ஒளியியல் சுழல் வினை 765
அமிலமும் 1 - லாக்டிக் அமிலமும் சம பங்குகளில் கலந்த தனிக் கலவையாகும். ஒவ்வொரு வடிவமைப்பிலும் சமபங்கு கலந்திருப்பதால் வலஞ்சுழிச் சேர்மத்தின் ஒளிசார் இயல்பும் இடஞ்சுழிச் சேர்மத்தின் ஒளிசார் இயல்பும் சமமாகி ஒளிச்சுழற்சியற்ற கலவை கிடைக் கிறது. இந்த இட வலம்புரி நடுநிலைக் கலவை அதன் ஒளிசார் தன்மை சார்ந்து dl - லாக்ட்டிக் அமிலம் அல்லது சுழிமாய் லாக்ட்டிக் அமிலம் எனப்படுகிறது. d-லாக்ட்டிக் அமிலமும் 1-லாக்ட்டிக் அமிலமும் திசைமுக ஒளியை வழித் திருப்புவதில் எதிரெதிர்த்திசை கொள்கின்றன என்றாலும் அவ் வாறான ஒளிச்சுழற்சிக் கோணங்கள் இரண்டும் சமமே. அவை அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக் கின்றன. உருகுநிலை, கரைதிறன், இருமுனைத் திருப்புத்திறன் (dipolemoment) ஆகியவற்றில் இரண்டுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இட வலம்புரி நடுநிலை அமிலத்தின் பண்புகளும் அவற் றுடன் ஒத்துள்ளன. வினைவேக அளவுகளிலும் இவற்றிடையே எவ்வேறுபாடும் இல்லை. I - லாக்ட்டிக் அமிலம் புளித்த நிலையிலான பாலில் உள்ளது. d-லாக்ட்டிக் அமிலம் விலங்கின உடலில் தசைகள் இயங்கும்போது சுரக்கிறது, ஆய்வுக்கூடத்தில் செயற்கைத் தொகுப்புமுறையில் தயாரித்தால் கிடைப்பது இடவலம்புரி நடுநிலைக் கலவையான (nacemic mixture) di - லாக்ட்டிக் அமிலமேயாகும். இடவலம்புரி நடுநிலைக் கலவையி லிருந்து d - அமிலத்தையும் I - அமிலத்தையும் பிரித் தெடுக்க வெவ்வேறு வழிமுறைகள் கையாளப்படு கின்றன. சமச்சீரிலா இரு கார்பன் அணுக்கள் அமைந்த மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டாக டார்ட்டாரிக் அமிலத்தைக் கூறலாம். அந்தக் கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் COOH, H, OH, CHOH ஆகிய வற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. டார்ட்டாரிக் அமிலம் நான்கு வெவ்வேறான மாற்றியங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு, ஒளிச்சுழற்சித் ஒளியியல் சுழல் வினை 765 தன்மையுடனும், ஏனையவை ஒளிச்சுழற்சித் தன்மை யற்றும் உள்ளன. d-டார்ட்டாரிக் அமிலமும் - டார்ட்டாரிக் அமிலமும் ஒளிச்சுழற்சித் தன்மையுடைய யவை. ஒளிச்சுழற்சியற்ற மூன்றாம் மாற்றியம் di- டார்ட்டாரிக் அமிலமாகும். நான்காம் மாற்றியமான மீசோ-டார்ட்டாரிக் அமிலம் என்பதும் ஒளிச்சுழற்சி அற்றதாகும். இந்நான்கு மாற்றியங்களும் பின்வரு மாறு குறிக்கப்படுகின்றன. d-டார்ட்டாரிக் அமிலம் இரண்டு வலஞ்சுழிக் கார்பன் அணுக்களையும், 1-டார்ட்டாரிக் அமிலம் இரண்டு இடஞ்சுழிக் கார்பன் அணுக்களையும், கொண்டுள்ளன. இடவலம்புரி நடுநிலைக் கலவை யான பி-டார்ட்டாரிக் அமிலத்தில் d - அமிலமும் 1- அமிலமும் சமபங்கு கலந்து, எதிரெதிர்த் தன்மை யால் சமனமாகி ஒளிச்சுழற்சித் தன்மையை இழக் கின்றன. இதைப் புறச் சமம் (external compensation) என்பர். புறச் சம அமைப்பினாலான இடவலம்புரி நடுநிலை டார்ட்டாரிக் அமிலத்தை d-அமிலம் என் றும் 1 - அமிலம் என்றும் உரிய வழி முறைகளைக் கையாண்டு தனித்தனியாகப் பிரித்துவிடலாம். நான்காம் மாற்றியமான மீசோ-டார்ட்டாரிக் அமிலத்தின் வடிவமைப்பில் ஒரு கார்பன் அணு வலஞ் சுழி அமைப்புடனும், மற்றொன்று இடஞ்சுழி அமைப்புடனும் உள்ளன. மூலக்கூறுக்குள்ளேயே வலஞ்சுழியும் இடஞ்சுழியும் அமைந்து ஒளிச்சுழற்சித் தன்மைகளும் அளவுகளும் சமமாகிவிடுகின்றன. இதனால் மூலக்கூறு ஒளிச்சுழற்சித் தன்மையற்ற தாகிவிடுகிறது. இவ்வாறு மூலக்கூறுக்குள்ளேயே சமமாகும் நிலையை அகச் சமம் (internal compen- sation) என்பர். ஒளிச்சுழற்சித் தன்மைகொண்ட ஒரு சேர்மத் தைச் சூடாக்கினாலோ, ஆற்றல் வாய்ந்த ஒளிக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தினாலோ அந்த இயல்பு மறை கிறது. சேர்மம் இடவலம்புரி நடுநிலைக் கலவையாக மாற்றப்படுவதே அதற்குக் காரணம். ஒளிச்சுழற்சிச் சேர்மம் இவ்வாறு இடவலம்புரி நடுநிலைக்கலவையாக COOH (-OH H-C-OH HO-C-H COOH COOH COOH COOH HO-C- H H-C-OH HO-C-H COOH H-C-OH H-C-OH COOH HO-C-H H-C-OH H-C-OH COOH COOH COOH d- அமிலம் 1. அமிலம் di- அமிலம் மீசோ அமிலம்