பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌ 55

எக்ஸ் கதிர் ஒளியியல் 55 திற்கும் அணு எண்ணுக்குமான வரைபடம் ஒன்றும் (i) பின்னர் அதிர்வு எண் இருமடி மூலத்திற்கும் அணு எடைக்குமான மற்றொரு படம் ஒன்றும் (II) வரைந்தார். படம் I இல் புள்ளிகள் எல்லாம் நேர் கோட்டில் நன்றாக அமைந்து, முற்றிலும் நேர் விகிதத் தன்மையைக் காட்டின. ஆனால் படம்[I இன் புள்ளிகள் ஓரளவே நேர் கோட்டிலமைந்துள்ளன. இதிலிருந்து ஒரு தனிமத்தின் வேதி, இயற்பியல் பண்புகளைத் தீர்மானிப்பதில் அணு எடையைவிட அணு எண்தான் சிறப்பான இடம் பெறுகிறது என்றறியப்படுகிறது. இவ்வாய்வுகளின் பயனாகத் தனிம அட்டவணை யில் இதுவரை காணப்பட்ட சில குழப்பங்கள் நீக்கப் பட்டன. அணு எடையின் அடிப்படையில் அமைக் சுப்பட்ட அந்த அட்டவணையில் Ni (58.71), Co (58.94) நிக்கல் கோபால்ட் என்ற வரிசையில் அமைந்திருந்தன. ஆனால் அவற்றின் வேதிப் பண்பு களின்படி கோபால்ட் நிக்கல் என்ற முறையிலமைந் திருக்க வேண்டும். அணு எண் அடிப்படையில் அமைந்த அட்டவணை முறையான Co. Ni வரிசை தான் சரியானது. மேலும் தனிமங்களின் பண்புகள் அணு எண் அடிப்படையில் முற்றிலும் அலைவுச் சார்பு கொண்டிருப்பதையும் அணு எடை அடிப் படையில் அலைவுச் சார்பு ஒத்து வராத தன்மையை யும் எடுத்துக் காட்டின. மோஸ்லி படங்களால் மற்றொரு பயனும் ஏற் பட்டது. அப்படத்தில் காணப்பட்ட சில வெற்றி டங்கள் அவ்விடங்களுக்கு உரிய சில தனிமங்கள் இருக்க வேண்டும் என உணர்த்தின. இதன் அடிப் படையில் செய்யப்பட்ட ஆய்வுகள் ஹாஃபினியம். இலீனியம் (Pm) ரீனியம் (Re) போன்ற சில புதிய தனிமங்களைக் கண்டுபிடிக்கவும். புவி அரிய தனிமங்கள் என்பனவற்றின் அணு எண்களைக் காணவும் உதவின. காம்ப்டன் வினைவு. மாலிப்டினம் இலக்கிலிருந்து பெற்ற ஒற்றை நிற எக்ஸ்கதிர் (K& வரி) ஒன்றைக் கிராஃபைட் கட்டி ஒன்றால் சிதறச் செய்யும்போது, குறிப்பிட்ட என்னும் கோணத்தில் சிதறிய கதிர் களில் Ka கதிருடன் சிறிது அதிக அலை நீளமுள்ள புதிய கதிரும் இருப்பதைக் காம்டன் என்ற அமெரிக்க இயற்பியலார் கண்டார். இந் படுகற்றையின் அலைநீளத்தைக் கொண்ட பகுதி மாற்றப்படாத சிதறல் கதிர்கள் என்றும், சிறிது அதிக அலை நீளமுள்ள பகுதி மாற்றப்பட்ட சிதறல் கதிர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. நிகழ்ச்சியினை அலைக்கொள்கையின் அடிப்படையில் விளக்க இயலாது. சிதறல் உண்டாக்கும் பொருளின் கட்டற்ற எலெக்ட்ரான் ஒன்று அசையா நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம். அதன் மீது ஓர் எக்ஸ் วง h படம் 10. கதிர் ஃபோட்டான் மோதுகிறது. இந்த மோதல் ஒரு மீட்சி வகை மோதல் எனக் கொள்ளலாம். ஆற்றல் அழிவின்மை விதி, உந்தம் மாறாக் கோட்பாடு ஆகியவற்றோடு ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு களையும் பயன்படுத்திப் புதிய அலை நீளத்திற்கான சமன்பாட்டைக் காம்ப்டன் நிறுவினார். அதன்படி, n = 1 + 2h mc Sin' 옥 -= 2h m.C Sin³ 2 dλ = 2h moC Sin' என்பது புதிய அலை நீளம்; A என்பது படுகற்றையின் அலை நீளம்; h என்பது பிளாங்க் மாறிலி; III. என்பது எலெக்ட்ரானின் அசையாநிலை நிறை C என்பது ஒளியின் திசைவேகம்; p என்பது சிதறல் கோணம். இங்கு ஏற்படும் அலை நீளமாற்றம் படுகதிரையோ, சிதறச் செய்யும் பொருளையோ பொறுத்தது அன்று என்பதையும், அதன் மதிப்பு முற்றிலும் சிதறல் கோணமாகிய உ யை மட்டுமே பொறுத்திருக்கிறது என்பதையும் காணலாம். 1) = 0 என்றால் da 0 ஆகும். அதாவது 1 = a ஆகும். எனவே ஓரினச் சிதறல் ஏற்படும். 90 2 2) = 90° என்றால் Sin' sin*45 ஆகும்.