பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 ஒளியியல்‌ சுழல்‌ வினை

766 ஒளியியல் சுழல் வினை மாற்றப்படுவதற்கு இடவலம்புரி நடுநிலையாக் கல் (racemisation) என்று பெயர். ஒளிச் சுழற்சிச் சேர்மத்தின் சரிபாதி அளவை எதிர்வடிவமைப்புக்கு உள்ளாக்கினால் இடவலம்புரி நடுநிலைக் கலவை கிடைக்கும். சேர்மத்தைச் சூடாக்கி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். சில சேர்மங்கள் சோடியம் ஹைட் ராக்சைடு போன்ற காரங்களுடன் சேர்த்துச் சூடாக் கப்பட்டால் இடவலம்புரி நடுநிலைக் கலவைகளைத் தருகின்றன. வேறு சில சேர்மங்கள் காலப்போக்கில் தாமாகவே மாற்றமடைந்து இடவலம்புரி நடுநிலைக் கலவையாகி விடுகின்றன. d -டார்ட்டாரிக் அமிலத் தைக் காற்றுப் புகாதபடி நன்கு மூடப்பட்ட கலனில் அடைத்துச் சூடாக்கினால் dl-கலவை கிடைக்கிறது. d - ஃபினைல் புரோமோ அசெட்டிக் அமிலம் என்னும் ஒளிச்சுழற்சிச் சேர்மத்தைப் பென்சீனில் கரைத்துச் சாதாரண வெப்பநிலையிலேயே மூன்று ஆண்டுகள் வைத்திருந்தால் தன் போக்கிலேயே மாற்றம் நிகழ்ந்து ட வலம்புரி நடுநிலைக் கலவை கிடைக்கிறது. கல இதற்கு மாறாக, இடவலம்புரி நடுநிலைக் வையிலிருந்து ஒளிச்சுழற்சித் தன்மையான எதிரெதிர் அமைப்புகளைத் தனித்தனியே பிரித்தெடுப்பதற்கு இடவலம்புரி நடுநிலைக்கலவைப் பிரிப்பு என்று பெயர். இதற்குப் பல உத்திகள் உள்ளன. லூயி பாஸ்ச்சர் 1848 இல் நேரடிப் பிரிப்பு முறையைக் கையாண்டார். இடவலம்புரி நடுநிலைக் கலவையை ஒரு காரச் சேர்மத்துடன் வினைப்படுத்தி உப்புப் படிகங்களைப் பெற வேண்டும். படிகங்களின் தோற்ற வேறுபாடு கண்டு, அவற்றைப் பிரித்த முறையே அவர் கையாண்டதாகும். இடவலம்புரி நடு நிலைக் கலவையை ஒரு கரைப்பானில் கரைத்துப் பின்னர் கரைப்பானை ஆவியாக்கிக் கரைசலைச் செறிவுபடுத்தினால் சேர்மத்தின் படிகங்கள் கிடைக்கும். இப்படிகங்கள் இருவகைத் தோற்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உருப்பெருக்கியின் உதவியால் சிறிய இடுக்கி ஒன்றைப் பயன்படுத்தி, தோற்ற அமைப்பு வேறுபாடுகளின் அடிப்படையில் இரு வகைப் படிகங்களையும் பிரித்துவிடலாம். ஒவ்வொரு படிகமாக நுணுகிக் கண்டு பிரிக்க வேண்டியிருப்பதால் அயர்வு தரும் இம் முறை இப்போது கையாளப்படுவதில்லை. இடவலம்புரி நடுநிலைப் பிரிப்புக்கு வேதிமுறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறைப்படி கலவையை மற்றோர் ஒளிச்சுழற்சிச் சேர்மத்துடன் வினைப்படுத்தினால் வெவ்வேறு தன்மையுள்ள இரு விளைபொருள்கள் கிடைக்கின்றன. அவற்றை இயற் பியல் முறையில் பிரித்து, அவற்றிலிருந்து எதிரெதிர் வடிவமைப்புள்ள மாற்றியங்களைப் பிரித்துக் கொள்ள முடியும். திராட்சைச் சாற்றிலிருந்து கிடைக்கும் இடவலம்புரி