ஒளியியல் சுழல் வினை 763
முனைவுத் திருப்பு.அளவி (polarimeter) என்னும் கருவி யில் பயன்படுத்திச் சேர்மங்களின் ஒளிசார்ந்த இயல்பு களைக் கண்டறிய முடியும். முதல் முப்பட்டை வழி யாக ஒளிக்கதிர் நுழைந்து மற்றொன்றின் வழியாக வெளியேறுகிறது. முதல் முப்பட்டையைத் திசைமுகி (polariser) என்றும், இரண்டாவதை ஆய்வி (analyser) என்றும் குறிப்பிடலாம். திசைமுகியும் ஆய்வியும் கருவியமைப்பில் இருந்தால்தான் ஒளிக்கற்றையைப் பார்க்க முடியும். ஆய்வி செங்குத்தாகத் திருப்பப் படுமானால் ஒளியின் பாதை தடைப்பட்டு ஒளியைக் காண முடியாது. இரு முப்பட்டைகளுக்கிடையே ஒரு கண்ணாடிக் கலனில் குறிப்பிட்ட சேர்மக் கரைசல் ஒன்றை நிரப்பி ஆய்வியைத் தக்க கோணத்தில் திருப்பினால், புலனாகாமல் தடைப்பட்டிருந்த ஒளி ஆய்வியின் வழியே தென்படும். இவை ஒளிச்சுழற்சிச் சேர்மங்கள் எனப்படும். ஒளி புலனாவதற்குத் தக்க ஆய்வி திருப்பப்படும் கோணம், ஒளிச்சுழற்சிக் கோணம் எனப்படும். திராட்சையின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட டார்ட்டாரிக் அமிலத்தை ஒளிமுனைவுத் திருப்பு அள விக்குழாயிலிட்டு நோக்கியபோது ஆய்வி வலக்கைப் புறமாகத் திரும்பியது. வேறொருவகைத் திராட்சைச் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட அமிலத்தை ஆய்வுக் குட்படுத்தியபோது அது ஒளிச்சுழற்சித் தன்மையின்றி இருந்தது. அதற்கு இடவலம்புரி அமிலம் (nacemic acid) என்று பெயர். திராட்சைக் கொத்து என்று பொருள்படுவதான ரசமஸ் என்ற இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு இச்சொல்லாக்கம் அமைந்தது. டார்ட்டாரிக் அமிலமும் இட வலம்புரி அமிலமும் ஒளிச்சுழற்சித் தன்மையில் மாறுபட்டனவே தவிரப் பிற பண்புகளில் அவை வேறுபட்டிருக்க வில்லை. இரண்டும் (C,H,Oc) என்னும் மூலக்கூறு வாய்பாட்டையே பெற்றுள்ளன. எனவே இவை இரண்டும் மாற்றியங்களாகத்தான் (isomers) இருக்க வேண்டும் எனலாம். 1848 இல் லூயி பாஸ்ச்சர் இவற்றிடையே உள்ள வேறுபாடுகளை ஆரய்ந்தார். இட வலம்புரி அமிலத்தை ஒரு காரச் சேர்மத்துடன் வினைப்படுத்தி மாற்றினார். படிகங்களைக் உப்புப் படிகங்களாக கூர்ந்து கவனித்ததில் அவை தோற்றத்தில் ஒன்றுக் கொன்று மாறுபட்டுள்ளமையைக் கண்டார். வெவ் வேறு தோற்றம் கொண்டவற்றை வகைப் பிரித்ததில் இரு கூறுகள் கிடைத்தன. ஒரு கூறு படிகங்களை நீரில் கரைத்து ஒளிமுனைவுத் திருப்பு