பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/783

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியியல்‌ உரு 759

ஞெகிழிகளில் உள்ளார்ந்த ஒளிச்செறிவு நலிவு மிகுந்திருப்பினும் பல உருத்தோற்றக் கடத்தல் செயல்முறைகளில் ஞெகிழி இழைகள் பயன்படுத்தப் படுகின்றன. இழைகளின் வலிமை, பரிமாணத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வசதி, வேதி நிலைத்தன்மை. நீண்ட வாழ்நாள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படக்கூடிய இழைகளின் தகுதியை அறுதியிடும் பண்புகளாகும். ஓர் இழைக் கட்டின் நோக்கத்தைப் பொறுத்து 5000 - 50000 வரையான இழைகள் இருக்கலாம். ஒவ்வோர் இழை யும் 10 25 மைக்ரோ மீட்டர் வரை விட்டமுள்ள தாயிருக்கும். மருத்துவத்தில் பயன்படும் குடல்காட்டி, ஈரல்காட்டி, நுரையீரல்காட்டி போன்ற கருவிகளில் இழைக்கட்டு 2 மீட்டர் வரை நீளமுள்ளதாகவும், தொழில் துறையில் பயன்படும் ஒளியியல் இழைக் கருவிகளில் 4.5 மீட்டர் வரை நீளமுள்ளதாகவும் இருக்கும். இழைக்கட்டின் ஒருமுனையில் ஒரு சிறிய பொரு ளருகு வில்லை, பொருளின் உருத்தோற்றத்தை ஒளி யியல் இழைக்குள் செலுத்துகிறது. இழை ஊடாகக் கடந்து வரும் உருத்தோற்றம் ஒரு கண்ணருகு கருவி யின் பார்க்கப்படுகிறது. மூலமாகப் தொலைவி லிருந்தவாறு பொருளருகு வில்லையைக் குவியப்படுத் தவும், அதை அங்குமிங்கும் நகர்த்தவும் வசதிகள் உள்ளன. இத்தகைய கருவிகளில் கூடுதலாக ஓர் இழைக்கட்டைச் சேர்த்து அதன் வழியாகப் பார்க்க வேண்டிய பொருளின் மேல் ஒளியைப் பாய்ச்சவும் வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளியை மட்டும் செலுத்தும் இழைக்கட்டு ஓரின இயல்பற்ற இழை களாலானதாக இருக்கும். தெளிவான, ஒருங்கிணைக் கப்பட்ட புரிந்து கொள்ளக்கூடிய உருத்தோற்றங் களை அவை உண்டாக்கா இத்தகைய இழைக் கட்டுகள் தொலைவிலிருந்து பொலிவூட்டவும் ஒளி உணர்வு காட்டிகளில் ஒளிவழி நடத்திகளாகவும் பயன்படுகின்றன. இவை 1-6 மி.மீ வரை விட்டமும் 0.5-2 மீ வரை நீளமும் கொண்ட கட்டுகளாக இருக்கும். அவற்றிலுள்ள இழைகள் கண்ணாடியா லானவையாக இருந்தால் 50-80 மைக்ரோமீட்டர் வரை விட்டமும் ஞெகிழியால் ஆனவையாயின் 250 மைக்ரோ மீட்டர் வரை விட்டமும் கொண்டிருக்கும். தகவல் தொடர்பில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவிக்கும் திறன்கொண்ட சுண்டுபிடிப்பாக ஒளி இயல் இழைமம் உருவாகி வருகிறது. தாமிரக் கம்பி யொன்றின் வழியே எடுத்துச் செல்லப்படுவதைப் போல். 10,000 மடங்கு உரையாடல்களை ஒளியியல் இழைமம் வழியே செலுத்தலாம். உலோகக் கம்பி யின் வழியே வரும் குறியீடுகள் செறிவு குறைந்து வெளிவருதலால் பெருக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இழைமம் வழியே செல்லும் ஒளிக்குறியீடு களின் செறிவு குறைவது இல்லை. மேலும் மின்னதிர்வு கள், காந்தப்புலமாற்றம், மின்னல் போன்ற குறுக் ஒளியியல் உரு 759 கீடுகளால் உலோகக்கம்பிகள் வழியே செல்லும் குறி யீடுகள் தாக்கப்படுவதுபோல் இழைமத்தில் ஒளிக் குறியீடுகள் தாக்கமுறுவதில்லை. உலோகக் கம்பிகள் நாளடைவில் உருக்குலைந்து விடுவதுபோல் இவ் விழைகள் கெட்டுவிடுவதில்லை. இன்று நல்லமுறையில் செயல்படும் தகவல் தொடர்புத் துணைக்கோள்களைப் புவிநிலைப்பட்ட சுற்றுப் பாதையில் வைத்திருக்க நாளடைவில் நெருக் கடி ஏற்படலாம். மேலும் இத்தகைய கோள்களைப் போர் காரணமாகச் செயலிழக்கச் செய்துவிட்டால், அவற்றின் வழியாகச் செயல்படும் கணிப்பொறி முத லிய அமைப்புகளும் செயலிழந்துவிடலாம். ஆனால் ஒளியியல் இழைமம் மூலம் நடைபெறும் தகவல் தொடர்புகளை அவ்வாறு எளிதில் துண்டித்துவிட வாய்ப்பில்லை. ஒளியியல் குறியீடுகளை ஓரிடத்திலிருந்து மற்றோ ரிடத்துக்கு இழைமங்கள் மூலம் கொண்டு சென்று, சாலைப்புறக்குறியீடுகள், ஊர்திகளில் உள்ள விளக்கு கள் ஆகியவற்றை இயக்கலாம். மேலும் தொலை பேசி, கணிப்பொறி இணைப்புகள், குழல்வழித் அச்சிட்டவற்றை உள்ளவாறே தொலைக்காட்சி, படியெடுத்தல், தாங்கிச் சென்று வேறிடத்தில் கப்பல்களுக்கிடையேயும் விமானங்களுக்கிடையேயும் தொடர்புகளைத் தோற்றுவித்தல் போன்ற துறை களிலும் ஒளியியல் இழைமங்கள் விரைவில் பெரும் பங்கு பெறும். ஒளியியல் உரு - க தங்கராசு கே.என். ராமச்சந்திரன் . ஒரு பொருளின் ஒளியியல் உருவைத் (optical image) தெளிவாகவும் பிறழ்ச்சி இல்லாமலும் உருவாக்குவதற் கேற்ற வகையில் ஒளியியல் கருவிகள் அமைக்கப்பட வேண்டும். எ.கா. நுண்ணோக்கி, தொலை நோக்கி. ஒரு பொருளின் தோற்ற அளவு அது கண்ணில் அமைக்கும் பார்வைக் கோணத்தைப் (visual angle) பொறுத்து அமையும். இரு வேறு பொருள்கள் அமைக்கும் பார்வைக் கோணங்களின் வேறுபாடு ஒரு நிமிடத்திற்குக் குறைவாக இருந்தால் அவ்விரு பொருள்களையும் கண்களால் தனித்துக் காண யலாது. இது கண்ணின் ப பகுதிறன் என ப்படுகிறது. பார்வைக் கருவியால் உருவாக்கப்படும் உருவின் பார்வைக் கோணத்திற்கும் அதே தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளின் பார்வைக் கோணத்திற்கும் உள்ள தகவு பார்வைக் கருவியின் உருப்பெருக்குந்திறன் எனப்படும். பார்வைக் கருவியில்