டார்ட்டாரிக் அமிலத்திலிருந்து இரு கூறுகளைப் பெறுவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.d - புரூசின் என்ற சேர்மம் இதற்குச் சான் றாகும். இச்சேர்மத்தை இடவலம்புரி டார்ட்டாரிக் அமிலத்துடன் வினைப்படுத்தினால் இரு வகை உப்புகள் விளைபொருள்களாகக் கிடை க்கின் றன. இந்த இருவகை உப்புகளும் வெவ்வேறு செறிவுகளில் படிகங்களாக வீழ்படியும். பகுதிப் படிகமாக்கல் என்னும் இயற்பியல் முறையைக் கையாண்டு இரு உப்புகளும் பிரிக்கப்படுகின்றன. பிரிக்கப்பட்ட படிகக் கூறுகளைத் தனித்தனியே ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்தினால் நீராற்பகுப்பு நிகழ்ந்து d-டார்ட்டிரிக் அமிலமும் I-டார்ட்டிரிக் அமிலமும் தனித்தனியே கிடைக்கும். மற்றொரு பிரிப்புமுறையில் நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாக்ட்டீரியா, ஈஸ்ட் முதலிய நுண்ணுயிரிகளில் ஏதேனும் ஒன்றை இட வலம்புரி நடுநிலைக் கலவையினுள் இட்டால் அது குறிப்பாக ஒரு மாற்றியத்தை மட்டும் உண்டு வளர் கிறது. எஞ்சியிருப்பது நுண்ணுயிரியால் உண்ணப் படாத மாற்றியம் என்பதால் அதைப் பிரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, பென்சிலியம் க்ளவுகம் என்னும் நுண்ணுயிரியை இடவலம்புரி டார்ட்டாரிக் அமிலத்தில் (அமிலத்தின் அம்மோனிய உப்பு உருவில் எடுத்துக்கொள்ள வேண்டும்) வளர விட்டால் அது d-டார்ட்டாரிக் அமிலத்தை மட்டும் உண்டு வளர்கிறது. எஞ்சி நிற்பது 1-டார்ட்டாரிக் அமிலம். இம்முறை எளிதாக இருந்தாலும் ஒரு பகுதி இழக்கப்பட்டுக் கலவையின் பாதிப்பகுதி கிடைக்கிறது. சேர்மத்தின் , மட்டுமே ஒளிச்சுழற்சித் திறனை ஒளி முனைவுத் திருப்பு அளவி மூலம் கணக்கிடலாம். இக் கருவியில் இரு நைக்கால் முப்பட்டைகள் பொருத்தப் பட்டிருக்கும். திசைமுகி, ஆய்வி என்னும் இவ்விரண் டிற்கும் இடையே குழாய்க்கலன் அமைந்திருக்கும். சுழன்று இயங்கும் ஒரு தளத்தின்மீது ஆய்வி பொருத்தப்பட்டுள்ளது. திசைமுகி வழியாக உள் நுழைந்த ஒற்றை நிற ஒளி (monochromatic) திசை முகப்படுத்தப்பட்டுக் குழாய்க்கலனைக் கடந்து ஆய்வி யின் வழியே வெளியேறுகிறது. முப்பட்டைகளும், கலனும் ஒரே நேர்கோட்டில் அமைந்து ஒளியின் போக்கில் எம்மாற்றத்தையும் ஏற்படுத்தாதுள்ளன. ஆய்வியின் வழியே ஒளிக்கற்றையை நேரில் காணமுடி யும். இப்போது சுழல்தளத்தில் ஆய்வியின் கோண இருப்பு பூஜ்யமாகும். ச ஆய்வுக்குட்படும் சேர்மக் கரைசலைக் குழாயி னுள் காற்றுக் குமிழி இல்லாதவாறு நிரப்பி, அதன் பின் ஒற்றை-நிரல் ஒளியை உட்செலுத்த வேண்டும். இப்போது ஆய்வியின் மூலமாகக் கண்டால் ஒளி தடைப்பட்டுப் புலனாகாமலிருக்கும். முன்போலவே ஒளிக்கற்றைப் புவனாக ஆய்வியை வலஞ்சுழி யாகவோ இடஞ்சுழியாகவோ நகர்த்தும் வகையில்