762 ஒளியியல் சுழல் வினை
762 ஒளியியல் சுழல் வினை . M. படம் 5 யிருக்கும் P, என்னும் புள்ளி வில்லையின் மையம் C இலிருந்து உள்ள தொலைவு CP, CP ஐயை விட மிகுதியாக உள்ளதால் P, இன் உருQ ஐ விடக் குறைந்த தொலைவிலுள்ள Q, புள்ளியில் உருவாகி யுள்ளது..f+p,f,=0 யுள்ளது. Pf, + p,f, = 0 என்னும் சமன்பாட்டிற் கேற்ற வகையில் இரண்டு வில்லைகளைப் படுத்தி இக்குறைபாட்டைக் குறைக்கலாம். பயன் ரு நீண்ட பொருளின் பல்வேறு பகுதிகளின் உருப்பெருக்கம் வெவ்வேறாக அமைந்தால் உருக் குலைவு என்னும் குறைபாடு ஏற்படுகிறது. இரண்டு வில்லைகளுக்கிடை டயே சமச்சீர் தொலைவில் தடையை நிறுத்தி இக்குறைபாட்டைத் தவிர்க் கலாம். பிரிதிறன். அருகருகிலுள்ள இரு புள்ளிப் பொருள்களின் உருக்களைத் தனித்தனியாகப் பிரித்துக் காட்டும் திறன் ஓர் ஒளியியல் கருவியின் பிரிதிறன் (resolving power) எனப்படும். அருகருகி லுள்ள இரு உருக்கள் தனித்தனியாகப் பிரிக்கப் பட்டிருக்க வேண்டுமானால் ஓர் உருவின் விளிம்பு விளைவுப் பாங்கத்தின் (diffraction pattern) மையப் பெருமம், மற்றோர் உருவின் விளிம்பு விளைவுப் பாங்கத்தின் முதல் நிலைச் சிறுமத்துடன் பொருந்த வேண்டும். ஒளியியல் கருவிகளின் பிரிதிறனுக்கான இந்நிபந்தனை ராலே வரையறை எனப்படும். இவ்வரையறையைப் பயன்படுத்தித் தொலைநோக்கி, நுண்ணோக்கி, முப்பட்டகம், கீற்றணி போன்ற ஒளியியல் கருவிகளின் பிரிதிறன்களைக் காண முடியும். ஒற்றை நிறப்பிறழ்ச்சி. நிறப்பிறழ்ச்சி போன்ற படம் 6 உருக்குறைபாடுகளைத் தவிர்க்கும் வகையில் வில்லை களின் தொகுப்பை ஒளியியல் கருவிகளில் பயன் படுத்திப் பொருள்களின் தெளிவான, குறைபாடற்ற உருக்களைக் காணலாம். தேவ. ஜெயராமன் நூலோதி. Francis A. Jenkins and Harvey E. White, Fundamentals of Optics, Fourth Edition, McGraw-Hill Kogakusha Ltd., Tokyo; Khanna and Gulati, Fundamentals of Optics, Eleventh Edition, R. Chand & Co., New Delhi, 1984. ஒளியியல் சுழல் வினை ஒளிக்கற்றை மின் சில சேர்மங்கள் ஒளியின் போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டுள்ளன. அவற்றின் மூலக்கூறுகளில் அணுக் கள் அல்லது அணுத் தொகுதிகளின் அமைப்பு முறை யால் தனி வகை ஒளியியல் சுழல் வினை (optical rotation) நிகழ்கிறது. பொதுவாக பரவிச் செல்லும்போது ஒளியின் கூறுகளான காந்த அலைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அனைத்துத் திசைகளிலும் அதிர்கின்றன.ஆனால் இதே ஒளிக்கற்றையைக் கால்சியம் கார்பனேட் மூலக் கூறுகள் அடங்கிய படிகக் கல்லான குவார்ட்ஸ் வழியே செலுத்தினால் ஒரே தளத்தில் ஒருமுகப் படுத்தப்பட்டு அலைகள் பரவும். இதைத் திசைமுக ஒளி (plane polarised light) எனலாம். ல் வில்லியம் நைக்கால் என்பவர் 1928 குவார்ஸ் படிகக் கல்லைக் கொண்டு முப்பட்டையைச் செய்தார். இத்தகைய இரு முப்பட்டைகளை ஒளி