அளவியில் ஆராய்ந்த தில் அவை ஆய்வியை வலக்கைப்புறமாகத் திருப்பும் வலஞ்சுழித் திறனைக் கொண்டிருந்தன. பிறிதொரு கூறைச் சேர்ந்தவை இடஞ்சுழித் திறன் கொண்டிருந் தன. இருவகைக் கூறுகளின் ஒளிச்சுழற்சிக் கோணங் களும் சமமாக இருந்தன. பிற இயற்பியல், வேதிப் பண்புகள் அனைத்திலும் அவை ஒத்திருந்தன. ஒளிச்சுழற்சிப் பண்பில் வேறுபட்டிருந்து, சுழற்சிக் ஒளியியல் சுழல் வினை 763 கோணங்கள் சமமாக இருந்தால் அல்லது இரு வகைச் சேர்மங்களையும் சம அளவுகளில் கலந்தால் கிடைக் கும் கலவை ஒளிச்சுழற்சித் தன்மையின்றி இருக்கும் என்று அவர் கண்டறிந்தார். பிற அனைத்துப் பண்பு களிலும் ஒத்திருந்தாலும், மூலக்கூறு வாய்பாடு ஒன்றே யான இவ்வகை மாற்றியங்கள் தங்கள் மூலக்கூறு களின் மாறுபாடான அணு -அமைப்பு முறையைக் கொண்டுள்ளன என்பதை அவர் கண்டறிந்தாலும். அவ்வாறான அமைப்பு வேறுபாடுகளை அவருக்குப் பின்னர் வந்த அறிவியலாரே தெளிவுபடுத்தினர். திசைமுகப்படுத்தப்பட்ட ஒளியை வலக்கைப்புறமாகத் திருப்பும் தன்மை கொண்டவை வலஞ்சுழிச் சேர்மங் கள் எனவும், இடக்கைப்புறமாகத் திருப்புபவை இடஞ்சுழிச் சேர்மங்கள் எனவும் குறிக்கப்படுகின்றன. காட்டாக குளுகோஸ் வலஞ்சுழிச் சேர்மம்; காய்னா இடஞ்சுழிச் சேர்மம்; இரண்டுக்கும் வெவ் வேறு ஒளிச்சுழற்சிக் கோணங்கள் உள்ளன. ஒவ் வொரு சேர்மமும் மூலக்கூறுகளின் அமைப்புக்கு ஏற்ப வெவ்வேறான ஒளிச்சுழற்சிக் கோணம் கொண்டி ருக்கும். சேர்மத்தின் இயல்பு, திசைமுக ஒளி செல் லும் கரைசல் படலத்தின் நீளம், ஒளிக்கதிரின் அலை நீளம், கரைசலின் அடர்த்தி கரைசலின் வெப்ப நிலை ஆகிய காரணக் கூறுகளைச் சார்ந்து சுழற்சிக் கோணம் அமையும். மூலக்கூறுகளில் அணுக்கள் அல்லது அணுத் தொகுதிகள் பிணைக்கப்பட்டிருக்கும் முறையைச் சார்ந்து சேர்மத்தின் ஒளிச்சுழற்சித் திறன் அமை கிறது. மூலக்கூறுகளைச் சமச்சீரானவை, சமச்சீரற் றவை எனப் பகுக்கலாம். மூலக்கூறுகளில் இத் தன்மையை உருவாக்கும் காரணிகள் சமச்சீர்மைத் தளம் (plane of symmetry), சமச்சீர்மை மையம் (centre of symmetry) என்பனவாகும். ஒரு மூலக்கூறை இரு சம பகுதிகளாகப் பிரிக்க முடிந்து. அப்பகுதிகள் ஒன்றுக்கொன்று ஆடிப் பிம்பங்களாகப் பிரிக்க முடிந்து, அப்பகுதிகள் ஒன்றுக் கொன்று ஆடிப் பிம்பங்களாக அமையுமானால் COOH COOH H - C -OH HO- C H H C -OH H-C-OH COOH COOH சமச்சீர் மூலக்கூறு சமச்சீரிலா மூலக்கூறு