ஒளியியல் உரு 761
ஒளிவிலகு பரப்புகளுக்குச் சம அளவில் சாய்ந்திருந் தால் திசைமாற்றம் சிறுமமாக இருக்கும். வில்லை யும் பல சிறு முப்பட்டகங்களின் தொகுப்பானதால், ஓரக் கதிர்கள் வில்லையில் விழுந்து வெளியேறும் போது படுகதிரும் விடுகதிரும் வில்லையின் இரு பரப்புக்களுக்கும் சம அளவில் சாய்ந்திருக்குமாறு வில்லையை அமைத்தால் ஓரக்கதிர்களின் திசை மாற்றமும் சிறுமமாக இருக்கும். எனவே கோளப் பிறழ்ச்சியும் சிறுமமாக இருக்க ஒரு சமதளக் குவி வில்லையைப் பயன்படுத்தலாம். வில்லையின் மிகுந்த வளைபரப்புப் பகுதி முதன்மை அச்சுக்கு இணையாக உள்ள படுகதிரையோ விடுகதிரையோ நோக்கி இருக்கவேண்டும். கோளப் பிறழ்ச்சி சிறுமமாக இருக்க வில்லையின் வளைவு ஆரங்களுக்குள்ள தகவு Ra R1 A (24 +1) என்று இருக்கவேண்டும் (29-1-4) எனக் கணித வாயிலாக நிறுவப்பட்டுள்ளது. " என்பது வில்லையின் ஒளிவிலகல் எண் ஆகும். இடை வெளியிட்டு அமைந்த இரண்டு வில்லைகளின் தொகுப்பில் கோளப் பிறழ்ச்சி சிறுமமாக இருக்க இடைவெளித் தொலைவு அவற்றின் குவியத் தொலைவுகளின் வேறுபாட்டிற்குச் சமமாக இருக்க வேண்டும். ஒரு வில்லையில் கோளப் பிறழ்ச்சி நீக்கப்பட்ட பின்பும் முதன்மை அச்சின்மேல் இல்லாமல் அத் னின்று சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் பொருளின் உரு புள்ளியாக இருக்காது. அது படிப்படியாக மிகும் கொண்டதாகவும், பொது மையம் ஆரத்தைக் அற்றதாகவும் தொடர்ச்சியான வட்டங் இருக்கும். ஒரு வால்விண்மீன்போல் வால்விண்மீன் பிறழ்ச்சியாகும். களாக உள்ள இக்குறைபாடு Fry Sin 8, F, y, Sin Ca என்னும் அப்பே சைன் வரையறை (Abbe sin condition) நிறைவேற்றப் I ஒளியியல் உரு 761 பட்டால் இக்குறைபாடு தவிர்க்கப்படும். . M1, M, முறையே படுகதிர், விடுகதிர் அமைந்த ஊடகங்களின் ஒளி விலகல் எண்கள் ஆகும். yt, y, முறையே பொருள், அவற்றின் உரு ஆகியவற்றின் உயரங்கள் ஆகும்.01,0, ஏற்படுத்தும் கோணங்கள் ஆகும். முதன்மை அச்சிலிருந்து விலகியிருக்கும் புள்ளிப் பொருளிலிருந்து புறப்படும் கதிர்கள் வில்லையில் ஒளிவிலகல் நிகழ்ந்தபிறகு புள்ளியில் சந்திப்பதில்லை. படம் 3. தோற்று BMN என்னும் நேர்குத்துத் தளத்திலுள்ள கதிர்கள் கிடைமட்டக் கோடாக (P) உருவைத் விக்கின்றன, BRS என்னும் கிடைமட்டத் தளத்தில் உள்ள கதிர்கள் நேர்குத்துக் கோடாக (S) உருவைத் தோற்றுவிக்கின்றன. பிற படுகதிர்கள் P. S இவற்றிற் கிடையே நீள்வட்டங்களாக உருவைத் தோற்றுவிக் கின்றன. இக்குறைபாடு உருட்சிக் குறைபாடு எனப் படும். தகுந்த குவியத் தொலைவுகளுள்ள குவி வில்லை. குழிவில்லை ஆகியவற்றைப் போதிய இடை வெளிவிட்டு அமைத்து இக்குறைபாட்டைத் தவிர்க்க லாம். PP, என்னும் நீண்ட பொருளின் உரு நேராக இல்லாமல் Q, Q, ஆக வளைந்து உள்ளது. இது வளைவுக் குறைபாடு எனப்படும். அச்சை விட்டு விலகி A படம் 4. P