ணாடிக் குழாய்கள் அனல் வளிமத்தாரை (jet) அடுப்புகளால் சூடேற்றப்படுகின்றன. இதனால் அவற்றின் உட்புறச் சுவர்களில் வளிமம் ஊடுருவி மெல்லிய கண்ணாடி அடுக்குகளைத் தோற்றுவிக்கின்றது. வெப்பநிலையை உயர்த்தி, அக்குழாய்களின் உள்ளிடம் போக்கப்பட்டு முன்னோடி வடிவத் திண்மக் கம்பிகளாக மாற்றப் படுகின்றன. பின்னர் இம்முன்னோடி வடிவங்கள் உலையில் உருக்கப்பட்டு, சிலிகா உறை கொண்ட ஒளிகடத்தும் மெல்லிய கம்பிகளாக வலிந்து இழுக்கப் படுகின்றன.